பனி - வெண்புறா சிறகுகள் மேல் Shreveport, Louisiana USA 65-1128E 1நாம் தலை வணங்குவோம்: அன்புள்ள கர்த்தாவே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையைக் குறித்த வாக்குத்தத்தத்துக்காக இன்றிரவு நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். இங்கு ஒரு மகத்தான சத்திப்பில் நாங்கள் சந்திப்போம். அங்கு மகிழ்ச்சிக்கும் பாடல்களுக்கும் முடிவேயிராது. வரவிருக்கும் முடிவற்ற காலங்கள் முழுவதும் நாங்கள் உம்மை துதித்துக் கொண்டேயிருப்போம். இன்றிரவு இந்த கூட்டத்தை நீர் ஆசிர்வதிக்குமாறு வேண்டிக் கொள்கிறேம். இந்த கூடாரத்தையும், இதன் பணியாளர்களையும், போதகர்களையும், உடன் ஊழியர்களையும், உடன் போதகர்களையும் எல்லோரையும் ஆசிர்வதிக்குமாறு வேண்டிக் கொள்கிறோம். கர்த்தாவே இந்த கூட்டத்தில் பங்கு கொள்வதற்கென அநேக மைல்கள் தொலைவிலிருந்து இங்கு வந்துள்ள இவர்களை ஆசிர்வதிக்குமாறு வேண்டிக் கொள்கிறோம். அவர்கள் வீடு திரும்ப பயணப்படும் போது, உமது இரக்கத்தின் கரத்தை அவர்கள் மேல் வைப்பீராக. கர்த்தாவே, இதை அருளும். உம்மை ஆராதிப்பதற்கென, தேவனுடைய வீடு என்றழைக்கப்படும் இவ்விடத்தில் நாங்கள் இன்னும் அநேகமுறை கூடும்படி அருள் புரியும். தொலைபேசியின் மூலம் இன்று இணைக்கப்பட்டுள்ளவர்களை ஆசிர்வதிப்பீராக. இரட்சிக்கப்படாத ஒவ்வொரு நபரும் இன்றிரவு தங்கள் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவை கண்டுகொள்ள அருள்புரியும். வியாதியஸ்தரையும் அவதிப்படுகிறவர் அனைவரையும் சுகப்படுத்தும். பிதாவே, உமது ஊழியன் ஊழியத்திற்கென ஆஜாராகிறேன். இயேசுவின் நாமத்தில். ஆமென். 2கர்த்தர் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசிர்வதிப்பாராக. இன்றிரவு இங்குள்ளதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. புறாவின் சிறகுகள் மேல் என்னும் பாடலின் கடைசி பாகத்தை சகோ. எர்னி பாடிக் கொண்டிருந்த போது நான் உள்ளே நுழைந்தேன், அது அழகான கவிதை என்பது நிச்சயம், அது நேரத்துக்கேற்றது. எனவே இப்பொழுது, நாம் மிக நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். தேசத்தின் மற்ற பாகங்களிலிருந்து இங்கு இணைக்கப்பட்டுள்ளவர்களே, இன்றிரவு இக்கட்டிடத்தில் மிக நெருக்கமாக கூடியுள்ள ஜனங்களின் முகங்களில் உள்ள எதிர்நோக்கு தலைக்காண நீங்கள் இங்கிருந்தால் நலமாயிருக்கும்; அவர்களுக்கு அற்புதமான நேரம் உண்டாயிருக்கிறது. நாங்கள் சகோ. ஜாக் மூர், சகோதரி மூர், சகோ. நோயல், சகோ. போடலியர், சகோ. பிரவுன், இங்குள்ள கூட்டாளிகள் கூடாரத்திலுள்ள அனைவர், மற்றும் இங்கு பணிபுரிகின்றவர் அனைவருக்கும், நாங்கள் இங்கு வரும்படி எங்களுக்கு அழைப்பு விடுத்ததற்காக, எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். 3அது... நிஜமாக... ஒருவிதமான... எதேச்சையாக இணைந்தது என்று சொல்ல முடியாது. தேவனுடைய கரம் அதை வாய்க்கச் செய்தது. இது நிகழ்வதைக் குறித்து சில நாட்களுக்கு முன்பு இங்குள்ள ஒரு சகோதரன் ஒரு சொப்பனம் கண்டார். நான் இந்திய காலணிகளையும், வெள்ளை கால் சட்டையும் அணிந்து நின்று கொண்டிருந்தேன் என்று அவர் கூறினார். நான் இங்குள்ள கூட்டத்தை ஒழுங்கு செய்ய, சகோ. ஜாக்கை கொலரா - டோவிலுள்ள கார்சனில் சந்தித்த போது. அதேவிதமாக இந்திய காலணிகளையும், வெள்ளை கால் சட்டையும் அணிந்திருந்தேன். சகோ. லியோ, நீங்கள் கேட்டுக் கொண்டிருந்தால், உங்களையும் சில நிமிடங்கள் சந்தித்தேன். அப்பொழுது தான் அந்த விடத்தில் இந்த கூட்டத்தை ஒழுங்கு செய்ய வேண்டுமென்று முடிவு எடுக்கப்பட்டது. 4இது ஞாயிறு இரவு; உங்களில் அநேகர் வீடு திரும்புவதற்கென இன்றிரவு முழுவதும் காரோட்டி செல்ல வேண்டுமென்று நானறிவேன்; சிலர் காலை வரைக்கும் காரோட்டி செல்ல வேண்டும். நான் இரண்டு நாட்கள் காரோட்ட வேண்டும். எனவே, உங்களை நாங்கள் நீண்ட நேரம் பிடித்து வைத்திருக்கப் போவதில்லை. இதை நான் பழைய காலத்து இரவாக மாற்ற முயல்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பு சகோ. பிரவுன், சகோ ஜாக், மற்றும் நாமனைவரும் எவ்வாறு வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்பது வழக்கமோ, அதேவிதமாக இன்றிரவும் நாம் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்போம். பின்னால் உள்ளவர்கள் நான் பேசுவதைக் கேட்க முடிகிறதா? என் தொண்டை கரகரப்பாயிருப்பதால், நான் ஒலிப்பெருக்கியை தாழ்த்திக் கொண்டேயிருக்கிறேன். 5என்வே நாங்கள்... சிறிய ஒன்று. இந்த சிறு சம்பவம் நிகழ்ந்தது. சற்று முன்பு அவர்கள் என்னிடம் இதை கூறினர். ஸ்தாபனத்தை விட்டு வெளி வந்த ஒரு சகோதரன் - அவர் ஒருக்கால் இன்றிரவு இக்கூட்டத்துக்கு வந்திருக்கக் கூடும் - செய்தியைக் கேட்பதற்கென ஷ்ரீவ்போர்ட்டுக்கு வந்திருந்தாராம். அவர் வழித் தவறிப்போய், அவர் எங்கிருக்கிறார் என்று அறியாமல், கீழ் பட்டினத்துக்கு சென்றார். அங்கு ஜனங்கள் கூடியிருப்பதை அவர் கண்டு, இங்கு தான் பில்லி பிரான்ஹாம் பிரசங்கம் செய்யப் போகின்றாரா? என்று கேட்டாராம். அங்கிருந்த ஒருவர், ''இல்லை, இங்கு சகோ. பில்லி கிரஹாம் படக்காட்சியின் மூலம் பிரசங்கம் செய்யப் போகின்றார்'' என்றாராம். உடனே அவர், ''என்னை மன்னிக்கவும், நான் தவறான இடத்துக்கு வந்து விட்டேன்'' என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு வந்து விட்டார். அவர் வந்து கொண்டிருந்த போது, ''கர்த்தாவே, இப்பொழுது நான் எங்கே போக வேண்டும்?'' என்று கூறி, பெரிய தெரு வழியாக நடந்து கொண்டு வந்தாராம். அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை, அந்த தெருக்கோடியில் - டெக்ஸாஸ் தெருவில் - ஒரு பெரிய ஆலயம் உள்ளது. அந்த ஆலயத்தின் மேல் ஒரு பெரிய வெள்ளை சிலுவை வைக்கப்படடுள்ளது. கர்த்தர் அவரிடம் நடந்து கொண்டேயிரு என்றாராம்... அவர் அங்கு அடைந்த போது. அங்கு ஒரு... அவர், இங்கு தான் அந்த கூட்டம் நடைபெற வேண்டும். இங்கு நிறைய கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று எண்ணினாராம். அப்பொழுது மணப்பெண்ணும், மணமகனும் ஆலயத்திலிருந்து வெளியே வருவதை அவர் கண்டார். அந்த திருமணம் நேற்றிரவு நடந்தது. நானும் கூட அவர்கள் வெளியே வருவதைக் கண்டேன். கர்த்தர் அவரிடம், ''அது தான் இது. நீ ஸ்தாபனத்தை விட்டு வெளியே வந்து, மணவாளனுடன் செல்ல மணவாட்டியாய் பிரவேசித்து விட்டாய் எனறாராம்.'' 6நான் தெரு வழியாக வந்து கொண்டிருந்த போது என் மனைவியிடம் நாம் பக்கத்தில் வர வர, எவ்வாது சந்திரனும் நட்சத்திரங்களும், இந்த சிலுவையின் மேல் தொங்கிக் கொண்டிருப்பதைப் போல் காணப்படுகின்றன என்று குறிப்பிட்டேன். இப்படிப்பட்ட சிறு காரியங்களை நான் நோக்கும் போது. ஒருக்கால் நான் தேவன் பேரிலும் என் ஊழியத்தின் பேரிலும் கொண்டுள்ள நம்பிக்கைக்குப் புகழ்ச்சியாக அது அமைந்துள்ளது கன்று எண்ணுகிறேன். இன்றிரவு நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். டூசானில் விக்டர் லாடியூ என்னும் பிரெஞ்சுக்காரர் இருந்தார்... அவர், பிரான்சு நாட்டைச் சேர்ந்த உண்மையான பிரெஞ்சுக்காரர். இதைக் குறித்து அன்றொரு நாள் உங்களிடம் கூறினேன் என்று நினைக்கிறேன். நான் ஸ்தாபன முறைமைகளுக்கும், உண்மையான கிறிஸ்தவ மார்க்கத்துக்கும் இடையேயுள்ள வேறுபாடுகளை வலியுறுத்தி இவ்விரண்டையும் வெவ்வேறாக பிரித்துக் கொண்டிருந்தேன்... அப்பொழுது ஒரு மனிதன் என்னைப் பார்த்துக் கொண்டேயிருந்தார்... ஒரு பிரபலமான ஸ்தாபன பெந்தெகொஸ்தே சபையில் இதைக் குறித்து நான் ஒரு விதமான சிறு சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தேன். அப்பொழுது டானி ஹென்றி - அவர் ஏதோ ஒரு சினிமா நட்சத்திரத்தின் ஒன்றுவிட்ட சகோதரன் என்று நினைக்கிறேன், அப்படி ஏதோ ஒன்று - அவர் ஒரு பாப்டிஸ்டு அவர் மேடைக்கு ஓடி வந்து என் தோள்களின் மேல் கை போட்டும் - சகோ. பிரான்ஹாமே, இது தேவ தூஷணமாகத்தென்படாது என்று எண்ணுகிறேன். இது வெளிப்படுத்தின விசேஷம் 23ம் அதிகாரமாக இருக்கலாம் என்றார். அவர், ஏதோ ஒன்றைக் கூற முயன்ற போது, அந்நிய பாஷையில் பேசத் தொடங்கினார். இதை மூன்று பிரெஞ்சுக்காரர்கள்... ஒரு பிரெஞ்சு ஸ்திரீ (பெரிய தேக அமைப்பு கொண்டவள், கருமை நிறமுடையவள், லூசியானாவில் வசிக்கிறாள். ஒருக்கால் இன்றிரவு அவள் இங்கிருக்கலாம்.) அவர் பேசினதை ஒரு தாளில் எழுதினாள். பிறகு விக்டர் லாடியூ என்னும் அந்த போதகரும் அதை குறித்துக் கொண்டார். இருவரும் தாங்கள் எழுதின குறிப்புகளை பின்பு ஒப்பிட்டு சரி பார்த்துக் கொண்டனர். பழுப்பு நிறத் தலைமயிர் கொண்ட ஒருவர் பின்னால் நின்று கொண்டிருந்தார் - அவரால் இயன்றவரை பின்னால். அவர் முன்னால் நடந்து வந்து, இவர்கலிருவரும் எழுதிவைத்த குறிப்புகளைக் காண விரும்பினார். அவர், ஐ.நா. சபையில் பிரெஞ்சு மொழி பெயர்ப்பாளர். இவர்கள் மூவர் எழுதின குறிப்புகளும் ஒன்றுகவே இருந்தன. அதன் அர்த்தம் இது. இந்த கடினமான வழியை நீ தெரிந்து கொண்டதனால்... நீயே அதை தெரிந்து கொண்டாய், நீ அதை ஏற்றுக் கொண்டாய்... உன் சொந்த தெரிந்து கொள்ளுதலின்படி, அதை தெரிந்து கொண்டாய் (அது நமக்கு நன்றாகத் தெரியும், மோசே தானாகவே அதை தெரிந்து கொள்ள வேண்டியதாயிருந்தது.) இதுவே பிழையற்ற, சரியான வழி, ஏனெனில் அது என் வழி. என்னே ஒரு மகிமையான தீர்மானத்தை நீ செய்திருக்கிறாய்!அதன் விளைவாக பரலோகத்தின் ஒரு பெரிய பங்கு உனக்காக காத்திருக்கிறது. இது தன்னில் தானே தெய்வீக அன்பில் மகத்தான வெற்றியை அளிக்கும். மூன்று பேரும் எழுதின குறிப்புகள் ஒன்றாகவே இருந்தன. என் வேதாகமத்தில் அதை வைத்திருந்ததாக எனக்கு ஞாபகம் (அதை தேடிப் பார்த்தேன், காணவில்லை) அந்த மூலப்பிரதியை. 7டானி ஹென்றிக்கு பிரெஞ்சு மொழி தெரியாது... அவனுக்கும் என்னைப் போல் சரியான ஆங்கிலமே தெரியாது. அப்படியிருக்க பிரெஞ்சு மொழி அவனுக்கு எப்படி தெரியும்? அங்கு நீங்கள் கவனிப்பீர்களானால், பிரெஞ்சு மொழியில் அவர்கள் வினையெச்சத்துக்கு (adverb) முன்பாக வினைச் சொல்லை (verb) உபயோகிக்கின்றனர். அந்த மூவர் மொழி பெயர்த்தவை ஒன்றகவே இருந்தன. சில நாட்களுக்கு முன்பு டானி ஹென்றி... டானி ஒருக்கால் இன்று கேட்டுக் கொண்டிருக்கலாம். விக்டர் லாடியூவும் கூட, ஏனெனில் அவர் டூசானில் உள்ளதாக கேள்விப்பட்டேன். சகோ. கிரீன் போதகராயுள்ள டூகான் கூடாரத்தைச் சேர்ந்தவர்களே, பார்க் அவின்யூவின் அடிவாரத்தில்; அது நெடுஞ்சாளை எண் 80ஐ இந்த பக்கம் வந்தடைகிறது. அந்த விடத்தில் விக்டர் லாடியூ கூடாரக் கூட்டம் நடத்துவதாக கேள்விப்பட்டேன். நாளை இரவும், அதற்கடுத்த இரவும் நீங்கள் அங்கு செல்வீர்களானால் - அவர் எவ்வளவு நாட்கள் இருப்பாரோ அவ்வளவு நாட்கள் - அவர் பேசுவதைக் கேட்க இங்கு செல்லுங்கள். டானி ஒருக்கால் அவருடன் கூட இருக்கலாம், இன்றிரவு அவர்கள் கூடாரத்திலிருந்து இதை கேட்டுக் கொண்டிருக்கலாம், எனக்குத் தெரியாது. 8இந்து சம்பவம் நடந்தவுடனே, டானி எருசலேமுக்குச் சென்றார். உயிர்த்தெழுதலுக்கு முன்பு இயேசுவின் உடல் கல்லறையில் கிடத்தப்பட்டிருந்த கற்பலகையின் மேல் அவர் படுத்திருந்ததாகக் கூறினார். அப்பொழுது திடீரென்று அவருக்கு என் நினைவு வந்ததாம். அவர் அழுது கொண்டே கல்லறைக்கு வெளியே ஓடி வந்து, வெளியே நடந்து சென்றதாகக் கூறினார். அவர் ஏவப்பட்டார்... அவர் பாறைகளைக் கொண்டு பொருட்களை உண்டாக்குபவர். இயேசுவின் சிலுவை நிறுத்தப்பட்டிருந்ததாக, அவர்கள் கூறின இடத்துக்கு அவர் சென்று... ஒரு அங்குல சதுரம் அளவுக்கு அங்கிருந்த பாறையிலிருந்து உடைத்து, தன் ஜேபியில் போட்டுக் கொண்டு, அதை வீட்டுக்குக் கொண்டு வர வேண்டுமென்று அவர் மனதில் எழுந்தது. அவர் அப்படி செய்த போது, ஏதோ ஒன்று அவரிடம், ''இதைக் கொண்டு சகோ. பிரன்ஹாமுக்கு, ஒரு ஜதை சட்டையின் முன் கை இணைப்பை (cuff links) செய்து கொடு'' என்றதாம். எனவே அவர் அந்த பாறையை அமிலத்தில் போட்டு, சுண்ணாம்பு பாறையைப் போல் காணப்படும் அந்த பாறையின் நிறத்தை இரத்த நிறப் பாறையின் நிறத்துக்கு மாற்றினார். அதைக் கொண்டு அவர் முன் கை இணைப்பை உண்டாக்கினார். அவர் அதை என்னிடம் கொடுத்த போது, அவர் கவனிக்கவில்லை. அந்த இரண்டு முன்கை இணைப்புகளின் நடுவில், அந்த நேரான குறுகிய கோடு ஓடுகின்றது. அதை இன்றிரவு நான் அணிந்து கொண்டிருக்கிறேன் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கும் போது, அது என் மேல் இருக்கும். பாருங்கள். சொட்டும் இரத்தத்தைப் போன்று இரத்த நிறமுள்ள கல்லும், அதில் ஓடிக் கொண்டிருக்கும் நேரான, குறுகிய கோடும். அவருடைய தீர்க்கதரிசனம் உரைத்தது போன்றே: நேரான குறுகிய வழி. பாருங்கள், அந்த தீர்க்கதரிசனத்தில். அதை நான் அவருக்கு காண்பித்தேன். டானி, இன்றிரவு நீங்களோ அல்லது சகோ. லாடியூவோ கேட்டுக் கொண்டிருப்பீர்களானால், நாங்கள் வியாதியஸ்தர்களுக்கு பழமை நாகரீகம் கொண்ட விதத்தில் ஜெபிக்கும் இரவாய் இது இருக்கும். நான் இந்த நேரான, குறுகிய வழியில், சுவிசேஷத்தின் வழியில், வார்த்தையின் வழியில் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடன் நடந்து கொண்டிருப்பதற்காக எனக்கு மிக்க மகிழ்ச்சி. 9தேவன் உங்கள் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக, பேசுவதற்கு நீங்கள் மிகவும் அருமையானவர்கள். நான் நீண்ட நேரம் உங்களிடம் பேசி, உங்களை நீண்ட நேரமாக இங்கு வைத்திருக்கப் போகின்றேன். ஜெபம் செய்யப்படுவதற்காக இங்கு முன்னூறு முதல் நானூறு பேர்கள் உள்ளதாக பில்லி என்னிடம் கூறினான். எனவே, கூடுமானவரை நமது செய்தியை நான் வேகமாக பிரசங்கித்து விட்டு, அதன் பிறகு வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்போம். அரிசோனாலிலுள்ளவர்களே, அடுத்த சனி இரவு நாங்கள் (அந்த நகரத்தின் பெயர் ஞாபகத்துக்கு வருவதேயில்லை) அரிசோனாவிலுள்ள யூமாவில் இருப்போம். அதன் பிறகு ஞாயிறு காலை கலிபோர்னியாவுக்கு சென்று, லாஸ் ஏஞ்சலிசுக்கும் இன்னும் அங்குள்ள வேறு சில இடங்களுக்கும் செல்வோம். இன்றிரவு, வேதத்திலிருந்து ஒரு பொருளை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். 10இன்று நான் மாரிசன்ஸ் உணவு விடுதிக்கு சென்றிருந்தேன் - சகோ. ஜாக்கும் அவருடைய மனைவியும், நானும் என்னடைய மனைவியும். சிறிது நேரம் ஒருமித்து கழிக்கலாமென்று எண்ணி, நாங்கள் மாரிசன்ஸ் உணவு விடுதிக்கு சென்றிருந்தோம். நாங்கள் சில நாட்களாக, இப்படி வெளியே செல்லவில்லை, ஸ்திரீகளும் இவ்வாறு ஒன்றுகூடி சில நாட்களாயிற்று. அங்கு ஒரு வாலிபன் என்னிடம் வந்தார். அவருடைய பெயர் கிரீன். அவ பெர்ரி கிரீனின் தகப்பனார். இவர், சகோ. பிரான்ஹாமே, நீங்கள் அன்றொரு இரவு *ஜானிபின்னைக் (Johnny Pin) குறித்து பேசினீர்களே, உங்களுக்கு அதைக் கொண்டு வந்திருக்கிறேன் என்றார். அது என்ன? நான் பாபிபின் (Bobby Pin) என்று கூறுவதற்கு பதிலாக இப்படி கூறிவிட்டேன். அவர், அதை என்னிடம் கொடுத்தார். எனவே ஸ்திரீகளே, இது ஜானி பின் இது உங்கள் தலைமயிரைப் பொருத்த உதவாது. அவர் வேதாகமத்தின் பக்கங்களை ஒன்றாக சேர்க்க அநேக ஆண்டுகளாக இதை உபயோகித்து வருவதாகக் கூறினார். எனவே, ''நான் உங்களுக்கு நிஜமான ஜானி பின்னைக் கொடுக்கிறேன்'' என்றார். எனவே, சகோ. க்ரீன் நீங்கள் இங்கு எங்காகிலும் இருந்தால், அல்லது இதைக் கேட்டுக் கொண்டிருந்தால், அந்த ஜானி பின் மிகவும் அழகான ஒன்று. அது அழகாக இணைக்கிறது. 11இப்பொழுது நாம் நேரடியாக வேதாகமத்துக்கு செல்வோம். இப்பொழுது நீங்கள் என்னுடன் கூட 55ம் சங்கீதத்துக்கு திருப்புங்கள், பிறகு மத்தேயு 3ம் கூட. இன்றைய என் பொருள் சகோ. எர்னி பாடின, பனி - வெண்புறா சிறகுகள் மேல் என்பதாம். இங்கு நான் எழுதிவைத்துள்ள எல்லா குறிப்புகளையும் வேத வசனங்களையும் குறிப்பிட என்னால் இயலாது. அவைகளில் சிவவற்றை நான் விட்டுவிடுகிறேன். ஏனெனில், இந்த செய்தியை அளிப்பதாக நான் வாக்கு கொடுத்தேன். கர்த்தருக்கு சித்தமானால் அடுத்த சனி இரவு யூமாவில், ''எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்வதற்கான நிபந்தனைகள்'' என்பதைக் குறித்து பேச விரும்புகிறேன். 12சங்கீதம் 53ல்... உங்கள் மன்னிப்பை கோருகிறேன், சங்கீதம் 55. தேவனே, என் ஜெபத்தைக் கேட்டருளும்; என் விண்ணப்பத்திற்கு மறைந்திராதேயும். எனக்குச் செவி கொடுத்து உத்தரவு அருளிச் செய்யும்; சத்துருவினுடைய கூக்குரலினிமித்தமும், துன்மார்க்கர் செய்யும் இடுக்கத்தினிமித்தமும் என் தியானத்தில் முறையிடுகிறேன். அவர்கள் என்மேல் பழிசாட்டி, குரோதங் கொண்டு, என்னைப் பகைக்கிறார்கள். என் இருதயம் எனக்குள் வியாகுலப்படுகிறது; மரணத்தகில் என்மேல் விழுந்தது. பயமும், நடுக்கமும் என்னைப் பிடித்தது; அருக்களிப்பு என்னை மூடிற்று. அப்பொழுது நான்: ஆ, எனக்குப் புறாவைப் போல் சிறகுகள் இருந்தால், நான் பறந்து போய் இளைப்பாறுவேன். நான் தூரத்தில் அலைந்து திரிந்து வனாந்தரத்தில் தங்கியிருப்பேன் (சேலா). (சேலா என்றால் - ஆமென் என்று பொருள்.) சங்.55:1-7, 13தாவீது வனாந்தரத்தில் பிரியம் கொண்டவன். அவன் துக்கமடைந்து ஜனங்கள் அவனை நம்பாமல், சத்துருக்கள் அவன் மேல் வந்த போது, எனக்குப் புறாவைப் போல் சிறகுகள் இருந்தால், நான் பறந்து போய் இளைப்பாறுவேன் என்றான். எத்தனை முறை நானும் அவ்வாறே எண்ணியிருக்கிறேன்! என் சுவற்றில் தொங்குகின்ற துப்பாக்கியையும் என் முகாம்பையும் எடுத்துக் கொண்டு வனாந்தரத்துக்கு சென்று திரும்பி வராமலேயிருந்தால் நலமாயிருக்கும் என்று எண்ணியதுண்டு. நான் கர்த்தரிடம், அந்த நாளைக் காண உயிர் வாழ்வேன என்று கேட்டிருக்கிறேன்... எனக்கு அடக்க ஆராதனையில் பங்குகொள்ள விருப்பமில்லை. நான் மாத்திரம் எங்காகிலும் காட்டுக்குச் சென்று, மரத்தின் மேல் என் பிளாண்டியை (Blondie) சாய்த்து வைத்தால்... என்று கூறியிருக்கிறேன். ''பிளாண்டி'' என்பது என் துப்பாக்கி. என்னை மன்னிக்கவும். என் மனைவி இங்கு அமர்ந்திருப்பதால் அவ்வாறு கூறினேன். ஒரு சகோதரன் அநேக ஆண்டுகளுக்கு முன்பு, இந்த துப்பாக்கியை எனக்குக் கொடுத்தார். நான் அதைக் கொண்டு, ஒரு குறி கூட தவறாமல், ஐம்பத்தைந்து வேட்டை மிருகங்களை கொன்றிருக்கிறேன். அவைகளில் சில எழுநூறு, எண்ணூறு கெஜம் தூரத்தில் இருந்தன. இதை நான் பிளாண்டி என்ற ழைக்கிறேன், ஏனெனில் என் மனைவி ஒரு, ''பரூனட்''. நான் அவளைக் காட்டிலும் துப்பாக்கியிலேயே அதிக கவனம் செலுத்துவதாக அவள் கூறினாள். ஆனால்... என் துப்பாக்கியை மரத்தின் மேல் சாய்த்து வைத்து. ''கர்த்தாவே, என்றாகிலும் ஒருநாள் என் மகன் ஜோசப் அதை கண்டு பிடிக்கட்டும். நான் புறாவின் சிறகுகளைக் கொண்டு பறந்து செல்ல விருப்புகிறேன்'' என்று கூற எனக்கு விருப்பம். ஒருமுறை நான் மலையின் மேல் கழுகை கவனித்து, அது பறந்து செல்வதைப் பார்த்த போது (இதைக் குறித்த என் வரலாறு உங்களுக்குத் தெரியும்) நான், ''ஆண்டவரே, இங்கிருப்பது நல்லது, பேதுரு, ' நாம் மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்று கூறினது போன்று என்று எண்ணினேன். ஆனால், மலையின் அடிவாரத்தில் வியாதியஸ்தர்களும் அவதிப்படுவோரும் காத்திருக்கின்றனர், இழக்கப்பட்டவர்களும் மரித்துக் கொண்டிருக்கிறவர்களும் காத்திருக்கின்றனர். என்றாவது ஒரு நாள்... வெள்ளை - கழுகின் சிறகுகள் கீழே இறங்கி வந்து நம்மை சுமந்து சென்றுவிடும். 14இப்பொழுது மத்தேயு;3:16. நான் 16,17 வசனங்களைப் படிக்க விரும்புகிறேன்: இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கறையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப் போல் இறங்கி தம்மேல் வருவதைக் கண்டார். அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது. (வேறு வார்த்தைகளில் கூறினால், இவரில் வாசமாயிருக்கப் பிரியமாயிருக்கிறேன்''). மத்.3:16-17. 15இந்த பறவையைக் குறித்து நாம் சிறிது நேரம் பேசு விரும்புகிறோம். புறா எப்பொழுதுமே எனக்குப் பிரியமான பறவைகளில் ஒன்றாக இருந்து வந்துள்ளது. புறாவைக் குறித்து சிந்திக்கும் போது, அது உண்மையில்... மணிப்புறாவும் அதே பறவை தான், அது வீட்டில் வளர்க்கப்படும் புறா. இவ்விரண்டும் ஒரே இனத்தை சேர்ந்தவை. நான் புத்தகங்களைத் தேடிப் பார்த்தேன், இவ்விரண்டுமே ஒரே இனத்தை சேர்ந்தவை. இவைகளின் பழக்கங்கள் தலை சிறந்தவை. சில ஆண்டுகளுக்கு முன்பு, சகோ. மூருடன் இங்கு நடத்திய ஒரு கூடாரக் கூட்டத்தில் நான், ''ஆட்டுக்குட்டியும், புறாவும்'' என்பதன் பேரில் பிரசங்கம் செய்தேன். உங்களெல்லாருக்கும் அது நினைவிருக்கும் என்று எண்ணுகிறேன்; எப்படி புறா நாம் பெற்றுள்ள பறவைகள் அனைத்திலும் மிக தூய்மையானதென்றும், ஆட்டுக்குட்டி நாம் பெற்றுள்ள மிருகங்கள் அனைத்திலும் மிகவும் சாந்த குணமுள்ளதென்றும். இவ்விரண்டுமே பலி செலுத்தப்படக் கூடிய பறவையும் மிருகமுமாம். 16இயேசு ஆட்டுக் குட்டியென்றும், தேவன் புறாவென்றும் இங்கு எவ்வளவு அழகாக வர்ணிக்கப்பட்டுள்ளது. புறா ஒரு ஓநாயின் மேல் உட்காராது. ஏனெனில் ஓநாயின் தன்மை அதற்கு உகந்ததல்ல. அது நாயின் மேலும் உட்காராது, ஏனெனில் நாயின் தன்மையும் அதற்கு உகந்ததல்ல, அது ஆட்டுக் குட்டியாகவே இருக்க வேண்டும். இவ்விரண்டு தன்மைகளும் ஒன்றாயிருக்க வேண்டும். அவ்வாறே நாமும் இருக்க வேண்டும். நமது தன்மையும் மூர்க்கமான பாவி என்பதிலிருந்து ஆட்டுக் குட்டியின் சாந்த குணமாக மாற வேண்டும். நீங்கள் புறாவையும், ஆட்டுக் குட்டியையும் கவனித்தீர்களா? கவனியுங்கள், ஆட்டுக்குட்டி தனக்கிருந்த எல்லாவற்றையும் புறாவுக்கு விட்டு கொடுத்து விட்டது. புறா அதை எங்கு நடத்தி சென்றது என்று காணுங்கள், நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் அறையப்படுவதற்கு. இப்பொழுது புறா.... தேவன் தமது குமாரனுக்கு ஒன்றை எடுத்துக்காட்டாய் அளிக்க விரும்பினார். குமாரனுக்கு பூமியிலேயே மிகவும் தூய்மையானதும், சாந்த குணமும் நிறைந்த மிருகம் எடுத்துக்காட்டாய் விளங்கினது. அது பூமியிலே சஞ்சரிக்கும் மிருகம். ஆனால், பரலோகத்திலுள்ள தேவன் தமக்கு எடுத்துக் காட்டாய். ஆகாயத்தில் பறக்கும் பறவைகளிலேயே மிகவும் தூய்மையான பறவையாகிய புறாவை அளித்தார். 17புறாக்களில் வெவ்வேறு வகையுண்டு. நமது காட்டுப் புறாக்கள் ஒருவகை சாம்பல் நிறத்தோற்றம் கொண்ட பறவை. பிறகு துக்கம் கொண்டாடும் புறா ஒன்றுண்டு, பிறகு மாலை புறா. 'சோனோரா' புறா என்று அழைக்கப்படும் புறாவை நாம் வீட்டில் வளர்க்கிறோம். அது சாம்பல் நிறமுள்ள சிறு பறவை. இதன் சிறகுகளில் சிகப்பு கோடுகள் இருக்கும். வெவ்வேறு வகையான புறாக்கள் உண்டு. அவை வெவ்வேறு நிறங்களைக் கொண்டுள்ளன. அவ்வாறே மணிப்புறாக்களிலும். புறா மிகவும் வினோதமாக உண்டாக்கப்பட்ட ஒரு பறவை. அதன் பழக்கம் என்னவெனில், அதனால் அசுத்தமான எதையுமே தின்ன முடியாது. அதனால் முடியவே முடியாது. ஏனெனில் அதற்காக அது உண்டாக்கப்படவில்லை. 18புறா தேவனுக்கு அடையாளமாயுள்ளதென்றும், காகம் மாய்மாலக்காரனுக்கு அடையாளமாயுள்ளதென்றும் நான் அடிக்கடி கூறி வந்திருக்கிறேன். ஒரு காகம் செத்து அழுகிப்போன பிணத்தின் மீது உட்கார்ந்து கொண்டு நாள் முழுவதும் அதை தின்று விட்டு, வயலுக்கு பறந்து சென்று புரறாவுடன் கோதுமையைத் தின்ன முடியும். புறா கோதுமையைத் தின்ன முடியும், ஆனால் செத்த பிணத்தை தின்ன முடியாது பாருங்கள்? இதனால் முடியவே முடியாது. இதன் வயிற்றுக்குள் அதை செலுத்த முடியாது. அதனால் ஏன் இப்படி செய்ய முடியாது என்று நான் வியந்ததுண்டு. இரண்டுமே ஆகாயத்துப் பறவைகள் இப்படியிருக்க, ஏன் அவைகளின் உடலமைப்பிலுள்ள வித்தியாசமே இதற்கு காரணம். அப்படித்தான் ஒரு உண்மையான கிறிஸ்தவனும் இருக்கிறான்.... ஒரு ஸ்தாபனக் கிறிஸ்தவன் எதை வேண்டுமானாலும் ஏற்துக் கொள்வான். ஆனால் உண்மையான, மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனோ உலகத்தின் காரியங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. அவன் வித்தியாசமாக உட்டாக்கப்பட்டிருக்கிறான். 19புறாவுக்கு பித்த நீர் கிடையாதென்று அறிந்து கொண்டேன். புறாவுக்குள் பித்த நீர் கிடையாது, ஏனெனில் அது இதற்கு அவசியமில்லை. அவ்வாறே ஒரு கிறிஸ்தவனும் இருக்கிறான், அவனுக்கு எந்தவிதமான கசப்பும் அவசியமில்லை, பாருங்கள். ஏனெனில், அவனால் தேவனுடைய ஆகாரத்தை மாத்திரமே உண்ண முடியும் அதை ஜீரணிக்க கசப்பு அவசியமில்லை. அதற்கு அன்பு அவசியம்... பாருங்கள், எனவே அவன்.... அந்த ஆகாரத்தை ஜீரணிக்க அவர்கள், ''ஓ'' என்றும் ''நல்லது...'' என்றும் கூறி அதனுடன் கருத்து வேற்றுமை கொண்டுள்ளனர். ஆனால் அன்பு எப்பொழுதுமே தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்கிறது. இப்பொழுது, அதற்கு பித்த நீர் கிடையாது. எனவே அதனால் முடியாது... கெட்டுப்போன எதையுமே தின்பதென்பது அதன் தன்மைக்கு விரோதமானது. இது தின்று விட்டால், அந்த ஆகாரம் அதைக் கொன்று விடும். ஆனால் அத்தகைய ஆபத்து எதுவுமில்லை, ஏனெனில், அது அந்த ஆகாரத்தை தின்னாது (உ, ஊ) ஏனெனில் அதற்கான பசி (appetite) அதற்கு கிடையாது. 20அப்படித்தான் ஒரு உண்மையான கிறிஸ்தவனும் இருக்கிறான். ஒரு உண்மையான கிறிஸ்தவன் பேரில் எந்த பாவமும் எண்ணப்படுவதில்லையென்று உங்களுக்குத் தெரியுமா? எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான் என்று தாவீது கூறியுள்ளான் (சங்;32:2). நீங்கள் ஆட்டுக் குட்டியானவர் இரத்தத்தினால் கழுவப்படும் போது (பாவனை விசுவாசத்தின் மூலம் அல்ல, ஆனால் உண்மையில் ஆட்டுக் குட்டியானவரின் இரத்தத்தினால்), நீங்கள் செய்த எந்த பாவத்தையும் தேவன் உங்கள் கணக்கில் எடுப்பதில்லை. ஏனெனில், நீங்கள் இரத்தத்தின் கீழ் இருக்கிறீர்கள்; அவர் அதைக் காண்பதில்லை. இரத்தம் தோய்ந்த பலி ஒன்றுள்ளது. உங்களை அவர் காணும் ஒரேவிதம், உலகத்தோற்றத்துக்கு முன்னால் உங்கள் பெயரை ஆட்டுக் குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் எழுதின போது உங்களை எவ்வாறு கண்டாரோ, அதேவிதமாக. அப்படித்தான் அவர் காண முடியும், ஏனெனில் நீங்கள் செய்த அனைத்தினின்றும் மீட்கப்பட்டிருக்கிறீர்கள் நீங்கள் ஆட்டுக் குட்டியானவரின் இரத்தத்தால் கழுவப்பட்டிருக்கிறீர்கள். எனவே, உங்கலில் கசப்பு எதுவும் கிடையாது, உங்களில் அசுத்தமான பழக்கம் எதுவும் கிடையாது. ஆட்டுக் குட்டியானவரின் இரத்தம் அதை செய்தது. பாவ நிவாரண பலி அங்கு கிடத்தப்பட்டு, அது உங்களுக்காக காத்திருக்கும் போது, தேவன் பாவத்தை உங்கள் கணக்கில் சுமத்த முடியாது. நீங்கள் நல்லது, ''சகோ. பிரான்ஹாமே, நான் விரும்பும் எதையும் செய்ய அது எனக்கு நிறைய இடம் தருகிறது'' எனலாம். ஆனால், ஒரு மனிதன் உண்மையில் இயேசு அவனுக்காக செய்துள்ளதை கண்ட பின்பும் அவருக்கு விரோதமாக எதையாகிலும் செய்வானானால், அவன் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள வில்லையென்று அது காண்பிக்கிறது. 21என் மனைவி பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவள் எனக்கு பத்து வயது இளையவள். ஆனால் அவளுக்கு என்னைப் போல் தலை நரைத்துள்ளது. அதற்கு காரணம் என்னவெனில் அவள் எனக்கும், வெளிப்புற உலகிற்கும் இடையே நின்று வந்திருக்கிறாள். நான் வெளிநாடு செல்லும் போது, என் குடும்பத்தினரை என்னைச் சுற்றிலும் கூட்டி, ''திருமதி பிரான்ஹாமே. இங்கு பார். நீ திருமதி பிரான்ஹாம் என்பதை உணர விரும்புகிறாய். நான் வெளிநாடு சென்றிருக்கும் போது, என்னைத் தவிர வேறே கணவர்கள் உனக்கு உண்டாயிருக்க வேண்டாம், வேறு எந்த மனிதனைப் பார்த்தும் கண்ணை சிமிட்டாதே. வேறு யாருடனும் சல்லாபம் செய்யாதே. அப்படி செய்தால், நான் திரும்பி வரும்போது, உன்னை விவாகரத்து செய்து விடுவேன்'' என்று கூறுவது ஒரு நல்ல குடும்ப வாழ்க்கைக்கு தகுதியாயிருக்குமல்லவா? அவளும் என்னை நோக்கி, ''இப்பொழுது, என் நல்ல மனிதரே, நானும் உம்மிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன், நீர் வெளிநாட்டில் உள்ளபொழுது, வேறெந்த பெண்ணுடனும் தொடர்பு கொள்ளக்கூடாது. நீர் இதை, அதை செய்யக்கூடாது. அப்படி செய்தால், நீர் வீடு திரும்பும் போது, உம்மை விவாகரத்து செய்து விட்டதாக எண்ணிக்கொள்ளும்'' என்பாள். அது மிகவும் அன்புள்ள குடும்பமாக இருக்கும் அல்லவா? பாருங்கள்? நான் உண்மையில் அவளை நேசித்தால்.... நான் வழுக்கிப்போய் தவறு ஏதாகிலும் செய்ய நேரிட்டால், அவள் என்னை மன்னித்து விடுவாள் என்னும் நம்பிக்கை எனக்குண்டு, ஏனெனில் அவள் என்னை நேசிக்கிறாள், அவ்வாறே அவள் தவறு செய்ய நேரிட்டால், அவளை நான் நேசிக்கும் காரணத்தால் அவளை நிச்சயமாக மன்னித்து விடுவேன். நான் அவளை அவ்வாறு நேசிக்கும் வரைக்கும், அவளுக்கு கவலையே இல்லை. அவள் என்னை மன்னித்து விடுவாள் என்றாலும், அவளை நான் எக்காரணத்தைக் கொண்டும் புண்படுத்த மாட்டேன். அப்படி செய்ய நேரிட்டால். நான் உலகிலேயே மிகப்பெரிய குற்றவாளி என்னும் உணர்வு எனக்குண்டாகி, அவளை சந்திக்கும் மாத்திரத்தில் இதைக் குறித்து அவளிடம் கூற துடியாய் துடித்துக் கொண்டிருப்பேன். ஏனெனில், அவளை நான் நேசிக்கிறேன். நல்லது. அது.... மாமிசப்பிரகாரமான அப்படிப்பட்ட அன்பினால் அவளை நான் அவ்வாறு நேசித்தால். இயேசு கிறிஸ்துவின் பேரிலுள்ள என் தெய்வீக அன்பு எப்படிப்பட்டதாயிருக்கும்? 22நான் ஒரு சிகரெட் புகைக்க நேரிட்டால், அப்படி என் வாழ்க்கையில் நான் செய்ததே கிடையாது; அப்படி நான் செய்தாலும், அவர் என்னை மன்னித்து விடக்கூடும். என் வாழ்க்கையில் நான் மது அருந்தினது கிடையாது; அப்படி நான் செய்தாலும், அவர் என்னை மன்னித்து விடுவாரென்று விசுவாசிக்கிறேன். ஆனால் நான் அவரை மிகவும் அதிகமாக நேசிப்பதால் (தேவனே, எனக்குதவி செய்யும்) அப்படிப்பட்ட ஒன்றையும் நான் செய்ய விரும்புவதில்லை பாருங்கள். ஏனெனில், அவரை நான் நேசிக்கிறேன். இந்த ஆவல் என்ன விட்டுப்போய் விட்டது. அவர் என்னை காகத்திலிருந்து புறாவாக மாற்றிய போது, அது வித்தியாசத்தை உண்டுபண்ணி, அந்த பசி என்னை விட்டுப்போய் விட்டது. அதை நான் செய்க நோக்கமுடையவனா யிராதபடியால், பாவம் கணக்கில் எண்ணப்படுவதில்லை, அதை செய்ய வேண்டுமென்பது எனக்குள் இல்லவே இல்லை. 23புறாவைக் குறித்து வேறொரு பெரிய காரியம். அது ஒரு விசித்திரமான பறவை. நீங்கள் எல்லா பறவைகளையும் கண்டதுண்டா.... எனக்குப் பிரியமான பறவைகளில் ஒன்று ராபின் {robin) என்னும் பறவை, பையன்களாகிய நீங்கள் என் ராயின்களை சுடுவதை விட்டு விடுங்கள். அதை நீங்கள் செய்ய வேண்டாம், அதற்கு சிவந்த மார்பு எப்படிக் கிடைத்தது தெரியுமா? ஒரு நாள் ஒரு மனிதர் சிலுவையில் மரித்துக் கொண்டிருந்தார். யாரும் அவருக்கு உதவி செய்யவில்லை. தேவனும் அவரைக் கைவிட்டு, அவர் மரித்துக் கொண்டிருந்தார். அவருடைய கைகளும், பாதங்களும் ஆணிகளால் கடாவப்பட்டிருந்தன, அவருடைய விலாவிலிருந்து இரத்தம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. அவருடைய சிரசில் முட்கிரீடம் சூடப்பட்டிருந்தது. அவருடைய முகத்தில் இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. அப்பொழுது, பழுப்பு நிறமுள்ள ஒரு சிறு பறவை அந்த வழியாக பறந்து வந்தது. அது அந்த காட்சியைக் கண்டது... அது, இதுவரை கண்டதிலேயே மிகவும் பரிதாபமான காட்சி என்று எண்ணினது. இது சிறு பறவை என்று அறிந்திருந்தது, ஆயினும் அவருடைய கைகளில் கடாவப்பட்டிருந்த கொடூர பெரிய ரோம ஆணிகளை அது கண்டபோது, அங்கு பறந்து சென்று தன் சிறிய அலகினால் அந்த ஆணிகளை வெளியே இழுக்க முயன்றது. அப்பொழுது அதன் மார்பில் இரத்தம் படிந்து அன்று முதல் அது சிகப்பாயுள்ளது. என் மார்பிலும் அவருடைய இரத்தம் கேடயமாக படிந்து, அவரை நான் சந்திக்கும் போது, அது என்னை பாதுகாக்க வேண்டுமென்று விரும்புகிறேன். எனக்கு இந்த சிறிய ராபினைப் பிடிக்கும். 24உங்களுக்குத் தெரியுமா, சிறு ராபின் பறவை குளிக்க வேண்டும். ஆனால், புறா குளிக்க வேண்டிய அவசியமில்லை. இல்லவே, இல்லை. அதனுள் உள்ள ஒரு விதமான எண்ணெய், அதை எண்ணெயிட்டு உள்ளும் புறமும் சுத்தமாக வைக்கிறது. உங்களுக்கு அது தெரியுமா? புறாவுக்கு அந்த எண்ணெய் உண்டு. புறா தனக்குத் தானே எண்ணெயிட்டுக் கொள்கிறது. நீங்கள் புறாவை எப்பொழுதாவது கையிலெடுத்து அதன் மேலுள்ள மணத்தை முகர்ந்ததுண்டா? அது அதனுள் உண்டாகும் எண்ணெய். அதன் உடலில் எண்ணெய் சுரபி உள்ளது. அது வெளிப்புறத்திலுள்ள இறகுகளை எப்பொழுதும் சுத்தமாக வைத்துள்ளது. அது உள்ளும், புறமும் சுத்தமாயுள்ளது. அது உண்மை. அது அற்புதமான சிறு பறவை. லூயிசியானாவில் அவைகளை வேட்டையாட உங்களுக்கு அனுமதியுண்டு என்று எனக்குத் தெரியும். அப்படித்தான் என்று நினைக்கிறேன். அப்படி செய்யாதீர்கள். ஓ, என்னால் அப்படி செய்ய முடியாது. எனக்கு பசியெடுத்தால் பரவாயில்லை. ஆனால், ஒரு புறாவையும் சுட எனக்கு மனம் வராது. 25இங்கு.... எங்கள் குடும்பத்துக்கும், புறாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஒருநாள் என் பாட்டி.... அவர்கள் கென்டக்கியை சேர்ந்தவர்கள், செரோக்கி பழங்குடியினருக்காக ஒதுக்கி வைக்கப்பட்ட இடத்தில் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் மரணத்தருவாயிலிருந்தார்கள், சிறு உருவம் படைத்த ஸ்திரீ, அவர்கள் அவர்களுக்கு.... அதை ஸ்க்ராஃபுலா என்று அழைக்கின்றனர் என்று நினைக்கிறேன். அவர்கள் மரணத்தருவாயிலிருந்தார்கள். அவர்களுடைய படுக்கையினருகில், என் பாட்டனார் முழங்கால் படியிட்டுக் கொண்டிருந்தார்; என் தாயார், தாயாரின் சகோதரிகள் பிர்டி, ஹௌலி, அவர்களெல்லாரும் படுக்கையைச் சுற்றிலும் முழங்கால் படியிட்டிருந்தனர்; தாயாரின் சகோதரர் சார்லிக்கு அப்பொழுது நான்கு வயது. என் தாயார் தான் மூத்தவர்கள், அவர்களுக்கு அப்பொழுது பன்னிரண்டு வயது. என் பாட்டி, படுக்கையிலேயே அவர்கள் கறுப்பு தலைமயிரை சீவிக் கொண்டு பிளவுண்ட மலையே, புகலிடம் தாருமே என்னும் பாடலைப் பாடிக் கொண்டிருந்தார்கள். என் பாட்டனார் அப்பொழுது கிறிஸ்தவர் அல்ல. அவருடைய எண்பத்தேழாம் வயதில் நான் அவருக்கு, கர்த்தருடைய தூதன் பிரத்தியட்சமான அந்த நதியின் முகத்து வாரத்தில், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்தானம் கொடுத்தேன். அவர்கள் தங்கள் பலவீனமான கரங்களையுயர்த்தி இந்து பாடலைப் பாடிக் கொண்டிருந்த போது, ஒரு புறா பறந்து கதவின் வழியாக உள்ளே வந்து, கட்டிலின் மேல் உட்கார்ந்து, சப்தமிடத் தொடங்கினது. தேவன் அவர்களுடைய ஆத்துமாவை எடுத்துக் கொண்டார். 26நான் இங்கிலாந்தின் தலைநகரான லண்டனுக்கு சகோ. ஜாக்குடனும், சகோ கார்டன் லிண்ட்சேயுடனும் சென்றிருந்தேன். இங்கு ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் என்னும் ஒரு பெண் இருந்தாள். அவள் எனக்கு பல கடிதங்கள் எழுதினாள். அவள் காலஞ் சென்ற ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேலின் கொள்ளு பேத்தி என்று கூறிக் கொண்டாள். அவள் தென் ஆப்பிரிக்காவில் புற்று நோயால் மரித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய புகைப்படத்தை நீங்கள் என் புத்தகத்தில் கண்டிருக்கிறீர்கள். மானிட வர்க்கத்தைச் சேர்ந்த அப்படிப்பட்ட மோசமான நிலையில் இருந்த ஒருத்தியை, என் வாழ்க்கையில் நான் கண்டதேயில்லை. அன்று சகோ. ஜாக் என்னுடன் இருந்தார் என்று நினைக்கிறேன். நாங்கள் ஆலயத்துக்குப் பின்னால் உள்ள போதகரின் வீட்டுக்குச் சென்றோம். அவளை அங்கு கொண்டு வந்திருந்தனர். விமானம் இறங்கினவுடனே, அவர்கள் எங்களை பையனை அனுப்பிக் கூப்பிட்டார்கள். அவள் அப்பொழுது நோயாளி ஊர்தியில் இருந்தாள். நான் இங்கிலாந்துக்கு வருகிறேன் என்று கேள்விப்பட்டு அவளை தென் ஆப்பிரிக்காவிலிருந்து விமானம் மூலம் அங்கு கொண்டு வந்திருந்தனர். போதகர் இவளை தன் வீட்டுக்கு கொண்டு வந்திருந்தார். அவளுக்காக ஜெபிக்க நாங்கள் அங்கு சென்றிருந்தோம். 27நான் வியாதியாயிருந்த அநேகரை கண்டிருக்கிறேன், இவளுடைய சிறு கைகள் ஒரு அங்குலம் அகலம் கூட இருக்கவில்லை. அவளுடைய மண்டை ஓடு ஒன்றாக இணையும் இடத்தை நீங்கள் காணமுடியும். அவள்... அவளுடைய கால்கள், அவளுடைய இடுப்பு வரைக்கும் இரண்டு அங்குலம் அகலம் கூட இல்லை, வெறும் எலும்புகள் மாத்திரமே. அவள் ஏதோ கூற முனைந்தாள், அதை என் அனால் புரிந்து கொள்ள முடியவில்லை. முடிவில் அவள் என்ன கூறினாள் என்று ஒரு நர்ஸ் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. அவள், சகோ. பிரான்ஹாமே. நான் மரிக்க வேண்டுமென்று தேவனிடம் ஜெபியுங்கள் என்றாள். அவளால்... அவளுக்கு வாழ விருப்பமில்லை. நான் கவனித்த போது, அவளுடைய முகத்தில் காணப்பட்ட எலும்பில் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. அழுவதற்கு அவளுக்கு எங்கு போதிய கண்ணீர் இருந்ததோடு எனக்குத் தெரியவில்லை. அவளுடைய இரத்தக் குழாய்கள் சுருங்கிப் போயிருந்தன. அவள் பயங்கரமான நிலையில் இருந்தாள். வியாதிபுள்ள அவளுக்காக ஜெபிக்க வந்த நான், அவள் மரித்துப் போக வேண்டும் என்று ஜெபிக்க என்னால் முடியவில்லை. அவள் மரிக்க மாட்டாள் என்று தோன்றினது. அவளுடைய உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. ஜெபிப்பதற்காக அந்த அறையில் உங்கள் போதகருடன் நான் முழங்கால் படியிட்டேன். நான் முழங்கால் படியிட்ட போது, ஒரு சிறு புறா ஜன்னலின் வழியாக பறந்து வந்து சப்தமிடத் தொடங்கினது. நான் ஜெபம் பண்ணி முடித்த போது, அது அருகில் யாரோ வளர்க்கும் புறா என்று எண்ணினேன் வெளியே மூடுபனி நிறைந்திருந்தது. அப்படித்தான் இங்கிலாந்து பிரிட்டிஷ் தீவுகள் இருப்பது வழக்கம். இந்த சிறு புறா சப்தமிடுவதை நிறுத்திக் கொண்டு வெளியே பறந்து சென்றது. நான் அவளருகில் சென்று, கர்த்தருடைய நாமத்தை சொல்லி, அவள் மேல் கைகளை வைத்தேன். அந்த ஸ்திரீ இன்று பருமனும், பெலமும், ஆரோக்கியமும் கொண்டவளாக இருக்கிறாள், புறாவின் சிறகுகளின் மேல். புறா தன்னை வெளிப்புறம் சுத்தமாக வைத்துக் கொள்கிறது. கிறிஸ்தவனும் அப்படியே செய்கிறான். அவன் உள்ளிருந்து தன்னை வெளியே சுத்திகரித்துக் கொள்கிறான், அது தீய எண்ணத்தை அப்புறப்படுத்துகிறது... அவனுக்கு ஜீரணிக்க பித்த நீர் எதுவும் அவசியமில்லை, ஏனெனில் அவன் அத்தகைய ஆகாரத்தை அருந்துவதில்லை. பாருங்கள்? அவன் உள்ளும், புறம்பும் சுத்தமாயிருக்கிறான். 28இப்பொழுது நாம் காண்கிறோம், இந்த பறவை... நான் அநேக காரியங்களை எழுதி வைத்திருக்கிறேன், ஆனால் கடிகாரம் வேகமாக நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது. பழைய ஏற்பாட்டில், பாவ நிவாரணத்துக்காகவும், சுத்திகரிப்புக்காகவும் இந்த பறவை பலியாக உபயோகிக்கப்பட்டது. நாம் ஆதியாகமம் 15:9ல் உள்ள ஒன்றை குறிப்பிடுவோம். இந்த வசனத்தை நாம் சிறிது சிந்தித்து பார்ப்போம். ஆபிரகாம் இங்கு... அவர் எப்படி இதை செய்யப் போகிறார் என்று தேவனைக் கேட்கிறான். தேவன் ஆபிரகாமுக்கு மீண்டும் தமது வார்த்தையை உறுதிப்படுத்துகிறார். அவர் அதை விசித்திரமான முறையில் செய்கிறார். நாம் தொடங்குவோம்... முதலாம் வசனத்திலிருந்து, நாம் தொடங்குவோம். இதை துரிதப்படுத்த எனக்கு விருப்பமில்லை. இந்த காரியங்கள் நடந்த பின்பு, கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி... (பாருங்கள், ஆபிரகாம் ஒரு தீர்க்கதரிசி, அவன் தரிசனங்களைக் கண்டான்)... அவர்: ஆபிரகாமே; நீ பயப்படாதே, நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார். (யேகோவா - நிசி பாருங்கள்). அதற்கு ஆபிரகாம்: கர்த்தராகிய ஆண்டவரே (கவனியுங்கள், கர்த்தராகிய ஆண்டவர் ஏலோகிம் பாருங்கள்?) கர்த்தராகிய ஆண்டவரே... (தரிசனத்தில்)... அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரானாகிய இந்த எலியேசர் என் வீட்டு விசாரணைக் கர்த்தனாய் இருக்கிறானே என்றான். பின்னும் ஆபிராம்: தேவரீர் எனக்குப் புத்திரசந்தானம் அருளவில்லை; இதோ என் வீட்டிலே பிறந்த பிள்ளை எனக்குச் சுதந்தரவாளியாய் இருக்கிறான் என்றான். அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி: இவன் உனக்குச் சுதந்தரவாளியல்ல... (அவர் அவனுக்கு ஒரு வாக்குத்தத்தத்தை அளித்திருந்தார். உங்களுக்குத் தெரியும்... பாருங்கள், அங்கேயே ஆபிரகாம் தவறியிருப்பான். ஆனால், வாக்குத்தத்தம் நிபந்தனையற்றது; உடன்படிக்கை நிபந்தனையற்றது) உன் கர்ப்பப் பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான் என்று சொல்லி (அப்பொழுது அவனுக்கு நூறு வயது), அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்து - பார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார் (பிள்ளையில்லாத ஒருவன், அப்பொழுது நூறு வயது நிரம்பியவன்). அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார். பின்னும் அவர் அவனை நோக்கி: இந்தத் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் பொருட்டு, உன்னை ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்திலிருந்து அழைத்து வந்த கர்த்தர் நானே என்றார். அதற்கு அவன்: கர்த்தராகிய ஆண்டவரே, நான் அதைச் சுதந்தரித்துக் கொள்வேன் என்று எதினால் அறிவேன் என்றான். இதை கூர்ந்து கவனியுங்கள். அதற்கு அவர்: மூன்று வயதுக் கிடாரியையும், மூன்று வயது வெள்ளாட்டையும்... (இந்த மூன்றுகளை கவனியுங்கள். மூன்று வயது.) மூன்று வயது ஆட்டுக் கடாவையும், ஒரு காட்டுப் புறாவையும், ஒரு புறாக்குஞ்சையும், என்னிடத்தில் கொண்டு வா என்றார். (இருவரும் அதே ஜனங்கள், இரண்டும் அதே காரியம். பாருங்கள், இயேசுவுக்கு முன்னடையாளமாக அது பலியாக உபயோகிக்கப்பட்டது). ஆதி.15:1-9 29உடன்படிக்கை செய்யப்பட்டது. அவன் எப்படி அவைகளை நடுவாகத் துண்டித்தான் என்று உங்களுக்குத் தெரியும். பண்டைய காலங்களில் அவர்கள்... உடன்படிக்கை செய்தபோது, அந்த ஒப்பந்தத்தை அவர்கள் எழுதுவார்கள் - அவர்கள் ஒரு மிருகத்தைக் கொன்று, அதன் நடுவில் நின்று, அந்த உடன்படிக்கையை இரண்டாக கிழித்து, ஒவ்வொருவரும் ஒரு துண்டை எடுத்துக் கொள்வார்கள். சீனர் சலவைச் சாலையில் அவர்கள் செய்வது போன்று இங்குள்ள சீனனுக்கு ஆங்கிலம் எழுதத் தெரியாது. எனவே, அவன் ஒரு காகிதத்துண்டில் ஏதோ எழுதி, அதை இரண்டாகக் தன் கிழித்து, ஒரு துண்டை உங்களிடம் கொடுத்து விடுவான், சீனச் சலவைச் சாலைகள் அவ்வாறு செய்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா? உங்கள் துணிகளை நீங்கள் பெற்றுக் கொள்ள செல்லும் போது. இவ்விரண்டு துண்டுகளும் ஒன்றோடொன்று இணைய வேண்டும். பாருங்கள், நீங்கள் அவனை ஏமாற்ற முடியாது. ஏனெனில் அவன் மற்ற துண்டை வைத்திருக்கிறான். உங்கள் பெயரை நீங்கள் மறுபடியும் எழுதிக் கொள்ளலாம். ஆனால் காகிதத்தை நீங்கள் மறுபடியும் அதேவிதமாக கிழிக்க முடியாது. பாருங்கள்? எனவே அவன்... அது அதே காகிதத் துண்டாக இருக்க வேண்டும். கிழக்கத்திய நாடுகளில் அவர்கள் அவ்வாறு செய்வது வழக்கம்... பண்டைய காலங்களில், கிழக்கத்திய நாடுகளில். அவர்கள் ஒரு மிருகத்தைக் கொன்று, அதன் நடுவில் நின்று, ஆட்டுத் தோலை இரண்டாக கிழித்து. ஒவ்வொருவரும் ஒரு துண்டை எடுத்துக் கொள்வார்கள்... உடன்படிக்கை உறுதிப்படும் நேரம் வரும் போது, அவர்கள் இரண்டு துண்டுகளையும் கொண்டு வருவார்கள். அவை புறாவின் சிறகுகளைப் போல் ஒன்றாக இணைய வேண்டும். 30தேவன் அவனுக்கு இங்கே என்ன காண்பித்துக் கொண்டிருந்தார் என்றால், இந்த பலிகள் கிறிஸ்துவை குறிப்பிடுகின்றன என்று தேவன் இயேசுவை கல்வாரிக்குக் கொண்டு சென்று, அவரை இரண்டாகக் கிழித்து, சரீரத்தை பரலோகத்தில் ஏற்றுக் கொண்டு, ஆவியை நம்மேல் அனுப்பினார். முடிவு காலத்தில் மணவாட்டியாயிருக்க, அவர் மேல் தங்கியிருந்த இதே ஆவி உங்கள் மேல் தங்கியிருந்து அந்த சரீரத்துடன் புறாவின் சிறகுகளைப் போல் இணைய வேண்டும். பாருங்கள்? பாருங்கள்? அது உண்மை. பாருங்கள் அது ஸ்தாபனமாக இருக்காது. இது வார்த்தையாக இருக்கும் - அவர் என்னவாயிருந்தாரோ, இதுவாக பாருங்கள்? வார்த்தை வார்த்தையிடமே வர முடியும், ஒரு மனித உடலிலுள்ள அணுக்களை (cell) போல், உங்கள் உடல் உண்டாக்கப்படும் போது, அது ஒரு மனித அணு, அதற்கு மேல் ஒரு நாயின் அணு, அதற்கடுத்ததாக ஒரு பன்றியின் அணு என்று வைக்கப்பட்டு உண்டாக்கப்படவில்லை. ஓ, இல்லை, இல்லை. அவையனைத்துமே மனித அணுக்கள். கிறிஸ்துவின் சரீரமும் அவ்வாறே உள்ளது எல்லாமே தேவனுடைய வார்த்தையாக. அதில் ஒருபாகம் மாத்திரம் தேவனுடைய வார்த்தையாகவும் அதனுடன் பாரம்பரியம் சேர்க்கப்பட்டதாகவும் இருக்க முடியாது: கிறிஸ்துவின் சரீரம் முழுவதுமே தேவனுடைய வார்த்தையைக் கொண்டு கட்டப்பட்டதாக இருக்க வேண்டும். இங்கு ஆபிரகாம் காட்டுப் புறாவையும், புறாக்குஞ்சையும் பலி செலுத்தினான் என்று பார்க்கிறோம். அவையிரண்டும் ஒரே இனத்தை சேர்ந்தவை. நீங்கள் எப்பொழுதுமே... 31எனவே கவனியுங்கள் (நான் இந்த வேத வசனங்களில் ஓரிரண்டை மாத்திரம் குறிப்பிடுகிறேன்.) லேவியராகமம் 12ம் அதிகாரம், 6ம் வசனம். ஒரு ஸ்திரீ சுத்திகரிக்கப்பட கடை பிடிக்க வேண்டிய ஒழுங்கை நாம் இங்கு காண்கிறோம். அந்த ஸ்திரீக்கு குழந்தை பிறந்தவுடன், அவள் காத்திருக்க வேண்டும். அது ஆண் பிள்ளையாயிருந்தால், அவள் சபையில் பிரவேசிப்பதற்கு முன்பு முப்பத்து மூன்று நாட்கள் காத்திருந்து, சுத்திகரிப்புக்காக புறாக்களைக் கொண்டு வர வேண்டும். அது பெண் பிள்ளையாயிருந்தால், அவள் சபையில் பிரவேசிப்பதற்கு முன்பு தொண்ணூற்றாறு நாட்கள் காத்திருக்க வேண்டும். இப்பொழுது, இங்கு 6ம் வசனத்தில் நாம் காண்கிறோம். அவள் ஆண் பிள்ளையாவது, பெண் பிள்ளையாவது பெற்றதற்காக அவளுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறின பின்பு, அவள் ஒரு வயதான ஆட்டுக் குட்டியை சர்வாங்கதகன பலியாகவும், ஒரு புறாக் குஞ்கையாவது காட்டுப் புறாவையாவது பாவ நிவாரண பலியாகவும், ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்திற்குக் கொண்டு வரக்கடவள்: லேவி. 12:6 பாருங்கள்; அவள் உள்ளே வர முடியாது. ஏனெனில், அவளுடைய நாட்கள் முடியவில்லை. ஆசரிப்புக் கூடார வாசலில் அவளுடைய பலியை ஆசாரியனிடத்தில் கொடுக்கலாம் - ஒரு காட்டுப் புறாவையாவது அல்லது ஒரு புறாக்குஞ்சையாவது. இவ்விரண்டும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை. 32அவை பாவ நிவாரண பலிக்காக உபயோகிக்கப்பட்டு வந்தன - ஒரு புறா. அல்லது குஷ்டரோகத்துக்காக - அது பாவத்துக்கு அடையாளமாயுள்ளது அவர்கள் இரண்டு புறாக்களை கொண்டு வந்தனர். ஒரு புறாவின் தலை வெட்டப்பட்டு அதன் இரத்தம் மற்ற புறாவின் மேல் ஊற்றப்பட்டது. இந்த புறா பிறகு விடுதலையாக்கப்பட்டது. இது பறந்து செல்லும் போது, தன் துணைப் புறாவின் இரத்தத்தினால் பூமியை நனைத்தது. அந்த இரத்தம் தேவனிடம், ''கர்த்தராகிய தேவன் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்!'' என்று உரக்க சத்தமிட்டது. மரித்த நமது துணைவராகிய இயேசு கிறிஸ்துவை உங்களால் காண முடியவில்லையா? அவர் கொல்லப்பட்டு அவருடைய இரத்தம் நம் மேல் தெளிக்கப்பட்டது. நாம் விடுதலையடைந்து ''கர்த்தர் பரிசுத்தர்! பரிசுத்தர்! பரிசுத்தர்'' என்று ஆர்ப்பரிக்கிறோம். என்ன அழகான உதாரணம். எனக்கு உரத்த குரல் இருந்தால் நலமாயிருக்கும். 33நாம் இப்பொழுது வாசித்த, மத்தேயு 3:13ல்; இந்த புறா பரிசுத்த ஆவிக்கு அடையாளமாயுள்ளது. புறா அடையாளமாக தேவனால் உபயோகிக்கப்பட்டது. நமது சகோதரன் சற்று முன்பு பாடின வண்ணமாக, நோவாவுக்கு ஒரு அடையாளம் கொடுக்கப்பட்டது. (தேவன் அதிருப்தி கொண்டார். அவருடைய கோபத்தை இதுவுமே தடுத்து நிறுத்த முடியவில்லை. ஏனெனில் அவர், ''நீ அதை புசிக்கும் நாளில், சாகவே சாவாய்'' என்று கூறினார். நோவாவுக்கு தேவனுடைய கண்களில் கிருபை கிடைத்தது. அவனுக்கு தேவன் கொடுத்த உத்தரவின்படியே, அவன் ஒரு பேழையை உண்டாக்கினான். அவன் அதில் பிரவேசித்து, தண்ணீரின் மேல் மிதந்தான். என்னால் கற்பனை செய்ய முடிகிறது... எப்படி அந்த நாட்களில் அவர்கள், ''இந்த கிழவன், மூடபக்தி கொண்டுள்ளவன், மலையின் மேல் பேழையை உண்டாக்கி, மழை வரப்போகிறது என்கிறான். ஆனால் மழை பெய்யவேயில்லை என்று கூறினர். ஆனால் அது... நோவா, எப்படியாயினும் மழை பெய்யும் என்றான். அவன் பேழைக்குள் பிரவேசித்த நாள் எனக்குத் தெரியும். நான் நினைக்கிறேன்... எந்த நாள் என்று என் ஞாபகத்துக்கு வரவில்லை, அதுமே மாதம் 17ம் தேதி என்று நினைக்கிறேன். நோவா பேழைக்குள் பிரவேசித்தான், தேவன் கதவை அடைத்தார். மேகங்கள் தோன்றின, மழை பெய்யத் தொடங்கினது, கால்வாய்கள் நிறைந்தன. ஆழத்திலிருந்த ஊற்றுகள் உடைந்து. தண்ணீரை வெளியே கக்கின. ஜனங்கள் வீடுகளின் உரைகளின் மேல் ஏறினர். ஆனால் பேழையோ அப்படியே இருந்தது. அதன் பிறகு பேழையைச் சுற்றி தண்ணீர் நிறைந்த போது, இது உயர, உயர எழும்பத் தொடங்கினது. ஜனங்கள் - பேழையின் கதவைத் தட்டி கூக்குரலிட்டனர். ஆனால் ஒரு பயனும் இல்லை. நோவாவினால் பேழையின் கதவை திறக்க முடியாது. அதை அடைத்தவர் தேவனே. எனவே, தேவன் மாத்திரமே அதை திறக்க முடியும். இப்படித்தான் நமது பேழையாகிய இயேசு கிறிஸ்துவும். தேவன் கல்வாரியில் நமக்காக கதவைத் திறந்தார். அவர் திறந்தது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக அதை அடைப்பார். 34பேழை மிதந்து உயரே உயரே சென்றது. இந்த பூமி அதன் வழக்கமான சுழற் பாதையிலிருந்து விலகிக் கொண்டிருந்த போது, பேழை பூமிக்கு ஒரு மைல் உயரத்தில் இருந்திருக்கக் கூடும். பேழை சுற்றிக் கொண்டே வந்து, நாற்பது நாட்கள் இரவும் பகலும் மிதந்தது. காற்று ஓய்ந்த போது... தேவனுடைய கோபம் பயங்கரமானது. அவருடைய அன்பு தூய்மையும் தெய்வீகமானது. அவருடைய கோபமும் அவருடைய அன்பைப் போன்றே தெய்வீகமானது. ஏனெனில் அவர் நியாயாதிபதி; அவர் நியாயத்தீர்ப்பு கொடுக்க வேண்டும். அவர் சட்டத்தை அளிப்பவர். தண்டனையில்லாத சட்டம் எதுவும் சட்டமல்ல. எனவே சட்டம் தண்டனையும் அளிக்க வேண்டும். நீங்கள் தேவனுடைய பிரமாணங்களை மீறினால், அதற்கேற்ற தண்டனையை அடைய வேண்டும். 35நோவா அந்த பேழையில் மிதந்து கொண்டிருந்த போது, கொந்தளிப்பின் காரணமாக அவனுக்கு குமட்டலும், வாந்தியும் உண்டாயிருக்கும் என்பதில் ஐயமில்லை. தேவனுடைய கோபாக்கினை தவிடு பொடியாக்கி நொறுக்கிக் கொண்டிருந்தது.. கூக்குரல்கள் எழும்பின. பிறகு அது அமைதியாகத் தொடங்கினது. நாட்கள் கடந்தன. ஒன்றும் நேரிடவில்லை. ஒருக்கால் பேழைக்குள் இருந்த மிருகங்களின் ஆகாரம் குறைவுபட்டிருக்கக் கூடும். ஒன்றுமே நேரிடவில்லை. எனவே அவன், ''என்ன நடக்கிறதென்று தெரியவில்லை. என்னால் வெளியே காண முடியவில்லை'' என்றான். பேழை எப்படி உண்டாக்கப்பட்டிருந்ததென்றால், நீங்கள் ஒருமுறை அதற்குள் நுழைந்துவிட்டால், அதற்கு ஒரே ஒரு ஜன்னல் மாத்திரமேயுண்டு, அதுவும் மேல் பாகத்தில் நீங்கள் பக்க வழியாய் பார்க்க முடியாது. வேறெந்த வழியாகவும் பார்க்க முடியாது. ஆனால், நேராக மேலே மாத்திரம் பார்க்க முடியும். பேழையாகிய இயேசு கிறிஸ்துவும் அப்படித்தான் இருக்கிறார். (நீங்கள் அந்த பேழைக்குள் இருக்கும் போது, பக்கத்திலுள்ள ஆளை பார்க்க முடியாது, கிறிஸ்துவைத் தவிர வேறெதையும் நீங்கள் பார்க்க முடியாது. ஏனெனில், ஒரேஒரு வாசல் மாத்திரமே உண்டு. அவரே இன்று காலை நாம் பேசின அந்த வாசல், நீங்கள் மேலே நோக்கிப் பார்க்க வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். ஏனெனில், ''கலப்பையின் மேல் தன்கையை வைத்துப் பின்னிட்டுப் பார்க்கிற எவனும் உழுவதற்குத் தகுதியுடையவன் (லூக்;9:62).'' 36இந்த பேழையில்... நோவா வெளிச்சத்தைக் காண முடிந்தது. ஒருக்கால் சூரிய வெளிச்சம். ஆனால் அவன் எங்கிருக்கிறான் என்று வியந்தான். பேழை இப்பொழுதும் மிதந்து கொன்டிருந்தது. அலைகள் பேழையின் பக்கங்களில் மோதுவதை, அவனால் கேட்க முடிந்தது. ஆனால் அநேக நாட்கள் கடந்து விட்டபடியால், தண்ணீர் மட்டம் அந்நேரம் குறைந்திருக்குமென்று அவன் நிச்சயமாக அறிந்திருந்தான். எனவே, அவன் நம்பத்தகாத, துரோகியான ஒரு பறவையை வெளியே அனுப்பி அதை சோதித்துப் பார்த்தான். அது ஒரு காகம், அது திரும்பி வரவேயில்லை. ஏனெனில், தேவனுடைய பேழைக்கு வெளியே அது இன்பம் கண்டது. அது தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த ஒரு சவத்திலிருந்து மறு சவத்துக்குப் பறந்து சென்று அவைகளைத் தின்று கொண்டிருந்தது. அது பரிபூரண திருப்தி கொண்டது. 37அநேக நாட்கள் கழித்து அவன் மறுபடியும் முயன்றான், ஏனெனில் அவன் அறிந்திருந்தான்..... தேவனுடைய கோபாக்கினை உள்ளபோது, அவன் வெளியே வர விரும்பவில்லை. எனவே, அவன் ஒரு புறாவை அனுப்பினான். இந்த புறா வித்தியாசமான இயல்பு படைத்தது... அது ஒரு பருந்து அல்ல, இது ஒரு தோட்டியல்ல, அது சுத்தமானவைகளையே தின்ன முடியும், தன் உள்ளங்கால் வைக்க அதற்கு இடமே கிடைக்காததால், இது திருப்தி கொண்டு பேழைக்குத் திரும்பி வந்தது. நோவா வெள்ளம் இன்னும் உள்ளது என்று கண்டு கொண்டான். அவன் மேலும் அதேக நாட்கள் காத்திருந்து. அந்த புறாவை மறுபடியும் அனுப்பினான். அவன், ''ஓ, தேவனே. உமது கோபம் தணிந்து விட்டதா? கர்த்தாவே, உமது கோபம் அடங்கிவிட்டதா? அதெல்லாம் முடிந்து விட்டதா என்று ஜெபித்திருப்பான். அவன், வெள்ளம் வற்றியிருந்தால், இம்முறை அது வெளியிலே தங்கட்டும்'' என்றான். அவன் ஜெபத்துடன் அதை வெளியே அனுப்பின போது. அது தேவனால் வழி நடத்தப்பட்டு வெளியே சென்று, ஒரு ஒலிவ மரத்தின் இலையைக் கொத்திக் கொண்டு திரும்பி வந்து, அலகினால் ஜன்னலைக் கொத்தினது. தேவன் ஒரு புறாவை அடையாளமாக உபயோகித்தார். அது திரும்பி வந்து, தண்ணீர் வடிந்து விட்டது என்றுரைத்தது. பிறகு தேவன் கதவை திறந்தார். அவர்கள் வெளியே சென்றனர். அது, ஆதியாகமம்;8:3. 38தேவனுடைய கோபாக்கினை பூமியின் மேல் இருந்த போது, அது மத்;3:16ல் மறுபடியும் அடையாளமாக உபயோகிக்கப்பட்டது. ஒரு வழியும் இல்லை, அது மிகவும் அந்தகாரமான ஒரு இரவு. நள்ளிரவு. சபைகள் எல்லாவற்றையும் திரித்து, அதிலிருந்து வெளியேற ஒரு வழியும் இல்லாமல் இருந்தது. அங்க கள்ளப் போதகர்கள் இருந்தனர். எல்லாவித காரியங்களும் எழும்பின, எல்லாவிதமான உபதேசங்களும் எழும்பின. ஆனால், தேவன் மறுபடியுமாக ஒரு புறாவை உபயோகித்தார். இது அவருக்குப் பிரியமாயிருந்தது. இவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து அவரை மிகவும் பிரியப்படுத்தினதால், அவரை அவர் அடையாளம் காண்பித்தார். மாட்டுத் தொழுவத்தில் வைக்கோல் குவியலில் தகப்பனுக்கும், தாய்க்கும் விவாகம் ஆவதற்கு முன்பே பிறந்த அந்த குழந்தை தேவனுடைய குமாரன் என்று அவர்களால் விசுவாசிக்க முடியவில்லை. தேவன் அப்படிப்பட்ட ஒன்றை உபயோகிப்பார் என்று அவர்களால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. எனவே, அவர் உலகத்துக்கு அவரை அடையாளம் காண்பிக்க வேண்டிய அவசியம் இருந்தது. எனவே, இந்த நாளில் அந்த நதிக்கரையில், தம்மை தேவனுடைய சிறந்த வேலைப்பாடாக நிரூபிக்க அவர் நடந்து சென்ற போது (இதை குறித்து இன்று காலை நான் பேசினேன்). அவர் கீழ்ப்படிந்து தண்ணீருக்குள் நடந்து சென்றார். 39அங்கு நீங்கள் கவனிப்பீர்களானால், அதில் ஒரு பெரிய பாடம் அடங்கியுள்ளது. அந்த சமயத்தில் யோவான் ஸ்நானன் பூமியிலே இருந்த மனிதர்களில் மிகப் பெரியவன், ''ஸ்திரீகளிடத்தில் பிறந்தவர்களில் யோவான் ஸ்தானனைப் பார்க்கிலும், பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை'' என்று இயேசு கூறினார்(மத்;11:11). அந்த நாள் வரைக்கும். அவன் ஒரு தீர்க்கதரிசி. அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், தேவனுடைய வார்த்தை தேசத்தில் எவரிடத்திலாகிலும் வருமானால், அது தீர்க்கதரிசியிடத்தில் மாத்திரமே. அது எப்பொழுதும் தேவனுடைய வழியாக அமைந்துள்ளது. இயேசு மாம்சத்தில் வெளிப்பட்ட வார்த்தை என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? எனவே, அவர் அறிமுகப்படுத்தப்படுவதற்கு ஒரு வழி மாத்திரமேயுண்டு; ஆசாரியர்கள் மூலமாய் அல்ல. அவர் நேரடியாக காய்பாவிடம் சென்று, ''காய்பாவே என்னை அறிமுகப்படுத்து'' என்று கூறவில்லை. அவர் அப்படி செய்திருந்தால், தாவீது தவறு செய்ததாக அன்றைய பாடத்தில் நாம் பார்த்தோமே, அதே தவறை அவர் செய்திருப்பார் பாருங்கள்; அவர் தேவாலயத்துக்குச் சென்று, ''என்னை அறிமுகப்படுத்துவாயா?'' என்று கேட்டிருந்தால்..... 40அவருடைய பிறப்பையும் கூட கவனித்துப் பாருங்கள். அவர் பிறந்த போது, தேவாலயத்தின் நிழலில் பிறந்தார். அவர்கள் ஒருக்கால் அப்பொழுது தேவாலயத்தின் மணிகளை ஒலித்துக் கொண்டிருந்திருப்பார்கள். ஆனால், அவரைக் கண்டு கொண்டது மேய்ப்பார்களும், ஞானிகளுமே. பாருங்கள்? அவர் இப்பொழுது இங்கிருக்கிறார்... அவருடைய ஊழியத்துக்கு ஆயத்தமாக. அவர் வார்த்தையாமிருப்பாரானால்... தேவனுடைய மகத்தான திட்டத்தின்படி, வார்த்தையானது... கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்வார். அதுவே, அவருடைய மாதிரியாக (pattern) எக்காலத்தும் உள்ளது, இது இப்படித்தான் இருக்க வேண்டும்; முத்திரைகள் திறக்கப்பட்ட போதும், வேறெதாவது நடக்கும் போதும், பூமியிலே ஒரு முக்கியமான சம்பவம் நடக்கவிருந்தால், தேவன் அதை முதலில் தமது தீர்க்கதரிசிகளுக்கு வெளிப்படுத்துகிறார். யோவான்ஸ்நானன் ஒரு தீர்க்கதரிசி, ஏனெனில், ''அவர் வருகிறார்'' என்று அவன் தீர்க்கதரிசனம் உரைத்தான். ஒருநாள் மலையடிவாரத்தில்... ஒரு கூட்டம் ஆசாரியர்கள் நின்று கொண்டிருந்தனர். அங்கு விவாதம் நடந்து கொண்டிருந்தது. அவர்கள், ''நீ சேற்றில் நின்று கொண்டு (தேவாலயத்தில் இல்லை. ஏனெனில் அவர்கள் அவனைச் சேர்க்க மாட்டார்கள்) உன்னை தீர்க்கதரிசியென்று அழைத்துக் கொள்ளலாமா? சேற்றில் நின்று கொண்டு, இந்த பலிகளை ஏற்படுத்திய அந்த மகத்தான யேகோவா; இந்த ஆலயம் கட்டக் காரணமாயிருந்தவரும், அதற்குள் அக்கினிஸ்தம்பமாக வந்தவருமான அந்த மகத்தான யேகோவா வருவதற்கான வேளை வந்து விட்டதென்றும். அப்பொழுது, அன்றாடக பலி நீக்கப்படுமென்றும் என்னிடம் கூறுகிறாயே? அவன், ''ஒரு மனிதர் வருவார் அவர். இப்பொழுது உங்கள் நடுவில் இருக்கிறார் (எங்கோ அங்கு), அவர் பாவத்தை சுமந்து தீர்ப்பார்'' என்றான். அவனைக் குறித்து ஆசாரியர்கள் வெறுப்படைந்தார்கள். 41யோவான் ஸ்நானன் மேலே நோக்கினான்! அவன் யார்? தீர்க்கதரிசி! இங்கு வார்த்தை உள்ளது. அந்த வார்த்தை நேரடியாக தீர்க்கதரிசியினிடம் தண்ணீருக்குள் வருகிறது. யோவான், இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. இதோ அவர், அதுதான் அவர் என்றான், இயேசு ஒரு வார்த்தையும் பேசவில்லை. அவர் தண்ணீரை விட்டு வெளியே வந்தார். பூமியில் தோன்றின மிகப் பெரிய இருவர் தண்ணீரில் நின்று கொண்டிருப்பதை என்னால் காண முடிகிறது. (ஒரு நாடகத்தை நினைத்துப் பாருங்கள்). வார்த்தையாகிய தேவனும், அவருடைய தீர்க்கதரிசியும். கவனியுங்கள், இந்த கிருபையின் யுகத்தில், வார்த்தை தீர்க்கதரிசியினிடத்தில் வந்தது (உ,ஊ). நீங்கள் அதை கிரகித்துக் கொள்வீர்கள் என்று நினைத்தேன் (உ,ஊ). தண்ணீரில்! வார்த்தையின் முதலாம் வெளிப்பாடும் தண்ணீரில் தான். மணவாட்டி சாயங்கால வெளிச்சம் செய்தியை எங்கு தொடங்கினாள் என்று பார்த்தீர்களா? தண்ணீரில்! வார்த்தை. உண்மையான வார்த்தை, கோட்பாடுகள் கலவாத வார்த்தை. தீர்க்கதரிசியினிடத்தில் தண்ணீரில், தண்ணீரின் மூலம் வருகிறது. 42கவனியுங்கள்! வார்த்தையின் கண்களும் தீர்க்கதரிசியின் கண்களும் தண்ணீரில் சந்திப்பதை உங்களால் கற்பனை - செய்ய முடிகிறதா? ஓ, அது எனக்கு மிகவும் அதிகம். அங்கு தீர்க்கதரிசி நின்று கொண்டிருந்தான். அங்கு வார்த்தை நின்று கொண்டிருந்தார். ஒருவர் கண்கள் மற்றவர் கண்களை சந்தித்தன... தீர்க்கதரிசி, ''நான் உம்மாலே ஞானஸ்நானம் பெற வேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா?'' என்று கேட்டான் (மத்.3:14). அப்பொழுது வார்த்தை என்ன கூறினார் என்றால்... அது உண்மையாயிருக்க வேண்டும். இங்கு, இதை நாடக வடிவில் அளிக்கப் போகின்றேன். யோவானே, நீ ஒரு தீர்க்கதரிசி. உனக்கு வார்த்தை நன்றாக தெரியும். பாருங்கள்? ''நீ என்னைக் கண்டு கொண்டாய். நான் யாரென்று உனக்குத் தெரியும்.'' ''நான் உம்மாலே ஞானஸ்நானம் பெற வேண்டியதாயிருக்கிறது.'' யோவான் அவ்வாறு கூறினான். இயேசு, இப்பொழுது இடங்கொடு. நீ என்னாலே ஞானஸ்நானம் பெற வேண்டியதாயிருக்கிறது என்பது முற்றிலும் உண்மை. ஆனால், யோவானே இதை ஞாபகம் கொள்வாயாக. நீ தீர்க்கதரிசியாயிருப்பதால், இப்படி எல்லா வார்த்தையும் - (உ, ஊ) நிறைவேற்றுவது நமக்கு வார்த்தையும், தீர்க்கதரிசியும் என்னும் முறையில்) ஏற்றதாயிருக்கிறது. யோவானே (இதோ அந்த வெளிப்பாடு). நான் யாரென்று உனக்குத் தெரியும். நான் செலுத்தப்பட வேண்டிய பலி. தேவனுடைய வார்த்தையின் படி, பலியானது செலுத்தப்படுவதற்கு முன் புகழுவப்பட வேண்டும். அது சரியா? வார்த்தை... ஆட்டுக்குட்டி கழுவப்பட்டு அதன் பின்பு, அது பலி செலுத்தப்பட்டது. நானே அந்த ஆட்டுக்குட்டி, நான் உலகத்துக்காக பலியாக செலுத்தப்படுவதற்கு முன்பு கழுவப்பட வேண்டும். யோவானே, இப்பொழுது இடங்கொடு. நமக்கு, ''வார்த்தையும் தீர்க்கதரிசியுமாக ஒருமித்து, அதை நிறைவேற்றுவது ஏற்றதாயிருக்கிறது'' என்றார். 43நல்லது, அதில் தவறொன்றும் இருக்க முடியாது. இவை ஒவ்வொன்றும்... இப்பொழுது, பாருங்கள், இந்த அமைப்பு இல்லாமல் போயிருந்தால், யோவான் மற்றவர்களான நம்மைப் போலவே இருந்திருப்பான். அவர்கள், ''ஆம், நீர் யாரென்று தெரியும் கர்த்தாவே, என்கின்றனர். அவர் நல்லது, ஒரு நிமிடம் பொறு. நானே வார்த்தை (உ,ஊ). மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான். ஏவாள் ஒரு வார்த்தையை விட்டுவிட்டாள் (உ,ஊ), ஆனால் நீ ஒவ்வொரு வார்த்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நானே அந்த பலி. நான் பலியாக செலுத்தப்படுவதற்கு முன்பு கழுவப்பட வேண்டும். ஆனால் யோவானே, நீ கூறினது உண்மை என்றார். யோவான் தீர்க்கதரிசியாயிருந்தபடியால், வார்த்தை நிறைவேற வேண்டுமென்று அறிந்தவனாய், இடங்கொடுத்து அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். அவர் தண்ணீரிலிருந்து கரையேறின போது. பரலோகத்திலிருந்து புறாவின் சிறகுகளின் மேல், இவர் என்னுடைய நேச குமாரன் என்னும் செய்தி வந்தது. அவர் மீட்பின் செய்தியாகிய கிருபையை, பரலோகத்திலிருந்து கீழே பறந்து வந்த புறாவின் சிறகுகளின் மேல் அனுப்பினார்: பூமியிலே சமாதானமும், மனுஷர் மேல் பிரியமும் உண்டாவதாக. பலி, அப்பொழுதே ஆயத்தமாகிவிட்டது; அது வளர்க்கப்பட்டு, போஷிக்கப்பட்டது. அவருடைய ஊழியம் ஆயத்தமானது - முழு உலகத்தையும் மீட்டெடுக்கும் வார்த்தை. ''அது முடிந்து விட்டது.'' 44வேதத்தில் புறா சமாதானத்துக்கு அடையாளமாக உபயோகிக்கப்பட்டுள்ளது. அது சமாதானத்தின் அடையாளமாய் தேசங்களால் உபயோகிக்கப்பட்டுள்ளது. நமக்கு தேசங்கள் உண்டு... நமது தேசத்துக்கு கழுகு சின்னமாக அமைந்துள்ளது. மற்ற நாடுகளுக்கு மற்ற பறவைகள் உண்டு, ரோமாபுரிக்கு ஒரு கழுகு, ஜெர்மனிக்கு ஒரு கழுகு: தேசங்கள் பலவற்றிற்கு வானத்தின் பெரிய பறவைகள். ஆனால் இந்த எல்லா நாடுகளுக்கும் புறா சமாதானத்துக்கு அடையாளமாய் உள்ளது. அது உலகம் முழுவதும் கைகொள்ளப்படும் ஒன்று. ஒரு இரவு சகோ. கிரீன், சகோ. பெர்ரீ கிரீன் கூறினது போல் அவர், சரண்டைந்ததற்கு அடையாளம் கைகளை உயர்த்துவதே. உலகத்திலுள்ள எந்த நாட்டிலும் கைகளை உயர்த்துதல் சரணடைந்ததற்கு அடையாளமாயுள்ளது. நீங்கள் பாடும் போது கைகளை உயர்த்தினால், நீங்கள் சரணடைந்து எல்லாவற்றையும் ஒப்புவிக்கின்றீர்கள் என்று அர்த்தம் என்றார். அது போன்று புறாவும் எல்லா நாடுகளிலும் சமாதானத்துக்கு அடையாளமாயுள்ளது. அது ஏன் அப்படி செய்யப்படுகிறது? ஏனெனில், அது சாந்தமும் களங்க மற்றதாயும் உள்ளது. அதன் காரணமாகத்தான் அது சமாதானத்துக்கு அடையாளமாயுள்ளது. 45புறாவைக் குறித்து வேறொன்று, அது வீட்டை விரும்பும் பறவை. அது வீட்டில் தங்கியிருக்க விரும்புகிறது. வேறொரு காரியம் என்னவெனில், அது எப்பொழுதும் தன் துணைக்கு விசுவாசமுள்ளதாய் இருக்கிறது. புறா ஆணானாலும், பெண்ணானாலும், தன் துணையை விட்டுச் செல்வதில்லை. பெண் புறா தன் துணையை இனச்சேர்க்கையின் காலத்தில் கண்டு பிடிக்கிறது. பாருங்கள், அது தேவனுடைய மகத்தான சிருஷ்டிக்கு புகழாக அமைந்துள்ளது. ஏவாளை அவர் உபபொருளாக படைத்தார். பாருங்கள்? அவள் மற்ற பெண் இனங்களைப் போல் சிருஷ்டிக்கப்பட்டிருந்தால், இனச்சேர்க்கையின் போது அவள் தன் துணைவனைக் கண்டு பிடித்திருப்பாள். பாருங்கள்? அதுதான் முறை, அப்படி தான் அது இருந்திருக்கும். நான்... அதை இப்பொழுது நாம் பார்க்க விரும்பவில்லை. ஏனெனில் விவாகமும், விவாகரத்தும் என்னும் செய்தியில் அது உள்ளது. அது எப்படி... இருப்பினும் அவள் கௌரவமுள்ளவளாய் இருந்து அந்த நற்பண்புகளைக் கொண்டு வந்தாள். அதைக் குறித்து அன்றொரு இரவு நான் எப்படி பிரசங்கித்தேன் என்று உங்களுக்குத் தெரியும். சரி, கவனியுங்கள். அவளுக்கு ஒரு பெரிய பொறுப்பு உள்ளது. புறா எப்பொழுதுமே தன் துணைக்கு விசுவாசமுள்ளதாய் இருக்கிறது. எப்பொழுதுமே! அதை விட்டு அது செல்வதேமில்லை. 46இதை கூற ஒரு நிமிடம் நான் நிறுத்த விரும்புகிறேன். உண்மையான மணவாட்டி, பெண் புறாவைப் போல், தன் துணைவருக்கு விசுவாசமாயுள்ளவளாய் இருக்கிறாள். அவள் எந்த கொள்கையையும், ஸ்தாபன உபதேசங்களையும், உலக காரியங்களையும் புகுத்த மாட்டாள். அவள் தன் துணைவராகிய வார்த்தைக்கு விசுவாசமுள்ளவளாய் இருப்பாள்; எப்பொழுதுமே விசுவாசமுள்ளவளாய். அதன் வீடு விரும்பும் தன்மையின் காரணமாக, அது செய்திகளைக் கொண்டு செல்வதற்கென மிகவும் வெற்றிகரமாக உபயோகிக்கப்பட்டு வந்தது. அது வீட்டை விரும்புவதால், அதை எங்கு அவிழ்த்து விட்டாலும், அது தவறாது வீடு திரும்பி விடும் அதைக் குறித்து சிறிது நேரம் வலியுறுத்த விரும்புகிறேன். அப்பொழுது கிறிஸ்தவர்களாகிய நீங்கள் நான் என்ன கூறுகிறேன் என்பதை புரிந்து கொள்வீர்கள். அது எப்பொழுதுமே வீட்டுக்குச் செல்லும் வழியை கண்டு கொள்கின்றது. எனவே, செய்திகளைக் கொண்டு செல்வதற்கென அவை உபயோகிக்கப்படுகின்றன. போர் காலத்தில் ஆவை உபயோகிக்கப்பட்டு வந்தன. இப்பொழுதும் செய்திகளைக் கொண்டு செல்ல, இந்த புறாக்கள் உபயோகிக்கப்படுகின்றன. எனவே, புறா தேவனாலும், மனிதனாலும் தூதைக் கொண்டு செல்ல உபயோகிக்கும் தூதுவனாக உள்ளது. புறா ஒரு தூதுவன். அது நோவாவுக்கும் தூதுவனாக இருந்து, மறுபடியும் சமாதானம் நிலவுகிறது என்று நோவாவிடம் உரைத்தது, அது அவருடைய குமாரன் என்றும், பூமியின் மேல் சமாதானமும் மனுஷர் மேல் பிரியமும் கொண்டு வர, அவரே பலியாயிருப்பார் என்பதை உறுதிப்படுத்த அது தேவனால் உபயோகிக்கப்பட்டது. அது தூதுவனாக உபயோகிக்கப்பட்டது. 47இப்பொழுது என் மனதில் ஒரு சிறு வரலாறு எழுகின்றது. அதை ஒருமுறை ஒரு புத்தகத்தில் படித்தேன். அது என்ன புத்தகம் என்று நிச்சயமாக எனக்குத் தெரியவில்லை. அது முதலாம் உலக யுத்தத்தின் வீழ்ச்சி என்னும் புத்தகமாயிருக்கலாம். அதைக் குறித்து எனக்கு நிச்சயமாக தெரியவில்லை. அதில் நீங்கள் இந்த வரலாற்றை காணாவிட்டால். நான் கூறினது தவறு. அதை ஏதோ ஒரு புத்தகத்தில் படித்தேன்... அது பல ஆண்டுகளுக்கு முன்பு. ஆனால் அது நிச்சயமாக... அது உண்மையாக நடந்த ஒன்று. அமெரிக்க போர் வீரர்கள் ஜெர்மானியரின் மெஷின் துப்பாக்கி சுடுதலின் விளைவாக ஒரு குழியில் சிக்கிக் கொண்டனர். இராணுவ வீரர்களாகிய உங்களில் சிலர், அவர்கள் எப்படி வேவு பார்க்க சென்றிருப்பார்கள் என்பதைப் புரிந்து கொள்வீர்கள், அவர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களிடம் துப்பாக்கி வெடி மருந்து கொஞ்சம் தான் மீதியிருந்தது. ஜெர்மானியர்கள் திரளாக அணிவகுத்து எல்லாவிடங்களிலும் நகர்ந்து கொண்டிருந்தனர். அவர்களை பலப்படுத்துவதற்காக சேனைகள், சிறிது உதவி கிடைக்காவிட்டால், அவர்கள் விரைவில் மரித்துப் போவார்களென்று அறிந்திருந்தனர். அவர்கள் மரிக்கத்தான் வேண்டும். ஏனெனில் ஜெர்மானியர்கள் மலையை விட்டு கீழே இறங்கி வந்து, அமெரிக்கர்களுடைய கழுத்துக்களை கண்டு அவர்களை நோக்கி சென்று கொண்டிருந்தனர். 48அப்பொழுது அமெரிக்க வீரர்களில் ஒருவனுக்கு அவனிடம் ஒரு சிறு புறா இருந்தது ஞாபகம் வந்தது. இந்த புறா இவர்கள் முகாமிட்டுள்ள தலைமை அலுவலகத்தை அடையுமானால், அது ஒரு செய்தியை அங்குள்ளவர்களுக்கு கொண்டு செல்ல முடியும் என்பதை அவன் அறிந்திருந்தான். எனவே இவர்கள், ''நாங்கள் இந்த குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நிலையில் சிக்கிக் கொண்டிருக்கிறோம். எங்களிடமிருந்த வெடி மருந்து தீர்ந்து விட்டது, இன்னும் சில மணி நேரத்தில் நாங்கள் சரணடைய வேண்டும். அல்லது கொல்லப்பட வேண்டும்'' என்று குறிப்பு எழுதி, அதை இந்த சிறு புறாவின் பாதத்தில் கட்டிவிட்டு, அதை பறக்கவிட்டனர். புறா வீடு விரும்பும் பறவை. எனவே அது... அது என்ன செய்கிறது? அது வீடு திரும்பி, இன சேர்க்கைக்காக தன் துணையைக் கண்டு பிடிக்கிறது. அந்த பெண் புறா. இந்த ஆண் புறா வீடு திரும்ப வேண்டுமே என்று கவலை கொள்கிறது. 49அந்த புறா பறந்து சென்ற போது, ஜெர்மானியர்கள் அதை கண்டு விட்டனர். அவர்கள் என்ன செய்தனர் என்றால், அந்த புறாவை நோக்கி சுட்டனர். அவர்களில் ஒருவன் சுட்ட, 35 தோட்டா அதன் காலை உடைத்தது. மற்றொரு தோட்டா அதன் முதுகிலுள்ள பெரிய மாமிசத்தை பிய்த்து விட்டது. அதன் மார்பு நொறுக்கப்பட்டது. அதன் சிறகுகளில் ஒன்று அடிப்பட்டு, ஊனமாகி, அது பக்கவாட்டில் பறந்தது. அப்படியிருந்தும் அது பறந்து அந்த இடத்தை அடைந்தது. ஊனமடைந்து, காயப்பட்டு, உடைக்கப்பட்டு, நொறுக்கப்பட்ட போதிலும், அந்த செய்தியுடன் அது முகாமை அடைந்தது. அது மிகச் சிறந்த புறா. ஆனால், ஓ சகோதரனே, வீட்டிலிருந்து எல்லா நன்மைகளையும் விட்டு கீழே இறங்கி வந்த ஒருவரைக் குறித்து, ஏசாயா 53ம் அதிகாரம் உரைக்கிறது. நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். ஏசா;53:5. 50வியாதி, மூட நம்பிக்கை, பிசாசுகள் ஆகிய அனைத்தும் நம்மை சிக்க வைத்திருந்தன. நமக்கு வழியே இல்லாமல் இருந்தது, சபை தவறான வழியில் சென்றது. அவர்கள் ஸ்தாபன வழிகளில் ஈடுபட்டிருந்தனர் (பரிசேயர்கள், சதுசேயர்கள், கிண்ணங்கள், செம்புகள் போன்றவைகளைக் கழுவும் விஷயத்தில்). தேவனுடைய வார்த்தையை அவர்கள் அவமாக்கினர். ஆனால், இந்த சிறு புறா கீழே இறங்கி வந்தது. அங்கு ஒரு காரியம் மாத்திரமே சம்பவிக்க முடியும்: ஒரு மீட்பர் வர வேண்டும். அவர் காயப்பட்டு, அடிக்கப்பட்டு, கிழிக்கப்பட்டார். ஆனால், அவர் வீடு செல்ல வேண்டிய வழியை அறிந்திருந்தார். எனவே, இவர்கள் ஒரு கூட்டம் ஓநாய்களைப் போல் அவரை நொறுக்கி, காயப்படுத்தி, கிழித்த அந்த கல்வாரி சிலுவையில்ருந்து அவர் பறந்து சென்று பரலோகத்தின் கதவுகளை அடைந்து, ''முடிந்தது! முடிந்தது! அவர்கள் விடுதலையானார்கள். இப்பொழுது வியாதி சுகமடைய முடியும்! இப்பொழுது பாவிகள் இரட்சிக்கப்பட முடியும்! கட்டுண்டவர்கள் விடுதலையாக்கப்பட முடியும்'' என்றார். இந்த உக்கிரமான போரில் எல்லாமே அவருக்கு விரோதமாக நேர்ந்து. அவர் நொறுக்கப்பட்டு, காயப்பட்ட போதிலும்... கவிஞனும் கூட இவ்வாறு கதறினான்: பிளக்கப்பட்ட கற்பாறைகள் இருள் சூழ்ந்த வானங்கள் மத்தியில், என் இரட்சகர் தம் தலையை சாய்த்து உயிர் நீத்தார்; ஆனால் திறக்கப்பட்ட திரைச்சீலை பரலோகத்தின் மகிழ்ச்சிக்கும்; முடிவற்ற நாளுக்கும் வழியை காண்பித்தது. 51என் வாழ்நாள் முழுவதும் நான் பயங்காளியாயிருந்தேன். நான் சிறுவனாயிருந்த போது. ஏதோ ஒன்று என்னைத் தாக்கி பயமூட்டியது. ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை அது மறுபடியும் எனக்கு நிகழும். இது முதலில் தொடங்கின போது. சகோ. ஜாக் அதை அறிவார். நான் ஓராண்டு காலம் சுவிசேஷ வேலையிலிருந்து அப்பொழுது விலகியிருந்தேன்; ஏதோ ஒன்று சம்பவத்தது. ஜுமானிடா ஹெம்பஹில் பாடல்களைப் பாடும் அந்து நாளை நினைவு கூருகிறேன்... அவளுடைய பெயர் இப்பொழுது ஜுயானிடா கெல்லி என்று நினைக்கிறேன், அவளுடைய கணவர் மரித்த பின்பு, அவள் சகோ. கெல்லியை மணந்தாள். மற்றும் அன்னா ஜீன், அவர்களுடைய புகைப்படங்கள் என்னிடம் உண்டு. அவர்கள் மிகவும்... அவளுடைய... இந்த இரு பெண்களும், சகோதரி மூரும் சேர்ந்து ஒரு சிறு மூவர் பாடல் குழு அமைத்திருந்தனர். அவர்கள் சூரிய அஸ்தமனத்துக்கு அப்பால் நோக்குதல் என்னும் பாடலைப் பாடினது என்னால் மறக்கவே முடியாது. சகோ. ஜாக், பிளாரிடாவைச் சேர்ந்த அவர்களை உங்களுக்கு ஞாபகமிருக்கும் என்று நினைக்கிறேன். எவ்வளவு அருமையான பெண்கள்! 52எனக்கு நினைவிருக்கிறது. அன்று காலை இந்நாட்டின் வடபாகத்திலுள்ள ஒரு சிறு பெந்தெகொஸ்தே குழு - அவர்கள் மிச்சிகனைச் சேர்ந்தவர்கள் என்று நினைக்கிறேன் - அங்கு இந்த பெண்கள் நின்று கொண்டு; அப்பொழுது சகோ. ஹூப்பர்... அன்றிரவு அவரை இங்கு கண்டேன்... அவர் ஒருக்கால் இப்பொழுது இங்கிருக்க மாட்டார். சகோ. எட் ஹுப்பர். சகோ எட், இங்கிருக்கிறீர்களா? நான் நினைக்கவில்லை... அன்றிரவு அவர் இங்கு உட்கார்ந்து கொண்டிருந்தார்... உங்களில் பலருக்கு ஆவரைத் தெரியும். அவரும், நானும், சகோ. ஹ்லியும் வெளியே சென்றோம். அந்த மூலையில் நின்று கொண்டு பாடின அந்த பெண்கள் எங்கள் ஒவ்வொருவருக்கும் அவர்கள் தலையிலிருந்து ஒரு மஞ்சள் ரோஜாப்பூவை எடுத்துக் கொடுத்தனர். (அந்த இடத்தில் தான் அந்த பைத்தியம் பிடித்தவன் சுகமடைந்தான். பெரிய அற்புதங்கள் நிகழ்ந்தன). நான் மிகுந்த மகிழ்ச்சியோடு தெருவில் வந்து கொண்டிருந்த போது, திடீரென்று அது என்னைத் தாக்கினது. ஒரு ஆண்டுக்குப் பிறகு, நான் மறுபடியும் சுவிசேஷ வேலைக்குச் செல்வதற்கு முன்னால், அது என்னைக் கொல்லும் அளவுக்குத் துன்புறுத்தினது. 53நான் சிறுவனாயிருந்த முதற்கே, தரிசனம் என்பது என்னவென்று எனக்குத் தெரியாதென்றே நான் எப்பொழுதும் சொல்லி வந்தேன். நான் சிறுவனாயிருந்த போது, நான் பிரக்ஞையற்ற நிலையையடைந்து, அதை கண்டால் சுகமடைவேன் என்று எப்பொழுதும் கூறி வந்தேன். அந்த சமயம்... எனக்குள்ள கோளாறு என்னவென்று கண்டு பிடிக்க நான் மேயோ மருத்துவமனைக்குச் செல்ல விரும்பினேன். அங்குள்ள மருத்துவர்கள்... என் வயிறு புளிப்பாகி விடும்; ஓ, என்னே! வயிற்று வலி தாங்க முடியாது. சகோ. ஜாக், அப்பொழுது வீட்டில் எனக்கு உதவி செய்வது வழக்கம். நான் வலி தாங்காமல் இங்குமங்கும் நடப்பேன். அப்பொழுது சூடான, வழ வழப்பான தண்ணீர் போன்ற ஒன்று என் வாயிலிருந்து வெளிவரும். நான் இந்த நிலையிலேயே பிரசங்கபீடத்துக்கு சென்று, என்னைக் காட்டிலும் இருமடங்கு மோசமாயிருப்பவர்களுக்கு ஜெபிப்பேன், அவர்கள் சுகமடைவார்கள். முகத்தில் புற்று நோய் இருந்த ஒரு மனிதனின் மேல் என் கரங்களைத் தூக்கி வைக்கும்படி கூறினேன். புற்று நோய் அவருடைய முகத்தை விட்டு அகன்றது. நான் மிகவும் வியாதிப்பட்டிருந்ததால் என்னால் நிற்கவே முடியவில்லை. 54நான் பட்ட கஷ்டத்தை நீங்கள் அறிய மாட்டீர்கள். ஒருவிதமான மனக்கிலேசம். அது என் வாழ்நாள் பூராவும் ஏழாண்டுகளுக்கு ஒரு முறை வந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் தான் இப்பொழுது நான் இருக்கிறேன் - எட்டாம் முறை. எனவே நான் துயரப்பட்டு, கதறினேன், கெஞ்சினேன், முறையிட்டேன். முடிவில், மேயோ மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு செல்ல என்னிடம் போதிய பணம் உண்டென்று எண்ணி, அங்கு செல்லத் தீர்மானித்தேன். அங்கு சென்றால் உனக்குள்ள கோளாறு என்னவென்று அவர்கள் கண்டு பிடித்து விடுவார்கள் என்று கூறினார்கள். மனைவியும், நானும், பெக்கியும்.. அப்பொழுது சாராள் சிறு குழந்தை, நான் என் சுகமளிக்கும் ஊழியத்தை அப்பொழுது தான் தொடங்கின சமயம் அது. நாங்கள் மேயோ மருத்துவ மனைக்கு புறப்பட்டோம். நான் மருத்துவ பரிசோதனைக்குட்பட்டேன். அடுத்த நாள் காலையில் எனக்கு கடைசி பரிசோதனை. அதற்கு முந்தின இரவு நான் எழுந்து படுக்கையில் உட்கார்ந்து கொண்டு சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது எனக்கு முன்னால் காண்பதற்கு என்னைப் போல் உள்ள சிறுவன் நின்று கொண்டிருப்பதைக் கண்டேன். அவனுக்கு ஏறக்குறைய ஏழுவயதிருக்கும். அது நானே தான். அவன் ஒரு மரத்தின் பக்கத்தில் நின்று கொண்டிருந்தான், அந்த மரத்தின் மேல்..... 55ஒரு மரத்தின் மேல் ஒரு குச்சியை மேலும் கீழும் தேய்த்தால், இது மரப்பொந்திலுள்ள அணிலை பயப்படுத்தி வெளியே வரும்படி செய்யும் என்பதை அணில் வேட்டைக்காரர் எவரும் அறிந்ததே. அந்த தரிசனத்தில் அந்த அணில் எங்கு சென்றது என்பதை கண்டு. ''அது எப்படிப்பட்ட அணில்?'' என்று நினைத்துக் கொண்டே அந்த மரத்தை தேய்த்தேன். அப்பொழுது நான் சிறு பையனாயிருந்தது போய் சுமார் முப்பத்தெட்டு வயதுடைய ஆளாக மாறினேன். நான் அந்த கிளையைத் தேய்த்துக் கொண்டிருந்த போது, அந்த மரப்பொந்திலிருந்து இவ்வளவு நீளமான ஒரு சிறு அணில் வெளியே வந்தது. அது ஏறக்குறைய கறுப்பு நிறம் கொண்டதாயிருந்தது. அதன் மேலிருந்த சிறு பூச்சிகள் பறந்து சென்றது போல் தோன்றினது. மணிகள் போன்ற அதன் சிறு கண்கள், நான் கண்டதிலேயே மிகவும் பொல்லாத கண்கள். காண்பதற்கு அது அணிலைக் காட்டிலும் ''வீசலைப்'' (weasel) போல் இருந்தது (வீசல் என்பது எலி, மூஞ்சுறு முதலானவைகளைத் தின்னும் நீண்ட மெலிந்த உடல் கொண்ட ஒரு பிராணி - தமிழாக்கியோன்). 56அது என்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது, நான் நல்லது... என்று கூற என் வாயைத் திறந்தேன். நான் அப்படி செய்த போது, அது... என் கண்ணை சிமிட்டுவதற்கு முன்பே, அது என் வாய்க்குள் பாய்ந்து, என் வயிற்றுக்குள் இறங்கி, என்னை படாதபாடுபடுத்தி விட்டது. என் தரிசனம் கலைந்த போது, நான் கைகளையுயர்த்தி, ''ஓ. தேவனே, என் மேல் இரங்கும். அது என்னைக் கொல்லுகின்றது'' என்று நான் கூச்சலிட்டுக் கொண்டிருந்தேன். அப்பொழுது அறையில் ஒரு சத்தம் எழும்பி, ''அது ஆறு அங்குலம் நீளம்தான் என்பதை ஞாபகம் கொள்.'' எத்தனை பேர் இந்த வரலாற்றை கேட்டிருக்கிறீர்கள்? கூடாரத்திலுள்ளவர்களிடம் இதை நான் அடிக்கடி கூறியிருக்கிறேன். இது இப்படியாக சென்று கொண்டேயிருந்தது. நானும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். அடுத்த நாள் மேயோ சகோதரர்கள் என்னை பரிசோதித்து விட்டு, ''உன் தகப்பனார் ஐயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர், அவர் குடிப்பது வழக்கம். உன் தாய் பாதி இந்தியர். எனவே, நீஜாதி கலந்தவன் - (half-breed). எனவே நீ... உனக்கு பயப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து நீ விடுதலையடையவே முடியாது. மற்றபடி நீ ஆரோக்கியமுள்ளவன். இது ஆத்துமாவில் உள்ள ஒன்று, அதை மனிதனால் கட்டுப்படுத்த முடியாது. ஒரு மனிதன் மரித்த பிறகு, அவனுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய முடியாது. ஏனெனில், அவனுடைய ஆத்துமா போய்விட்டிருக்கும். இதிலிருந்து நீ விடுதலையாகவே முடியாது'' என்று சொல்லிவிட்டார். 57இந்த மருத்துவர் என்னிடம், என் தகப்பனார் எண்பத்தைந்து தொண்ணூறு வயதான போது இறந்தார் என்றும், அவர் மரிப்பதற்கு ஓரிரண்டு மாதங்களுக்கு முன்பு அவர் அவரைப் பரிசோதித்தார் என்றும், அவருடைய வாழ்நாள் முழுவதும் இது அவருக்கு உண்டாயிருந்ததென்றும். அவருக்கும் திரும்பத் திரும்ப காலவரையில் வந்து கொண்டிருந்ததென்றும் அவர் கூறினார். அவர், சிலருக்கு இது நேரிடும் போது, அவர்களுக்கு அதிக கோபம் வருகிறது. அந்த விதமான ஒன்றுதான் மனிதர்களைக் கொன்று போடும். மற்றொரு விதம் ஸ்திரீகளுக்கு மாதாவிடாய் நிற்கும் சமயத்தில் நேரிடுவது. அவர்கள் அழுது கொண்டேயிருப்பார்கள். அது துயர உணர்ச்சியை அளிக்கும். பழங்காலத்தவர் அந்நிலையை விவரிக்க (had the blues) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். அது அவர்களை விட்டுப் போகவே போகாது. அது வரும் போது, ''வயிறு புளிப்பாகிவிடும்; அவர்கள் அவதிப்படுவார்கள்'' என்றார். நான், ''ஐயா, எனக்கு அப்படியொன்றுமில்லையே நான் சந்தோஷமாகத்தானே இருக்கிறேன்'' என்றேன். அவர், ''அது சரிதான். இது மானிட மனதில் ஏற்படும் ஒன்று. இது உன் வாழ்நாள் பூராவும் உனக்கு இருக்கும்'' என்று சொல்லிவிட்டார். ஆனால், ''அது ஆறு அங்குலம் நீளம் மாத்திரமே என்று ஞாபகம்கொள்'' என்னும் வார்த்தைகள் என் நினைவில் பதிந்திருந்தது. பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கும் என் அருமை மனைவி அதைக் குறித்து உங்களிடம் கூற முடியும், ஒவ்வொரு ஆண்டும் அதைக் குறித்து சிந்தனை செய்து கொண்டே வந்தேன். 58சென்ற முறை நான் வெளிநாடு சென்று... நான் வீடு திரும்பினேன். நான் அணில் வேட்டைக்காக சென்றேன். நான் காரை விட்டு சகோ. பாங்க்ஸ் உட்டுடன் கீழே இறங்கினேன். அவர் இன்றிரவு இதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். நான் மலையின் மேல் வேகமாக ஏறினேன். அப்பொழுது என் இருதயம் என்னை விட்டு வெளியே குதித்து விடும் என்பது போன்ற உணர்ச்சி உண்டானது. நான் டாக்டர் சாம் அடேயரிடம், ''ஏன் அப்படி?'' என்று கேட்டேன். அவர், ''அடுத்த முறை அப்படி நேரிடும் போது, உன் இருதயத் துடிப்பை வரை படமாக்கிப் பார் (cardiogram) என்றார்.'' நான், ''சரியென்றேன்.'' அடுத்த ஆண்டும், அதே போன்ற உணர்ச்சி எனக்கு உண்டானது. நான் இருதய துடிப்பு வரைப்படம் எடுத்தேன் அவர், ''உன் இருதயத்தில் ஒரு கோளாறும் இல்லை. உனக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சனை உள்ளது'' என்றார். அப்பொழுது முதல் இது வரத் தொடங்கினது. 59நல்லது, வேறொரு மருத்துவர், எனக்கு நெருங்கிய நண்பர், ''அது உன் இருதயம், நீ ஜாக்கிரதையாயிருப்பது நல்லது என்று கூறி விட்டார். அந்த ஆண்டு தான் நான் சகோ. மூரை தொலைபேசியில் கூப்பிட்டு விஷயத்தை கூறின போது, எனக்குப் பதிலாக வேறு யாரையோ பிரசங்கத்துக்காக ஏற்பாடு செய்தார். நான் அப்பொழுது, சகோ. ஃபிரட்டுடன் செம்மறியாட்டுக்கடா வேட்டைக்காக சென்றேன் எனக்கு பதினாறு வயது இருந்த போது நான் செய்தது போல், நான் மலையின் மேலேறி பல மைல்கள் ஓடினேன்; ஆனால், அது என்னை சிறிதும் தொல்லைப்படுத்தவில்லை. பாருங்கள்? நான் திரும்பி சாமிடம் கூறினேன். அவர், ஏதோ கோளாறு உள்ளது. நீ ஜாக்கிரதையாயிருப்பது நலம் என்றார். அதன்பிறகு நான் தரிசனத்தில் பழமை நாகரிகம் கொண்ட ஒரு மருத்துவர் கையில் மருத்துவக் குழாயுடன் நின்று கொண்டிருப்பதைக் கண்டேன். ஒருநாள் அவர் எனக்கு முன்னால் நின்று கொண்டு. ''அது உன் இருதயம் என்று அவர்கள் கூறுவதை நம்பாதே, அது உன் வயிறு'' என்றார். அப்பொழுது நான், ''இது ஒரு தரிசனமாயிருப்பதால், இந்த வார்த்தையை நான் நம்புவேன்'' என்று நினைத்துக் கொண்டேன். பாருங்கள். 60நான் ஆப்பிரிக்காவுக்குப் புறப்பட்டேன். அங்கு செல்வதற்கு முன்பு நான் பல ஊசிகள் போட்டுக்கொள்ள வேண்டியிருந்தது. அது தான் சட்டம். இந்த ஊசிகளை நான் போட்டுக் கொண்ட போது அவர், ''உன்னில் ஒரு கோளாறையும் நான் கண்டு பிடிக்க முடியவில்லை. உன் ஹிமோக்ளோபின் தொண்ணூற்றாறு. நீ இப்பொழுது பதினாறு வயதுடையவனாயிருக்க நேரிட்டாலும், இதைக் காட்டிலும் சிறந்ததாக அது இருக்க முடியாது. இன்னும் நூறாண்டுகளுக்கு உன்னை ஒன்றும் செய்ய முடியாது. உன் சுவாசப்பைகள் எல்லாமே நன்றாயுள்ளது. உனக்கு ஒன்றுமில்லை, சர்க்கரை கூட இல்லை'' என்றார். நான் நன்றி என்று கூறினேன். நான் மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டேன். ஏனெனில் நான் ஆரோக்கிய சான்று பத்திரத்தை குழுவினிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவர், ''உனக்கு. அதைக் குறித்து ஏதாவது தெரியுமா?'' என்று கேட்டார். நான், ஒன்றுமில்லை, ஆனால் எப்பொழுதுமே வயிற்றில் அமிலம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்றேன். அவர், ''நல்லது, நான் சொல்லுகிறேன் என்றார்.'' நான், ''ஓ, எனக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. நான் மேயோ சகோதரரிடமும், மற்ற இடங்களுக்கும் சென்றிருந்தேன்'' என்றேன். 61அவர் ஒரு நிமிடம் பொறுங்கள். சில நேரங்களில், வயிற்றுப் புண் மிகச் சிறியதாயிருக்குமானால் பேரியம் ஆகாரம் (Barium meal) பரிசோதனையில் அது காணப்படாது. அது மிகப் பெரியதாயிருந்தாலும் காணப்படாது. ஏனெனில், எக்ஸ்ரே ஒரு நிழல் மாத்திரமே. சிறு வயிற்றுப் புண்னை எக்ஸ்ரேயில் ஏன் காண முடியாது என்றால், பேரியம் ஆகாரம் போதிய அளவுக்கு ஒட்டிக்கொள்வதில்லை. சிறு சிறு வயிற்றுப் புண்கள் நிறைய இருந்தால், அது இப்படித்தான் இருக்கும். இங்கு ஒரு மருத்துவர் இருக்கிறார். அவர் ஒரு இயந்திரத்தைக் கண்டு பிடித்திருக்கிறார். அவர்களிடம் அது உள்ளது. அவர்கள் கொஞ்சம் சோடியம் பென்டோதால் கொடுத்து உன்னைத் தூங்க வைத்து விடுவார்கள். பிறகு ஒரு குழாயை உங்கள் தொண்டையின் வழியாக செலுத்தி, உங்கள் வயிற்றில் என்ன கோளாறு என்று நேராகக் காண்பார்கள். அவர், உங்களவர். அவர் ஒரு கிறிஸ்தவர். அவரை, ஏன் நீங்கள் சென்று காணக்கூடாது என்றார். 62அவருடைய பெயரை நான் எழுதிக் கொண்டேன்: டாக்டர் வான் ராவன்ஸ்வர்த். நான் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பி வந்தபோது, அவரைக் காணச் சென்றிருந்தேன். ஓ, அவர் மிகவும் அருமையான முதியவர். அவர் டச்சு கிழக்கிந்திய தீவுகளிலிருந்து வந்த பல மிஷனரிமார்களில் ஒருவர். அவர் என்னைக் குறித்து கேள்விப்பட்டிருக்கிறார், என் புத்தகங்களையும் படித்திருக்கிறார். ஓ, அவர் என்னுடன் கைகுலுக்கி, ''சகோ. பிரான்ஹாமே, இந்த பரிசோதனையை உங்களுக்கு நடத்த நான் மிக்க மகிழ்ச்சி கொள்வேன். நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று சொல்கிறேன். அடுத்த வாரம் இங்குள்ள மருத்துவமனைக்குச் செல்லுங்கள். போவதற்கு முன்பு என்னைக் கூப்பிடுங்கள். நான் உங்களுக்கு சோடியம் பென்டோதால் ஊசி போட வேண்டும். அப்பொழுது அது உங்களை ஐந்து நிமிடங்கள் தூங்க வைக்கும்'' என்றார். என் மகள் பல்லைப் பிடுங்கிக் கொள்வதற்காக அந்த ஊசி போட்டுக் கொண்டாள்: சகோ. நார்மனின்மகளும் கூட, ''ஐந்து நிமிடம் தூக்கம் தானே, அதனால் பாதகமில்லை'' என்று எண்ணினேன். அவர்கள், ''வயிற்றினுள் என்ன இருக்கிறது என்று பார்த்தால் எனக்கு திருப்தியாயிருக்கும்'' என்று எண்ணினேன். 63அடுத்த நாள் காலை. நான் படுக்கையிலிருந்து எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தேன். என் கட்டிலுடன் இணைந்த கட்டிலை நான் பார்த்த போது, என் மனைவி உறக்கத்தினின்று எழுந்திருக்கவில்லை. நான் ஜன்னலின் வழியாக உயரமான கடலினா மலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கு கர்த்தருடைய தூதன் என் கையில் அந்த பட்டயத்தை போட்ட இந்த இடத்தையும் நீங்கள் படத்தில் காணும் ஏழு தூதர்கள் தோன்றின அந்த இடத்தையும் பார்த்துக் கொண்டேயிருந்தேன். அங்கு பெரிய காரியங்கள் நிகழ்ந்தன. நான் பார்த்துக் கொண்டேயிருந்த போது, நான் தரிசனத்துக்குள்ளாகி. அந்த அணில் இருந்த மரத்தடியில் நின்று கொண்டிருந்தேன். நான் மேலே நோக்கி, ''அது தான் அணிலின் இருப்பிடம்'' என்றேன். ''அந்த அணில் இன்னும் அங்கு இருக்குமா?'' என்று வியந்தேன் (அந்த தரிசனத்தில்). நான் மரத்தின் கிளையை ஆட்டின போது, அந்த அணில் வெளியே வந்தது. நான் என் கண்ணைச் சிமிட்டுவதற்கு முன்பு அது நான் கண்டதிலேயே மிகவும் விசித்திர தோற்றமுள்ள அணில்; (இந்த அடையாளங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், என் ஊழியத்தைக் குறித்து நீங்கள் அறிந்திருக்க வேண்டும்) அது என்மேல் பாய்ந்தது. ஆனால் அதன் குறி தவறினது. அது வாய்க்குள் போகாமல், என் மார்பின் மேல் பட்டு கீழே விழுந்து விட்டது. இப்படி நடந்தவுடன் ஏதோ ஒன்று. ''கடலினா மலைகளுக்குச் செல்'' என்று கூறக் கேட்டேன். 64நான் திரும்பிப் பார்த்தேன். ''மேடா, உறக்கத்தினின்று எழுந்து விட்டாயா, தேனே?'' என்று சொல்லி அவளை எழுப்பினேன். அவள், ''என்ன விஷயம்?'' என்றாள். அப்பொழுது விடியற்காலை ஐந்து மணியிருக்கும். நான், ''நான் வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். மறுபடியும் அந்த அணினைக் கண்டேன், தேனே என்றேன். அவள், ''எந்த அணில்?'' என்றாள். நான், ''மேயோவின் மருத்துவமனையில் நான் இருந்த போது கண்ட அணில். என்ன தெரியுமா? இந்தமுறை அது என் வாய்க்குள் பாயத் தவறிவிட்டது, அது என் மார்பின் மேல்பட்டு கீழே விழுந்தது. ''தேவனுக்கு ஸ்தோத்திரம்! நான் சிறுவனாயிருந்த முதற்கே, இப்படி நடக்க வேண்டுமென்று ஆவலாயிருந்தேன். அப்படி நடப்பதை நான் காண முடிந்தால்... தரிசனம் என்றால் என்னவென்று நான் அறிவதற்கு முன்பே, அப்படி நடப்பதை நான் காண நேரிட்டால் நான் சுகமடைந்து விடுவேன், அது என்ன கூறுகிறதோ, அப்படித்தான் நான் இருப்பேன்'' என்று கூறினேன். ''நாற்பது ஆண்டுகளாக இதற்காக காத்துக் கொண்டிருந்தேன்.அது இப்பொழுது நடந்து விட்டது'' என்றேன். முன்பு நான் மேயோ மருத்துவமனையில் இருந்த போது, அவர்கள் இதை எனக்கு அறிவித்த போது. நான் படுக்கையில் விழித்துக் கொண்டு இருந்த போது, இந்த தரிசனத்தைக் கண்டேன்.... 65என் தாயார் மகிமைக்குள் பிரவேசித்து விட்டார்கள். அவர்கள் மிகவும் வினோதமானவர்கள். அவர்கள் வாழ்ந்த நாட்களில் மூன்று அல்லது நான்கு சொப்பனங்களைக் கண்டார்கள். அவையாவும் எப்பொழுதும் உண்மையாகவே இருந்தன. அவர்கள் சொப்பனத்தை என்னிடம் சொல்லத் தொடங்கினார்கள். நான், ''அம்மா... நிறுத்திக் கொள்ளுங்கள். மீதியான சொப்பனத்தை நான் கூறுகிறேன்'' என்று சொல்லி அதைக் கூறுவேன். பாருங்கள்? அர்த்தம் உரைப்பதற்காக என்னிடம் நீங்கள் சொப்பனத்தைக் கூறும் போது, நீங்கள் கண்ட விதமாகவே அதை என்னிடம் கூறுவதில்லை, அதை நான் தரிசனத்தில் காணும் போது, நீங்கள் சொப்னத்தில் கண்டதை நான் அப்படியே காண்கிறேன், பிறகு அதன் அர்த்தம் என்னவென்று அவர் என்னிடம் உரைக்கிறார். பாருங்கள்? உங்கள் சொப்பனத்தை நீங்கள் என்னிடம் கூற வேண்டிய அவசியமில்லை. அவர் சொப்பனத்தையே எனக்குக் காண்பித்து விடுகிறார். பாருங்கள்? பிறகு நான், ''நீங்கள் இதை கூற மறந்து விட்டீர்களே; அதை கூற மறந்து விட்டீர்களே'' என்கிறேன். பாருங்கள்? சொப்பனத்தின் அர்த்தத்தை உரைக்க வல்ல தேவன், அந்த சொப்பனத்தையும் காண்பித்து தர முடியும். அவர் ஒன்றைக் காண்பிப்பாரானால், அதன் அர்த்தத்தை இவரால் உரைக்க முடியும். 66அவ்வாறு வேதாகமத்தில் ஒரு சம்பவம் உள்ள தல்லவா? உன்னால்... நான் - நான்... அது என் நினைவுக்கு வந்தது. அது, ''தானியேல், அல்லவா? இல்லை, யோசேப்பு. அது வேதத்தில் எங்கோ உள்ளது. எனக்கு ஞாபகம் வந்தது. சொப்பனம் என்னவென்று உன்னால் கூற முடியுமானால்....'' ஓ, அது நெபுகாத்நேச்சார் ராஜா, அது சரி. அவன் உங்களால் முடிந்தால்... உங்களால் முடியாவிட்டால்... என்றான். மந்திரவாதிகள், சொப்பனத்தை சொல்லும் என்றனர். அவன், ''சொப்பனம் எனக்கு மறந்துவிட்டது'' என்றான். அது சரி. எனக்கு அது ஞாபகம் வந்தது. இப்பொழுது கவனியுங்கள். நான் திரும்பி வந்த போது, அம்மா, பில்லி இங்கு அருகில் வந்து உட்காரு. நான் விசித்திரமான ஒரு சொப்பனம் கண்டேன் சொப்பனத்தில் நீ வியாதிப்பட்டு மரணத்தருவாயில் இருந்தாய். உன் வயிறு வழக்கம் போல் இருந்தது என்றார்கள். அவர்கள் எத்தனை விதமான ஆகாரம் எனக்கு சமைத்து கொடுத்திருக்கிறார்கள்! அவர்கள், ''நீ மலையின் மேல் வீடு கட்டிக் கொண்டிருத்தாய். அப்பொழுது ஆறு வெள்ளை புறாக்கள் வடிவில் பரலோகத்திலிருந்து சத்தமிட்டு பறந்து வந்து உன் மார்பின் மேல் உட்காருவதைக் கண்டேன். அதை நீ பார்த்துக் கொண்டிருந்த போது. முன்னால் இருந்த புறா உன்னிடம் எதையோ கூற முயன்றது. அவை உண்மையில் பளபளப்பான வெள்ளைப் புறாக்கள். அவை தங்கள் சிறு தலைகளை உன் கன்னத்தின் மேல் வைத்து, ''கூ, கூ, கூ'' என்று சத்தமிட்டன. என்னால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. ''கூ, கூ, கூ'' என்று அவை சத்தமிட்டுக் கொண்டிருந்தன என்றார்கள். நான், ''ஓ, எனக்குப் புரிந்து விட்டது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!'' என்றேன். அவர்கள், அவை மறுபடியும் 'S' வடிவில், ''கூ கூ கூ'' என்று சத்தமிட்டுக் கொண்டே வானத்தில் பறந்து சென்று வீடு திரும்பின என்றார்கள். நான் கண்ட அந்த சிறு மிருகம், ஆறு அங்குலம் நீள முள்ளது. அம்மா கண்டதும் ஆறு புறாக்கள். 'ஆறு' என்னும் எண் முடிவாகாத ஒன்று. என்றாவது ஒரு நாள் நான் ஏழாவதைக் காண்பேன் என்று அறிந்து கொண்டேன். அது மனிதன் அவதிப்படுதல்: அது இப்படியாக சென்று கொண்டேயிருந்தது. 67அன்று காலை அந்த தரிசனத்தை நான் கண்ட பிறகு எழுந்தேன்; நான் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தேன். என் சிறு பையன் ஜோசப்பை நான் பள்ளிக்கூடத்துக்கு கூட்டிச் சென்றேன் (அவன் இப்பொழுது டூசானில் நான் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறான்). நான் அவனை பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச் சென்ற போது, மேடாவிடம், நான் எப்பொழுது திரும்பி வருவேன் என்று தெரியாது என்று கூறிச் சென்றேன். நான் கடலினா மலையடிவாரத்துக்குச் சென்று, கர்த்தருடைய தூதன் என் கையில் பட்டயத்தை போட்ட அந்த இடத்தை அடைந்தேன். அப்பொழுது காலை நேரமாயிருந்தது. அங்கிருந்து மலையின் மேலேறத் தொடங்கினேன். நான் சிகரங்களுக்கு இந்த வழியாய் போவதற்குப் பதிலாக அங்கு நிறைய பாம்புகளும், தேள்களும் உண்டு. (அரிசோனா எப்படியென்று உங்களுக்குத் தெரியும்), நான் வலது பக்கம் திரும்பினேன். ஒரு சத்தம், வலது பக்கம் திரும்பு என்று கூறினது. நான் சிகரங்களை அடைந்து, அந்த பிரம்மாண்டமான பாறைகளைச் சுற்றி வந்து கொண்டிருந்தேன். அந்த பாறைகள் இந்த கூடாரத்தைக் காட்டிலும் பல மடங்கு பெரியவை. அந்த உயரத்தில் நான் படுத்து இளைப்பாறினேன், அந்த உயரத்தில் மனிதன் செல்வது மிகவும் அபூர்வம். 68ஏறக்குறைய பதினொன்று மணிக்கு ஒரு சிறு குகைக்குள் நுழைந்தேன். அந்த இடம் மான்கள் செல்லும் பாதையில் இப்படி சிறிது உள்ளே திரும்பியிருந்தது. என் சட்டையைக் கழற்றிவிட்டு, என் கையில் தொப்பியை பிடித்துக் கொண்டிருந்தேன். ஏனெனில் எனக்கு அதிகமாக வியர்த்து, வியர்ப்பினால் குளித்தது போலாயிற்று. அந்த சிறு குகைக்குள் சென்றவுடனே, நான் கர்த்துருடைய பிரசன்னத்தை உணர்ந்தேன். என் தொப்பியை கீழே போட்டுவிட்டு, சுற்று முற்றும் பார்த்து, ''அவர் இங்கு எங்கோ இருக்கிறார், அவர் இங்கிருக்கிறார் என்றறிவேன்'' என்று நினைத்துக் கொண்டேன். ''இது என்ன?'' என்று எண்ணிக் கொண்டே, சில அடிகள் எடுத்து வைத்தேன். ''கர்த்தாவே, இங்கு எங்கோ நீர் இருக்கிறீர்'' என்றேன். நான் நோக்கின போது, பாதையில் அந்த சிறு அணில் விழுந்து கிடந்தது. அது ஏதோ ஒன்றின் மேல் தாவின போது தவறி, இடம் மாறும் முட்செடியின் மேல் மோதி, அதன் தலை, மார்பு, வயிறு எல்லாமே அதில் சிக்கி செத்து போய் கிடந்தது. விசித்திர தோற்றம் கொண்ட அந்த சிறு அணில் என் வாய் குறியைத் தவறி, அந்த முட்செடியில் மோதிக் கொண்டது. கர்த்தருடைய சத்தம், உன் சத்துரு மாண்டு விட்டது என்றுரைத்தது. நான் நடுங்கிக் கொண்டே அங்கு நின்றேன். என் அளவு கோலை எடுத்து.... 69வழக்கமாக காகங்கள் அதை தின்றிருக்கும். நான் ஒரு பாம்பைக் கொன்றேன். இரண்டு நாட்கள் கழித்து அது தெருவில் அரை மணி நேரம் கிடந்திருந்தது. கழுகுகளும், காகங்களும் அங்கு பறந்த வண்ணமாகவே இருக்கும். அவைகள் அதை உடனடியாக கொத்திக் கொண்டு சென்றுவிடும். நான் ஒரு கோரல் பாம்பை (coral snake) கொன்றேன். அதுவே நமக்குள்ள மிகவும் விஷமுள்ள பாம்பு; அது என் பக்கத்தில் படுத்துக் கொண்டிருந்தது. சில நாட்கள் கழித்து. அதைக் கொண்டு போய் காண்பிக்கலாம் என்று நான் திரும்பி வந்தபோது, அங்கு பறந்து வந்து அண்டங்காக்கைகள் அதை கொண்டு சென்று விட்டிருந்தன. ஆனால், இந்த அணிலோ நான் தரிசனம் கண்ட அன்று முதற்கு அங்கேயே கிடந்திருந்தது. நான் தரிசனம் கண்டு இரண்டு நாட்களாயின. அது ஒரு சனிக்கிழமை என்று நினைக்கிறேன். நான் திங்கட்கிழமை மலையின் மேல் சென்றேன். அது அங்கு கிடந்திருந்தது. என் காலால் அதை நசுக்கினேன். 70நான் திரும்பி வந்து, உட்கார்ந்து, சிறிது நேரம் அழுது விட்டு, ஜெபித்தேன்; அநேக மைல்கள் கீழேயுள்ள டூசானை நோக்கிக் கொண்டிருந்தேன். சிறிது கழிந்து நான் மீண்டும் திரும்பி வந்த போது, அது அப்பொழுதும் அங்கேயே கிடந்திருந்தது. அந்த குகைக்குள் நான் பிரவேசித்த போது, தேவனுடைய ஆவி மறுபடியும் என் மேல் வந்தார். நான் சுற்றி வந்தேன், மலையின் கீழே சென்றேன். நான் சென்று என் மனைவியிடம், ''தேனே, எனக்கு எப்படியென்று தெரியாது. ஆனால் நான் சுகமடையப் போகிறேன் என்றேன்.'' டாக்டர். ராவன் ஸ்வர்த் என்னைப் பரிசோதித்த போது, ''நீங்கள் சுகமடைவதென்பது முற்றிலும் முடியாத காரியம்'' என்று கூறினார். நான் ஐந்து நிமிடங்கள் உறங்குவதற்கென அவர் எனக்கு பென்டோதால் ஊசி போட்டார், ஆனால் நானோபத்து மணி நேரம் உறங்கினேன். அப்படிப்பட்ட பொருள், ஒரு ஆஸ்பிரின் மாத்திரையும் கூட, என்னை அதிக நேரம் உறங்க வைத்துவிடுகிறது. எனவே அவர்கள்... அவர் எனக்கு ஊசிபோட்டு விட்டு, அந்த குழாயை என் தொண்டையின் வழியாக செலுத்தினார். நான் உறக்கத்திலிருந்து எழுந்த பிறகு. அடுத்த நாள் காலையில் அவர், போதகரே. இதை உங்களுக்குச் சொல்ல எனக்கு விருப்பமில்லை. உங்கள் வயிற்றின் சுவர்கள் கடினப்பட்டு உலர்ந்து போய் விட்டன என்றார். (அதை நான் காணவில்லை; அவர் 'காஸ்ட்ரைட்டிஸ்' (gastritis) என்னும் பெயரை உபயோகித்தார். அதன் அர்த்தத்தை நான் அகராதியில் நோக்கின போது, அது உலர்ந்து போன ஒன்று என்று இருந்தது). அவர், ''அதிலிருந்து நீங்கள் சுகமடையவே முடியாது. அது எப்பொழுதும் இருக்கும்'' என்று கூறிவிட்டார். கர்த்தருடைய தரிசனத்தை மாத்திரம் நான் காணாமல் போயிருந்தால், அதிகம் சோர்ந்து போயிருப்பேன். 71அடுத்த நாள் ஒரு சத்தம், ''மறுபடியும் மலைக்குப் போ'' என்றது. அன்று ஒரு வழியாகப் போவதற்கு பதிலாக, வேறொரு வழியாக போகும்படி ஏவப்பட்டேன். நான் அங்கு நின்று கொண்டிருந்தேன். அப்பொழுது, அதோ அந்த ஏழாம் சிறு வெள்ளைப் புறா என் முன்னால் உட்கார்ந்து கொண்டு, என்னையே பார்த்துக் கொண்டிருந்தது. என் கண்களை நான் தேய்த்தேன். ''நிச்சயமாக அது ஒரு தரிசனம்;'' நான் நிச்சயமாக அது என்றேன். நான் உற்று பார்த்தேன். சிறு புறாவே நீ எங்கிருந்து வருகிறாய்? என்று கேட்டேன். அது அழகாகவும், வெண்மையாகவும் இருந்தது. அது வீட்டுப் புறாவாக இருக்கும். எதுவாயிருந்தாலும், அந்த காட்டில் அவ்வளவு தூரத்தில். நான் உண்மையைக் கூறுகிறேன் என்றும் பொய்யுரைக்கவில்லையென்றும், இயேசு கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பின சர்வவல்லமையுள்ள தேவன் அறிவார். நான் அவருடைய ஊழியக்காரன். அவருடைய வேதாகமம் எனக்கு முன்பாக இப்பொழுது திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. அந்த புறா அங்கு உட்கார்ந்து கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தது. நான் சுற்றுமுற்றும் நடந்தேன். நான், ''நிச்சயமாக அது ஒரு தரிசனம் என்று நினைத்தேன். என் தலையைத் திருப்பி, திரும்பிப் பார்த்தேன். அது அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தது; சிறு பனிவெண்மை சிறகுகள்; இதன் சிறு மஞ்சள் கால்கள்; சிறு மஞ்சள் அலகு. அது உட்கார்ந்து கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தது. அது மேற்கு பாகத்தை நோக்கிக் கொண்டிருந்தது. நான் அதனருகில் இப்படி நடந்து சென்றேன். அதை நான் எக்காரணத்தைக் கொண்டும் தொட விருப்பமில்லை. நான் பாதையில் நடந்து திரும்பி வந்தேன், திரும்பிப் பார்த்தேன், அது இப்பொழுதும் அங்கு உட்கார்ந்து கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தது. சகோதரனே, ஆபிரகாமின் குமாரன் என்னும் முறையில், மருத்துவர் என்னிடம் கூறினதை நான் பொருட்படுத்த மாட்டேன். எப்படியானாலும் நான் சுகமடையப் போகிறேன்! 72மூன்றாம் நாள் நான் மலைக்கு திரும்பச் செற்றேன். நான் உயர ஏறிக் கொண்டிருந்தேன். ஒரு இந்தியத் தலைவன் அந்த சிறு குதிரையின் மேல் மேற்கு திசையை நோக்கி சவாரி செய்ததைக் குறித்த தரிசனம் உங்கள் அநேகருக்குத் தெரியும். ஏதோ ஒன்று என்னை ஒரு பெரிய கற்பாறைக்கு கவர்ந்தது. அப்பொழுது உச்ச நேரம். அவர், ''உன் கைகளை அதன்மேல் வைத்து ஜெபி'' என்றார். நான் கூறுவது உண்மையென்று பரலோகத்தின் தேவன் அறிவார். அந்த பாறையின் மேல் நான் கைகளை வைத்து வானத்தை நோக்கி ஜெபிக்கத் தொடங்கினேன். அப்பொழுது ஒரு சத்தம் மலையின் உச்சியிலிருந்து புறப்பட்டு வந்து, ''எதன் மேல் சாய்ந்துக் கொண்டிருக்கிறாய், உன் இருதயத்தின் மேலா?'' என்று கூறுவதைக் கேட்டேன். நான் இப்படி எழுந்தேன். என் திறந்த தோள்கள், இடுப்பிலிருந்து மேல் வரைக்கும் ஒன்றும் உடுக்கவில்லை, மிக வெப்பமாயிருந்தது. நான் பார்த்த போது, அந்த பாறையிலிருந்த வெள்ளைப்படிகக் கல்லில், ''வெள்ளை கழுகு'' என்று எழுதப்பட்டிருந்தது. யார் மூலம் அடுத்த செய்தி - வருமென்று இந்த தரிசனம் கூறினவிதமாகவே. நான் அதிக உணர்ச்சி வசப்பட்டேன். நான் வீட்டுக்கு ஓடிச்சென்று காமிராவை எடுத்துக் கொண்டு அடுத்த நாள் சென்று அதை புகைப்படம் எடுத்தேன். அது அப்பொழுதும் பாறையில், ''வெள்ளை கழுகு'' என்று எழுதப்பட்டிருந்தது. புறா கழுகை நடத்திச் செல்லுதல். 73எப்படியோ எனக்குத் தெரிந்து விடுகிறது. அது நடப்பதற்கு முன்பே உங்களிடம் நான் கூறி விடுகிறேன். மருத்துவர் மிகவும் நல்லவர்... அவர் சிறந்த மருத்துவர் என்பதில் ஐயமில்லை. அவர் மிகவும் அருமையானவர். ஆனால் நான் இதிலிருந்து மீளப்போகின்றேன் என்று எனக்குத் தெரியும். அது முடிந்து விட்டது! நான் சுகமடையப் போகின்றேன். சற்றுமுன்பு எர்னி பாடின புறாவின் சிறகுகள் மேல் என்னும் பாடலை நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அதன் ராகம் எப்படி? எர்னி, அதை எனக்குத் தொடங்கித் தாருங்கள். .................பனி-வெண்புறா சிறகுகள், ( என்னுடன் கூட சேர்ந்து பாடுங்கள்) தேவன் தம் தூய, இனிய அன்பை கீழே அனுப்புகிறார், இது புறாவின் சிறகுகள் மேல், பரத்திலிருந்து வரும் ஓர் அடையாளம். எர்னி இரண்டு சரணங்களை மாத்திரமே பாடினார் என்று நினைக்கிறேன். உங்களுக்கு நான் மூன்று சரணங்களைப் பாடப் போகின்றேன். நோவா வெள்ளத்தின் மேல், பல நாட்கள் மிதந்து சென்றான். அவன் வெவ்வேறு வழிகளில் தரையைத் தேடினான். அவனுக்கு சில தொல்லைகள் இருந்தன, ஆனால், அவை பரத்திலிருந்து அல்ல, தேவன் புறாவின் சிறகுகள் மேல், அவனுக்கு ஓர் அடையாளம் தந்தார். பனி-வெண்புறா சிறகுகள் மேல், தேவன் தம் தூய, இனிய அன்பை, கீழே அனுப்புகிறர், அது புறாவின் சிறகுகள் மேல் பரத்திலிருந்து, வரும் ஓர் அடையாளம். நமது இரட்சகர் இயேசு, ஒரு நாள் பூமிக்கு வந்தார், அவர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார், வைக்கோல் முன்னணையில். அவர் புறக்கணிக்கப்பட்டார், ஆனால் பரத்திலிருந்து அல்ல. தேவன் புறாவின் சிறகுகள் மேல், நமக்கு ஓர் அடையாளம் தந்தார், பனி-வெண்புறா சிறகுகள் மேல், தேவன் தம் தூய, இனிய அன்பை, கீழே அனுப்புகிறார். இது புறாவின் சிறகுகள் மேல், பரத்திலிருந்து வரும் ஓர் அடையாளம். நான் அநேக வழிகளில், அவதியுற்ற போதிலும், இரவும், பகலும் நான் சுகத்திற்காக கதறி அழுதேன். ஆனால் பரத்திலுள்ள பிதாவினால் விசுவாசம், மறக்கப்படவில்லை. அவர் எனக்கு தமது அடையாளத்தை, புறாவின் சிறகுகள் மேல் தந்தார். பனி-வெண்புறா சிறகுகள் மேல், தேவன் தம் தூய, இனிய அன்பை கீழே, அது புறாவின் சிறகுகள் மேல், பரத்திலிருந்து வரும் ஓர் அடையாளம். 74அன்புள்ள தேவனே, இவைகளுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன், பிதாவே, நீர் நோவாவுக்கு ஒரு அடையாளம் தந்தீர். நீர் உலகத்துக்கு ஒரு அடையாளம் தந்தீர். நீர் எனக்கு ஒரு அடையாளம் தந்தீர். அடுத்த நாள், அந்த கழுகு பறப்பதைக் கண்ட போது, ஓ தேவனே, இப்பொழுது ஒரு செய்தி வந்து கொண்டிருக்கிறது. தேவனே, புறா இதை வழி நடத்த நீர் செய்ய வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். கர்த்தாவே, இதை அருளும். அது இதுவரை எனக்கு இல்லாத ஒரு விசுவாசத்துக்கு என்னை வழி நடத்தியுள்ளது. தேவனே, அது குணமாகிவிடுமென்று நானறிவேன். பிதாவே, அதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். இன்றிரவு கர்த்தாவே, மறுபடியுமாக உம்முடைய செய்தியை வார்த்தையாகிய புறாவின் சிறகுகள் மேல் அனுப்புவீராக. அன்புள்ள பரலோகப் பிதாவே, அதை அருளும். இன்றிரவு இந்த மேடையைக் கடந்து செல்லும் ஒவ்வொருவருக்கும், மற்றும் தேசம் முழுவதிலும் இதைக் கூட்டங்களில் கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கும்; உமது மகத்தான புறாவாகிய விசுவாசம் அவர்களுடைய இருதயங்களை அடைந்து, கர்த்தாவே, அவர்கள் குணமாவதற்கு அவசியமான விசுவாசத்தை அவர்களுக்கு அருளுவீராக. தேவன் பட்சபாதமுள்ளவர் அல்ல என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அவர் நோவாவுக்கு செய்தியையும், யோவான் ஸ்நானனுக்கு செய்தியையும், எனக்கு செய்தியையும் அனுப்பினாரென்றால், அவர் மற்றவர்களுக்கும் அனுப்ப முடியும். கர்த்தாவே, ''அந்த புறா பொன் நிறமுள்ள தன் அலகுடன் இப்பொழுதே ஒவ்வொருவருடைய இருதயத்துக்குள்ளும் பறந்து சென்று அவருடைய தழும்புகளால்... என் காயங்களாலும், தழும்புகளாலும் குணமாகி விட்டீர்கள்'' என்று மெல்ல உரைக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். தேவனே, எங்கள் மீறுதல்கள் நீக்கப்படவும், எங்கள் அக்கிரமங்கள் மன்னிக்கப்படவும், எங்கள் வியாதிகள் சுகமடையவும் அருள் புரிவீராக. பிதாவே, அது உமது கரங்களில் உள்ளது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். இன்னும் ஒருநிமிடம் தலை வணங்கியிருங்கள். 75உங்களில் எத்தனை பேர், சகோ. பிரான்ஹாமே. என் வாழ்க்கை பூராவும் நான் தவறாயிருந்து வந்திருக்கிறேன். நான் தேவனைச் சேவிக்க வேண்டுமென்று விரும்பியதுண்டு. ஆனால், இன்றிரவு என்னை ஒப்புவிக்க ஆயத்தமாயிருக்கிறேன். அந்த புறா இன்றிரவு என் இருதயத்துக்குள் பறந்து வர வேண்டுமென்று தேவனை வேண்டிக் கொள்ளுங்கள். ''அது அருகில் வந்து இறகுகளை அடிப்பதை என்னால் உணர முடிகின்றது“ என்று கூறவிரும்புகிறீர்கள்- உங்களால் கூடுமானால், அப்படி கூற விருப்பமானால் உங்கள் கைகளையுயர்த்துங்கள், அப்படி செய்வீர்களா? நான் காணும் இந்த கூட்டத்தினரில், என்னே, கட்டிடம் முழுவதும் கைகள் உயர்த்தப்பட்டுள்ளன. தேசத்தின் மற்ற பாகங்களிலுள்ள கூட்டத்தினர்; சகோ. ஹண்ட் மற்றும் சகோ. கோல்மன், சகோ. லியோவும் மற்றவர்களும், டூசான், பிரான்ஹாம் கூடாரம், மேற்கு கடற்கரையிலுள்ளவர்கள், எல்லாவிடங்களிலும் உங்கள் கைகளையுயர்த்துங்கள். ''புறா இன்றிரவு என் இருதயத்துக்குள் பறந்து வந்து, பரிசுத்த ஆவியாகிய பனி-வெண்புறா சிறகுகள் மேல் தேவனுடைய இனிய அன்பை எனக்குக் கொண்டு வர வேண்டுமென்று விரும்புகிறேன். கர்த்தாவே, இன்றிரவு அதை என்னிடம் கொண்டு வந்து, எனக்குத் தேவையான விசுவாசத்தை என் இருதயத்தில் அளிப்பீராக. தேவனே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எங்கள் பாவங்களை மன்னிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன். ஓ தேவனே, காயப்பட்ட புறா முடிந்தது'' என்னும் செய்தியை எங்களுக்கு கொண்டு வந்துள்ளது. அதை நாங்கள் விசுவாசிக்கிறோம். அதை விசுவாசிக்க எங்களுக்கு விசுவாசத்தை தாரும் இயேசுவின் நாமத்தில், ஆமென். பனி - வெண்புறா சிறகுகள் மேல், தேவன் தம் தூய, இனிய அன்பை கீழே அனுப்புகிறார். அது புறாவின் சிறகுகளின் மேல், பரத்திலிருந்து வரும் ஓர் அடையாளம். 76அந்த புறா எங்கிருந்து வந்தது? எனக்குத் தெரியாது. அது காட்டில் இருந்திருக்க முடியாது. இல்லை, இல்லை! இல்லை, அது. அங்கிருக்க வழியேயில்லை. அது ஏன் வெண்மையாயிருந்தது?அது என் சட்டையைப் போல் வெண்மையாயிருந்ததென்று பரலோகத்தின் தேவன் அறிவார். பனி-வெண்புறா சிறகுகள் மேல், தேவன் தம் தூய, இனிய அன்பை கீழே அனுப்புகிறார். அது புறாவின் சிறகுகள் மேல், பரத்திலிருந்து வரும் ஓர் அடையாளம். பனி-வெண்புறா சிறகுகளின் மேல், தேவன் தம் தூய, இனிய அன்பை கீழே அனுப்புகிறார். ஆது புறாவின் சிறகுகள் மேல், பரத்திலிருந்து வரும் ஓர் அடையாளம். ஓ, உங்களுக்குத் தாழ்மையான உணர்ச்சி ஏற்படுகிற தல்லவா? நாம் ஒருவரோடொருவர் கைகுலுக்கி. இதை பாடுவோம்: பனி-வெண்புறா சிறகுகள் மேல், தேவன் தம் தூய, இனிய அன்பை கீழே அனுப்புகிறார். அது புறாவின் கிறகுகள் மேல், பரத்திலிருந்து வரும் ஓர் அடையாளம். அவரிடம் நமது கரங்களையுயர்த்தி, இதை பாடுவோம்! பனி-வெண்புறா சிறகுகள் மேல், தேவன் தம் தூய, இனிய அன்பை கீழே அனுப்புகிறார். அது புறாவின் சிறகுகள் மேல், பரத்திலிருந்து வரும் ஓர் அடையாளம். நோவா வெள்ளத்தின் மேல், பல நாட்கள் மிதந்து சென்றான். அவன் இவவ்வேறு வழிகளில், தரையைத் தேடினான். அவனுக்கு சில தொல்லைகள் இருந்தன, ஆனால் அவை பரத்திலிருந்து அல்ல, தேவன் புறாவின் சிறகுகள் மேல், தமது அடையாளத்தை அனுப்பினார். பனி-வெண்புறா சிறகுகள் மேல், தேவன் தம் தூய, இனிய அன்பை கீழே அனுப்புகிறார். அது புறாவின் சிறகுகள் மேல், பரத்திலிருந்து வரும் ஓர் அடையாளம். நமது இரட்சகர் இயேசு, ஒரு நாள் பூமிக்கு வந்தார். அவர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார், வைக்கோல் முன்னணையில். அவர் இங்கு புறக்கணிக்கப்பட்டார், ஆனால் மரத்திலிருந்து அல்ல. தேவன் புறாவின் சிறகுகள் மேல், நமக்கு ஓர் அடையாளம் தந்தார். பணி-வெண்புறா சிறகுகள் மேல், தேவன் தம் தூய, இனிய இன்பை கீழே அனுப்புகிறார். அது புறாவின் சிறகுகள் மேல், பரத்திலிருந்து வந்த ஓர் அடையாளம். 77வயோதிபனான நான் என் வாழ்நாள் முழுவதும் அவதிப்பட்டேன். அவர் ஏன் இப்பொழுது என்னை சுகப்படுத்தினார்? இந்த பாதையில் நான் இன்னும் ஒருமுறை சவாரி செய்வேன் என்று நம்புகிறேன், நான் ஒரு செய்தியைக் கொண்டு வர வேண்டும்! இன்றிரவு என் பிதாவிடம் நான் கூறுவது என்னவெனில் (இந்த புறாவின் சிறகுகள் இங்குள்ள இந்த ஜன்னல்களின் வழியாக பறந்து வந்ததாக அன்றொரு இரவு ஜுனியர் சொப்பனம் கண்டது போல்). கர்த்தாவே, உமது ஊழியன் ஊழியத்துக்காக ஆஜாராகிறேன் என்பதே, ஆமென். நான் ஆயத்தமாயிருக்கிறேன். பனி-வெண்புறா சிறகுகள் மேல், தேவன் தம் தூய, இனிய அன்பை கீழே அனுப்புகிறார். அது புறாவின் சிறகுகள் மேல், பரத்திலிருந்து வரும் ஓர் அடையாளம். அவர் கூட்டத்தின் மேல் இப்பொழுது அசைவாடுகின்றார் என்று விசுவாசிப்போம். பனி-வெண்புறா சிறகுகள் மேல்.... (கர்த்தாவே, நாங்கள் காத்திருக்கிறோம்) தேவன் தம் தூய, இனிய அன்பை கீழே அனுப்புகிறார். அது புறாவின் சிறகுகள் மேல், பரத்திலிருந்து வரும் ஓர் அடையாளம். 78ஜெப அட்டை வைத்துள்ளவர்கள், இந்த உட்பாதையில் உள்ளவர்கள். நடந்து இங்கு வாருங்கள்; எழுந்து நின்று, இந்த பக்கம் நடந்து வாருங்கள். பனி-வெண்புறா சிறகுகள் மேல், தேவன் தம் தூய, இனிய அன்பை கீழே அனுப்புகிறார். அது புறாவின் சிறகுகள் மேல், பரத்திலிருந்து வரும் ஓர் அடையாளம். ஜெப அட்டை வைத்துள்ள இவ்வரிசையிலுள்ளோம் உங்கள் இடது பக்கம் வாருங்கள். பனி-வெண்புறா சிறகுகள் மேல், தேவன் தம் தூய, இனிய அன்பை அனுப்புகிறார். அது புறாவின் சிறகுகள் மேல், பரத்திலிருந்து வரும் ஓர் அடையாளம். இங்குள்ளவர்கள்.... ஓ, பனி-வெண்புறா சிறகுகள் மேல், தேவன் தம் தூய, இனிய அன்பை எனக்கு அனுப்புகிறார். ஆது புறாவின் சிறகுகள் மேல், பரத்திலிருந்து வரும் ஓர் அடையாளம். 79புறா அந்த காட்டிற்கு எங்கிருந்து வந்தது? இதை நான் கூற முற்படுகிறேன்; ஒரு அடையாளத்துக்காக ஆபிரகாமுக்கு ஒரு ஆட்டுக்கடா அவசியமாயிருந்ததென்று தேவன் கண்டார். இவர் யேகோவா - யீரே. கர்த்தர் தமக்காக ஒரு பலியை அருளுவார். அதை யோசித்து பார்ப்போமானால்! அதே தேவன், அதே ஊக்கத்துடன், இதேவிதமான மக்களுக்காக, ஒரு புறாவை அனுப்பினார். அவர் இன்னமும் தேவனாயிருக்கிறார், யேகோவா - யீரே தமக்கு அவசியமாயுள்ள எதையும் அருளுவார். இந்த ஜெப வரிசையில் நீங்கள் வந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில், தேவன், உங்களுக்கு புறாவின் சிறகுகள் மேல் அனுப்பும்படி கேட்பீர்களா? நீங்கள் சுகமடைவீர்கள் என்று விசுவாசிக்கத்தக்கதாக புறா பரிசுத்த ஆவியானவர் தாமே உங்கள் இருதயங்களில் விசுவாசத்தை அருள ஜெபியுங்கள். 80எல்லோரும் எழுந்து நிற்கும்படியாக, இப்பொழுது நான் கேட்கப் போகின்றேன். சகோ. பிரவுனின் இடத்திலுள்ளவர்கள், சகோ. ஜாக்... என்ன சொல்லுகிறீர்கள்? (யாரோ ஒருவர் சகோ. பிரான்ஹாமுடன் பேசுகின்றார் - ஆசி), சரி, நல்லது. இங்குள்ள இந்த பாகம், வரிசையில் நிற்கிறவர்களின் இந்த பக்கம் வாருங்கள். அதற்கு பின்னால் உள்ளபாகங்கள், இவர்களுக்குப் பின்னால் வரிசையில் நில்லுங்கள். நீங்கள் அவர்களுக்குப் பின்னால் சென்று நின்று, ஜெபம் செய்யப்படுவதற்காக வரிசையில் வாருங்கள். இது வேகமாக செல்லும் வரிசையல்ல என்று நான் உறுதியாக அறிந்திருக்கிறேன். நாம் சிறிது நேரம் எடுத்துக் கொண்டு, நம்மால் இயன்றவரையில் ஒவ்வொருவருக்கும் ஜெபம் செய்வோம். இந்த ஜெப வரிசையை நான் அமைக்கவே என் செய்தியை சிறிது சுருக்கிக் கொண்டேன். (அதை நீங்கள் கண்டு கொண்டீர்கள். பாருங்கள்). இது சகோ. ஜாக் மூர், சகோ. யங் பிரவுண் ஆகியோரின் மனைவிகள் அவர்களைப் போக அனுமதித்து, அவர்கள் புறப்பட்டு வந்து, நாங்கள் ஒருமித்து கலிபோர்னியா, அரிசோனா முழுவதும் (வரண்ட இடங்களின் வழியாக) சென்று வியாதியஸ்தருக்கு ஜெபம் பண்ணின நாட்களின் ஞாபகார்த்தமாய் அமைந்துள்ளது. 81உங்களுக்குத் தெரியுமா? அன்று, மரணத்தருவாயில் இருந்தவர்கள் அந்த முயற்சியின் விளைவாய் சுகமடைந்து இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் அது என்ன செய்தது?தேசத்திலுள்ள ஒவ்வொரு சபையிலும் அது தெய்வீக சுகமளித்தலை எழும்பச் செய்தது. இப்பொழுது பிரஸ்பிடேரியன்கள் மற்றும் பலரும் கூட. அவர்கள்... அது அவர்கள் வாயை அடைத்தது. அந்த கோலியாத்தைக் கொல்ல தேவன் ஒருவரை அபிஷேகம் செய்து, அதை செய்ய முடியும் என்பதைக் காண்பிக்க வேண்டியதாயிற்று. இதைக் கண்ட மற்றவர்கள் தைரியம் கொண்டு (அது உண்மை), இதை தொடர்ந்து செய்தனர். அதை மறுபடியும் செய்ய முடியும், ஏனெனில் அவர் தமது அன்பை புறாவின் சிறகுகள் மேல் இன்னமும் அனுப்பிக் கொண்டிருக்கிறார். கிறிஸ்தவர்களே, இதை நீங்கள் கேட்க வேண்டுமென்று விரும்புகிறேன். கடந்த மூன்று ஆண்டுகளாக நான் கண்ட இயற்கைக்கு மேம்பட்ட அற்புதங்களை இங்கு நான் நின்று கொண்டு உங்களுக்கு எடுத்துரைக்க முயன்றால், அடுத்த சனி இரவு வரைக்கும் நான் உங்களிடம் சொல்லிக் கொண்டேயிருப்பேன். அதைக் குறித்து நான் அதிகம் பேசுவதும் கூட இல்லை, ஏனெனில் இது கூடாத காரியம் என்பது போல் தோன்றும். ஆனால் நான் உங்களுக்கு உண்மையைத்தான் கூறுகிறேன். அது முற்றிலும் உண்மை. நாம் மகத்தான யேகோவாவின் வழி நடத்துதலில் வாழ்ந்து கொண்டு வருகிறோம். பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகளுடனும் புதிய ஏற்பாட்டு சபையுடனும் கூட இருந்தவர் இவரே. இன்றைக்கு அவர் தமது நாமத்திற்கென்று புறஜாதிகளிலிருந்து மணவாட்டியை தெரிந்து கொண்டு வருகிறார், அதை நம்புங்கள்! ஜனங்களே, நீங்கள் நம்பமாட்டீர்களா? நீங்கள் எப்பொழுதாவது அதை விசுவாசித்தால், இப்பொழுதே அதை விகவாசியுங்கள்.... அதை நீங்கள் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன், இன்றிரவு என்ன நடக்குமென்று நமக்குத் தெரியாது. என்ன நடக்குமென்று நமக்குத் தெரியாது. நாம் எதிர நோக்குதலுடன் காத்திருக்கிறோம். 82தயவு செய்து, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் அவருடைய ஊழியக்காரன் என்னும் முறையில் உங்களைக் கேட்கிறேன். நீங்கள் சபையோருடன் தொடர்புகொள்ளும் போது, அதில் எல்லாவகையானவர்களும் கலந்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் என்னை, ஒரு துளி சந்தேகமின்றி அவருடைய ஊழியக்காரன் என்று விசுவாசிப்பீர்களானால் (சந்தேகம், அவிசுவாசம் பாவமே.) உங்கள் இருதயத்தில் ஒரு துளி சந்தேகம் இருக்குமானால், இதை இப்பொழுதே எடுத்துப் போடும்படி பிதாவை வேண்டிக்கொள்ளுங்கள். பாருங்கள்? கர்த்தாவே... பிறகு நீங்கள் உண்மையான விசுவாசத்துடன் வருவீர்களானால்.... அது முதலில் உங்களுக்குள் இராமல், நான் கரங்களை வைப்பதில் எந்த உபயோகமுமில்லை. அந்த விசுவாசம் உங்களுக்கு வரும்போது, அது அதை பற்றியெரியச் செய்யும் அப்பொழுது நீங்கள் சுகமடைவீர்கள். அது உண்மை, நீங்கள் சுகமடைவீர்கள் என்று நீங்கள் அறிந்துகொள்வீர்கள். பாருங்கள் அதை நீங்கள் விசுவாசிப்பீர்கள். 83இப்பொழுது உங்கள் ஒவ்வொருவருக்காகவும் தனித்தனியே ஜெபிக்கப் போகிறேன்... நீங்கள் அதை செய்யும் போது. உங்கள் கைகளை ஒருவர் மேல் ஒருவர் வையுங்கள், அப்பொழுது நாம்.... நீங்கள் எவர் மேல் உங்கள் கைகளை வைத்திருக்கிறீர்களோ, அவருக்காக ஜெபிப்பீர்கள். பிறகு உங்களை வரிசையில் வரவழைக்கப் போகின்றேன். உங்கள் கைகளை உங்களுடன் வரிசையில் நிற்கும் யார் மேலாவது வையுங்கள். 84அன்புள்ள தேவனே, இவைகளை வேறு எந்த விதத்திலும் சொல்ல எனக்குத் தெரியாது. கர்த்தாவே, நான் உண்மையென்று அறிந்தவைகளைக் கூற மாத்திரம் எனக்குத் தெரியும். நான் உண்மையைக் கூறுகிறேன் என்பதற்கு இன்றிரவு நீரே எனக்கு சாட்சி. கர்த்தாவே, என் விசுவாசமும், வருங்காலத்தில் எனக்கு கிடைக்கவிருக்கும் சுகமும்; எப்பொழுது என்றோ, எப்படியென்றே எனக்குத் தெரியாது. எனக்கு அது புரியவில்லை; ஆனால் காத்தாவே, பரத்திலிருந்து அடையாளத்தை - நான் பெற்றேன் என்று விசுவாசிக்கிறேன். இந்த ஏழாம் புறா முடிவில் இங்கு வந்தது. மிருகத்தின் மேல் ஏழாம் அங்குலம் விரைவில் முடிவடைந்தது. அது முடிந்துவிட்டது தேவனே, உமது ஜனங்களுக்கு பணிவிடை செய்ய விரும்புகிறேன். எனவே தேவனே, எங்களை இன்றிரவு நீர் அபரிமிதமாக அபிஷேகித்து, நாங்கள் கைகளை வைக்கும் எவரும் சுகம் பெறுவார்களாக. அது நாங்கள் என்பதனால் அல்ல, அது உமது கட்டளையை கைக்கொள்ளுக் காரணத்தால். நீர், விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும் என்று கூறியிருக்கிறீர். கர்த்தாவே, நான் விசுவாசிக்க எனக்குதவி செய்யும், அவர்களுடைய இருதயங்கள் விசுவாசம் விதைக்கப்படும் நிலமாக இருக்க உதவி புரியும். தேவனுடைய மகிமைக்கென்று, உம்முடைய கட்டளைகளுக்கு இப்பொழுது கீழ்ப்படிந்து, இந்த கட்டிடத்தில் வியாதிப்பட்டு அவதியுறும் ஒவ்வொரு நபரும் (இங்கு மாத்திரமல்ல. தேசம் முழுவதிலுமுள்ள கட்டிடங்கள் அனைத்திலுமுள்ளவர்கள்) சுகமடையட்டும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இதை கேட்கிறேன். ஆமென். 85விசுவாசமாயிருங்கள், நீங்கள் அனைவரும் எங்களுடன் சேர்ந்து ஜெபியுங்கள். இது சிந்தனைகளைப் பகுத்தறியும் வரிசையல்ல. (ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி) சோர்வு, பயம், அது என்னவென்று எனக்குத் தெரியும்.... ஏழை பெண், அவள் வாழ்க்கையில் சமாதானத்தையே கண்டதில்லையென்று கூறினாள், இது தான்... தூங்க முடியவில்லை, பயம், இறுக்கம். அன்புள்ள தேவனே, நான் உண்மையைக் கூறினேன் என்று எனக்காக சாட்சி கூறும். இந்த ஸ்திரீக்காக - நான் எவ்வளவாக பரிதாபப்படுகிறேன் தேவனே, நீர் உம்முடைய வார்த்தைக்கு கடமைபட்டிருக்கிறீர் என்றும், உம்முடைய வார்த்தை ஒவ்வொன்றையும் காப்பீர் என்றும் காண்பிக்கும் அந்த சிறு விசுவாசத்தை, இன்றிரவு அவளுக்கு பரத்திலிருந்து அனுப்பித்தரும்படி வேண்டிக்கொள்கிறேன். பரலோகத்தின் தேவன் தாமே என் சகோதரியிலிருந்து இந்த பயத்தை எடுத்துப் போடுவாராக. உமக்கு கீழ்ப்படிந்து, என் கைகளை அவள் மேல் வைத்து அதை இடிந்து கொள்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அது அவளை விட்டு வெளியே வருவதாக. ஆமென். இப்பொழுது சகோதரியே, பார். என்னை இப்பொழுது விசுவாசிப்பாயானால், நீ சிலுவையின் மூலம் இங்கிருந்து தொடங்கலாம். இன்றிரவு முதல் அது உள்ளதாக நினைக்காதே. ''அது எனக்கு இல்லவே இல்லை'' என்று சொல்லிக் கொண்டேயிரு. இப்பொழுது அது உன்னைவிட்டுப் போய்விடும். 86சகோதரி பாமர், எங்கள் சகோதரி, சகோதரி பாமர்; அவள் கணவர் எனக்கு நெருங்கிய நண்பர். அவர் ஜார்ஜியாவிலுள்ள அலபாமாவில் போதகராகப் பணியாற்றுகிறார். அவள் கூடாரத்துக்கு வந்து கொண்டிருந்தாள்... நான் கூடாரத்தில் பிரகங்கிக்கும் போது. அவர்கள் ஒரு ஆராதனையில் என் பிரசங்கத்தைக் கேட்க ஆயிரத்து ஐந்நூறு மைல்கள் காரோட்டி வருகின்றனர். சகோ. பாமர் காரோட்டி வந்தபோது, இல்லை அவருடைய மகன், அவர்கள் மூலையில் திரும்பும் போது கார் விபத்துக்குள்ளானது. அவளுக்கு அதன் பாதிப்பு உள்ளது. நாம் ஜெபிப்போம். அன்புள்ள தேவனே, உமது ஊழியக்காரனாகிய இவரை, அவருடைய மனைவியை விடுவியும். அவர் விசுவாசமும் உண்மையுமுள்ள கிறிஸ்துவின் ஊழியக்காரன், நானும் சகோ. ஜாக் மூரும் சேர்ந்து அவள் மேல் கைகளை வைக்கும். இந்நேரத்தில், அவளை சுகப்படுத்த வேண்டுமென்று ஜெபிக்கிறேன். இயேசுவின் நாமத்தில். ஆமென். 87வலது பாதத்திலா. நீங்கள் அவருக்காக நிற்கிறீர்களா? அவருடைய சிறு பையன் ஊனமுற்றிருக்கிறான். அவனுடைய வயிற்றிலும் முதுகிலும் அடிபட்டுள்ளது. ஜெபிப்போம்: அன்புள்ள தேவனே, அந்த பனி-வெண்புறா இப்பொழுது கீழே பறந்து வந்து அவருடைய இருதயத்துக்குள் செல்லட்டும். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். அவருடைய தழும்புகளால் நாம் குணமாகிறோம். நம்முடைய சகோதரனுக்கும், அவருடைய சிறு பையனுக்கும் அது நிறைவேற வேண்டுமென்று ஜெபிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். கடுமையான தலைவலி, அவர் வேலை செய்யும் போது காலில் ஏற்பட்டுள்ள வியாதி அவரைத் தொந்தரவுபடுத்துகிறது. அன்புள்ள தேவனே, தேவனுடைய ஊழியர்கள் என்னும் முறையில் நாங்கள் இந்த இளைஞனின் மேல் எங்கள் கைகளை வைக்கும் போது, உமது சுகமளிக்கும் ஆசிர்வாதத்தை இவருக்கு அருளுவீராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென். 88அவளுக்கு பெண்களின் கோளாறு உள்ளது. மேலும் இவளுக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகம் வேண்டும். அன்புள்ள தேவனே, இந்த பெண்ணுக்காக என் விசுவாச ஜெபத்தை உமக்கு ஏறெடுக்கும் இந்நேரத்தில், பெண்களின் கோளாறு அவளை விட்டுப் போவதாக. பரிசுத்த ஆவியின் அபிஷேகம் புறாவின் சிறகுகள் மேல் வருவதாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென். (தேவன் உன்னை ஆசிர்வதிப்பாராக, சகோதரியே). அவருடைய கண்ணில் சதை வளர்ச்சி, இவருடைய அன்பான தோழிக்காக. அன்புள்ள தேவனே, மனிதரின் இருதயங்களை நீர் அறிந்திருக்கிறீர். பிதாவே, இந்த சகோதரன் கேட்ட விண்ணப்பங்களை நீர் அருள வேண்டுமாய் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். உமது வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து எங்கள் கைகளை இவர்மேல் வைக்கிறோம், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். (தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக, சகோதரனே). இவளுக்கு இடது பாகத்தில் சதை வளர்ச்சி, மற்றும் அவளுடைய குரல் மோசமாயுள்ளது. அன்புள்ள இயேசுவே, இந்த சகோதரியை நீர் சுகமாக்க வேண்டுமென்று ஜெபிக்கிறேன், அவள் சுகமடைய கைகளை அவள் மேல் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வைக்கிறேன். ஆமென். (தேவன் உன்னை ஆசிர்வதிப்பாராக, என் சகோதரியே.) ஏழை சகோதரியே, உன் தொல்லையை நான் காண்கிறேன். வீங்கின கைகால்கள், நீரகம், மூத்திரப்பை, கணுக்கால் இடம் மாறி இருத்தல். ஓ பிதாவே, தேவனே, இந்த விலையேறப்பெற்ற ஸ்திரீயை சுகமாக்கும் என்று வேண்டிக்கொள்கிறேன். என் கைகளை அவள் மேல் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வைக்கிறேன். ஆமென். தேவன் உன்னை ஆசிர்வதிப்பாராக, சகோதரியே; அப்படித்தான், அது செய்யப்படும். அதை ஒலிப்பெருக்கியில் நீங்கள் கேட்கிறீர்கள் அல்லவா? ஒலிப்பெருக்கியின் அருகில் யார் இருந்தாலும் பொறியாளரே, ஒலியை சிறிது அதிகமாக்கினால், கூட்டத்தினர் அவர்களுடைய சாட்சியை கேட்கக் கூடும்... இவர்கள் நடந்து வரும்போது, என்ன சொல்லுகிறார்கள் என்பதை. அதை நீங்கள் கேட்டும் போது. அவர்களுக்காக ஜெபத்தில் தரித்திருங்கள்; நான் ஜெபம் செய்யத் தொடங்கும் போது, என்னுடன் கூட ஜெபியுங்கள். அன்புள்ள தேவனே, இந்த நமது சகோதரிக்காக நான் ஜெபிக்கிறேன். அன்புள்ள தேவனே, இவளை சுகப்படுத்துவீராக. இது உம்முடைய கட்டளையாயிருப்பதால், இதை நாங்கள் செய்கிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென். 89அன்புள்ள தேவனே, இந்த சாட்சியை நீர் கேட்டீர் சத்துரு அவளுக்கு என்ன செய்திருக்கிறான் என்பதை நீர் கேட்டீர். நாங்கள் இயேசுவின் நாமத்தை எடுத்துக் கொண்டு சத்துருவை முறியடிக்க முயல்கிறோம். அவன் ஏற்கனவே, தோற்றுப் போனான். ஏனெனில் நொறுக்கப்பட்டு, வாரினால் அடிக்கப்பட்ட புறா தேவனுடைய வீட்டின் தரையில் முடிந்தது என்னும் செய்தியுடன் சென்று விழுந்தது. இதை அருளும். பிதாவே அவள் அதை விசுவாசிக்கட்டும். இயேசுவின் நாமத்தில். அன்புள்ள தேவனே, இந்த எங்கள் சகோதரியை சுகப்படுத்த வேண்டுமென்று ஜெபிக்கிறேன். அவர் அவளுக்கு செய்துவிட்டார் என்றும், அவள் சுகமடைய முடியும் என்பதையும் தேவனுடைய புறா தாமே இன்றிரவு அவளுக்கு சாட்சி பகரட்டும். இயேசுவின் நாமத்தில். ஆமென். அன்புள்ள தேவனே. இங்கு நின்று கொண்டிருக்கும் சகோதரனின் மேல் என் கைகளை வைக்கிறேன். கர்த்தாவே அவர் இத்தனை தூரம் வருவதற்கு அவருக்கு போதிய விசுவாசம் இருந்தது. இப்பொழுது அவர் சுகத்தை பெற்றுக் கொண்டு, சுகமடைத்தவராக தன் இருக்கைக்கு செல்வாராக. இயேசுவின் நாமத்தில். அன்புள்ள தேவனே, எங்கள் சகோதரன் மேல் கைகளை வைத்து ஜெபிக்கிறேன். இந்த நேரத்தில் தேவனுடைய விசுவாசம் இறங்கி வர உதவி செய்வீராக. இவர் ஆபிரகாமைப் போல் இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல் அழைப்பாராக. ஏனெனில், தேவன் இந்த வாக்குத்தத்தத்தை செய்திருக்கிறார். இயேசுவின் நாமத்தில். ஆமென். 90அன்புள்ள தேவனே, நீர் ஒருவரே உண்மையான தீர்மானத்தை செய்யக்கூடியவர். இந்த வாலிபப் பெண் கேட்டுக் கொண்டதை பெற்றுக்கொள்ள வேண்டுமென்று ஜெபிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென். அன்புள்ள தேவனே, நீர் செய்யக் கட்டளையிட்டதற்கு கீழ்ப்படிந்து எங்கள் சகோதரியின் மேல் என் கைகளை வைக்கிறேன். கர்த்தாவே, அநேக ஆண்டுகளுக்கு முன்பு இப்படிப்பட்ட ஜெப வரிசையை நாங்கள் அமைத்தது எங்கள் நினைவுக்கு வருகிறது. அன்று என்ன நடந்ததென்று நாங்கள் அறிவோம். இன்று ஜனங்களுக்கு அதே விசுவாசம் இருக்குமானால், நீர் இன்றைக்கும் அதே தேவனாயிருக்கிறீர் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். எங்கள் சகோதரியின் சுகத்துக்காக நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென். அன்புள்ள தேவனே, இங்குள்ள என் சகோதரனின் மீது என் கைகளை வைத்து, அவருடைய சுகத்தைக் கோருகிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். பிதாவே, இந்த எங்கள் சகோதரியை உமக்கு முன்னால் கொண்டு வந்து, உமது பெலனுக்கும், உமது தரிசனங்களுக்கும், உமது வார்த்தைக்கும், நீர் தேவன் என்பதற்கும் சாட்சியாக நின்று கொண்டிருக்கிறேன் என்பதை சாட்சியாக அறிவித்து, என் தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து என் கைகளை அவள் மேல் வைத்து, அவளுடைய சுகத்தை கோருகிறேன். ஆமென். 91அன்புள்ள தேவனே, உமது பெலனுக்கு சாட்சியாக அதேவிதமாக என் சகோதரனின் மேல் கைகளை வைத்து, அவருடைய சுகத்தை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென். (ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி). ''என்ன? இவள் சுகமளிப்பவவர்'' என்றாள். அவள், ''அன்று காலை அர்கான்ஸாஸிலுள்ள ஒரு மனிதன், குருட்டு சக்கிலி சுகமடைந்தான்'' என்றாள். (அந்த வரலாறு உங்களுக்குத் தெரியும் அது வானொலியில் ஒலிபரப்பானது). நான் கூறினேன்... நான் எண்ணினேன்... நான் ஒரு மாய்மாலக்காரனின் பாகம் ஏற்று நடித்தேன் என்று. நான், ''அது உண்மையென்று நீ நம்புவதில்லையா?'' என்று கேட்டேன். அவள், ''ஆம், ஐயா. நான் நம்புகிறேன் என்றாள். நான், இந்த நாளில் தேவன் அப்படிப்பட்ட ஒரு அற்புதத்தை செய்வாரென்று நீ விசுவாசிக்கிறாயா?'' என்று கேட்டேன். இவள், ''ஐயா, நான் மதசம்பந்தமான வானொலி நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டிருந்தேன். நான் ஒரு கிறிஸ்தவள். நான் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளைக் கேட்பதுண்டு. அன்று காலை சுகமடைந்த அந்த குருட்டு சக்கிலி பேசுவதைக் கேட்டேன் அவர்கள் அவனை சபையை விட்டு துரத்தினார்கள். அவன் ஒரு சபையிலிருந்து மறு சபைக்குச் சென்று, சென்ற விடமெல்லாம் அதிக கூச்சலிட்டுக் கொண்டிருந்தான். அவன் தன் தொப்பியை ஒரு பிரம்பின் மேல் வைத்து, அதை சுற்றிக்கொண்டே சபையில் மேலும் கீழும் ஓடுவான். அவன் பட்டினத்தில் எங்கும் சென்று, நான் குருட்டு சக்கிலியாயிருந்தேன். இப்பொழுது சுகமடைந்து விட்டேன்! சுகமடைந்து விட்டேன்! என்று சத்தமிட்டுக் கொண்டிருந்தான்'' என்றாள். நான், ''அதை விசுவாசிக்கிறாயா? என்று கேட்டேன். அவள் சற்று நேரம் அங்கு நின்றாள், அப்பொழுது மழை துளி துளியாக பெய்து கொண்டிருந்தது. அவள், ''ஐயா, அந்த சக்கிலியை குணமாக்கினவரிடம் நீங்கள் என்னைக் கொண்டு சென்றால், என் பிதாவை நான் கண்டு கொள்வேன்'' என்றாள். அப்பொழுது எனக்கு அப்படிப்பட்ட உணர்ச்சி தோன்றினது. நான், நீ காண எதிர்பார்த்துக் கொண்டிருப்பது நானாக இருக்கலாம் என்றேன். அவள் என் கோட்டின், முன் பாகத்தை பிடித்துக் கொண்டு, ''அவரை குணமாக்கினவர் நீர்தானா'' என்றான். நான், ''இல்லை, சகோதரி, நான் சகோ. பிரான்ஹாம்'' என்றேன். அவள், ''என் மேல் இரங்கும்!'' என்றாள். நான் ஏழை, குருட்டு ஃபானி கிராஸ்பியை நினைவு கூர்ந்தேன். ''மற்றவர்களை நீர் அழைக்கும் போது, என்னைக் கடந்து சென்றுவிடாதேயும்'' பாருங்கள், அவர் ஒருவருக்கு சுகமளித்தார், அவர் இவளையும் சுகப்படுத்த முடியும். அவள் கண்கள் மேல் என் கைகளை வைத்து, அன்புள்ள இயேசுவே, ஒருநாள் ஒரு பழைய கரடுமுரடான சிலுவை தெருவின் வழியாக குதித்து குதித்து வந்தது, அதை சுமந்த தோள்களிலிருந்த இரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது. அந்த சிறு மெலிந்த சரீரம் சிலுவை கனத்தின் மிகுதியால் தொய்ந்து போய் கீழே விழுந்து கொண்டிருந்தது. சிரேனே ஊரானாகிய சீமோன் என்னும் பெயர் கொண்ட கறுப்பு மனிதன் அங்கு வந்து சிலுவையை எடுத்து, அவர் அதை சுமக்க உதவினான். பிதாவே, அது உமக்கு ஞாபகமுள்ளது என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும். அவருடைய பிள்ளைகளில் ஒருத்தி இருளில் இங்கு தடுமாறிக் கொண்டிருக்கிறாள். நீர் புரிந்து கொள்வீரென்று எனக்கு நிச்சயம் தெரியும்'' என்று ஜெபித்தேன். அவள், ''தேவனுக்கு மகிமை! என்னால் காண முடிகிறது எனறாள்'' (உ,ஊ). நான், ''உன்னால் காண முடிகிறதா?'' என்று கேட்டேன். அவள், ''ஆம், ஐயா'' என்றாள். நான், ''அந்த விளக்குகளை எண்ணு'' என்றேன். அவள் சரியாக எண்ணினாள். நான், ''நான் அணிந்து கொண்டிருக்கும் சூட்டின் நிறம் என்ன? என்று கேட்டேன். அவள், ''சோம்பல் நிற சூட்டும் மஞ்சள் கழுத்தணியும் அணிந்திருக்கிறீர்கள்'' என்றாள். அவ்வளவு தான். அவளால் காண முடிந்தது. ஓ, தேவன் தாழ்மைக்கு மதிப்பு கொடுக்கிறார் (உ,ஊ). இது தன்னில் தானே தெய்வீக அன்பில் மகத்தான வெற்றியை அளிக்கும். அன்புள்ள தேவனே, நீர் இரங்கி, என் சகோதரியை சுகப்படுத்துவீராக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். 92அன்புள்ள தேவனே, இந்த பலவீனமான சுருக்கம் விழுந்த கையை நான் பிடித்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், அதன் வழியாக என்ன கடந்து சென்றது என்பதை நீர் மாத்திரமே அறிவீர். அன்புள்ள தேவனே, இன்றிரவு நான் பிடித்துக் கொண்டிருக்கும் இந்த பலவீனமான கைகள், சிமியோனின் பலவீனமான கரங்கள். அன்றொரு நாள் கட்டியணைத்து, ''ஆண்டவரே, உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர். உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது'' என்று கூறினவிதமாக இவளும் கட்டியணைக்க அருள் புரியும். கர்த்தாவே, உமது இரட்சிப்பு அவள் மேல் வந்து, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவளை சுகப்படுத்துவதாக. ஆமென். 93(ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி). நீதிமன்ற வழக்கின் போது, திரு அவிசுவாசம் இயேசு கிறிஸ்துவை குற்றம் சாட்டினான். வழக்கு உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? எப்படி அந்த... அவர்களுக்கு இருதரப்பிலும் வழக்கறிஞர்கள் இருந்தனர். குற்றம் சுமத்தும் வழக்கறிஞர் சாத்தான் அங்கு இருந்தான்; எப்படி அந்த வழக்கு நடத்தப்பட்டது. திரு. சந்தேகி அங்கு வந்து, ''பிரசங்கி ஒருவர், வியாதியஸ்தர்களுக்கு எண்ணெய் பூசுங்கள். வேதம் அவ்வாறு கூறுகிறது'' என்றார். எனக்கு எண்ணெய் பூசப்பட்டது. நான் சுகம் பெறவில்லை. வேறொருவர், வியாதியஸ்தர் மேல் கைகளை வையுங்கள், ''இப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்“ என்றார் என்றான். அவன் குற்றஞ் சுமத்த முயன்றான். ஆங்கு ஒரு சாட்சி வந்து, என்மேல் கைகள் வைக்கப்பட்டு ஆறு மாதங்கள் ஆயின. உம்முடைய வார்த்தை, ''வியாதியஸ்தர் மேல் கைகளை வையுங்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள். என் நரைக்கிறது. அபிஷேகம் பெற்ற உம்முடைய ஊழியக்காரர்களில் ஒருவர் என் மேல் கைகளை வைத்தார். ஆனால், நான் இன்னும் சுகமடையவில்லை. எனவே, நீர் கள்ளப்போதகர், மாய்மாலக்காரர். ஏனெனில், உம்முடைய வார்த்தை என்ன கூறினதோ அது நிறைவேறவில்லை'' என்றான். 94அப்பொழுது உண்மையான சாட்சி அங்கு வந்து, அவருடைய வார்த்தை உண்மையுள்ளது. அவர் எப்பொழுது செய்வார் என்று அவர் கூறவில்லை. அவர், ''விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும். வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைப்பார்கள். அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்'' என்று கூறினார். பாருங்கள்? பாருங்கள்; அப்படித்தான் அவர் கூறினார். ''அவர்கள் சொஸ்தமாவார்கள்'' என்று. எனவே, அது உடனடியாக நடக்கும் அற்புதமோ, அல்லது தேவனுக்குக் கீழ்ப்படிதலோ, அது தனிப்பட்ட நபரைப் பொறுத்த விஷயம். பாருங்கள்? தனிப்பட்ட நபர் ஒருவர் அதை விசுவாசித்தால், அது எவ்வளவு நாட்கள் சென்றாலும் எனக்குக் கவலையில்லை. அவர் ஆபிரகாமிடம், ''சாராளின் மூலம் நீ ஒரு குமாரனைப் பெறுவாய்'' என்றார். ஆனால் இருபத்தைந்து ஆண்டுகளாக குழந்தை பிறக்கவேயில்லை, அதன் பிறகு குழந்தை பிறந்தது. அவர் நோவாவிடம், மழை பெய்யும் என்றார், வெள்ளம் வருவதற்கு அநேக ஆண்டுகட்கு முன்பே, நோவா வெள்ளத்தை எதிர்நோக்கி பேழையை உண்டாக்கினான். மழை பெய்யப் போகின்றது என்று அவன் நிச்சயமாக அறிந்திருந்தான். வேதம், விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும், தேவன் அவனை எழுப்புவார்'' என்று கூறியுள்ளது. எப்பொழுது? அதை அவர் கூறவில்லை. தேவன் நீதியுள்ளவர், உண்மையுள்ளவர். அவருடைய வார்த்தை என்ன கூறுகிறதென்று படியுங்கள். அதைதான் இன்றிரவு நான் செய்தேன் - வியாதியஸ்தர் மேல் கைகளை வைத்தேன். அவர்கள் ஒவ்வொருவரும் சுகமடைவார்களென்று நான் விசுவாசிக்கிறேன் - அவர்கள் ஒவ்வொருவரும். நீங்களும் அவ்வாறே விசுவாசிக்கிறீர்களா? அவதியுறும் இந்த மக்களுக்காக விசுவாசியுங்கள். 95இங்கு ஒரு ஸ்திரி இருக்கிறாள். அவளை எனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். நேற்றிரவு ஜெப வரிசையில் அவளுக்கு நான் ஜெபித்தேன். அவளுடைய பெயர் என்ன? சேம்பர்ஸ்....சேம்பிளஸ். அந்த பெண்ணுக்கு ஊனம் ஏற்படாமல், மற்றவர்களைப் போல் இயற்கையான வாழ்க்கை வாழ்ந்திருந்தால், அவள் மிகவும் அழகான பெண்ணாய் இருந்திருப்பாள். அவள் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் போது. அவளுக்கு உடலில் நடுக்கம் ஏற்படுகின்றது. அந்த பெண்ணுக்கு அழகான, அருமையான ஆவி உள்ளது. அவள் உடல் நடுங்கிக் கொண்டே இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். ஓ, அது என் இருதயத்தை எவ்வளவாக நொறுக்குகிறது! எவ்வளவு நலமாயிருக்கும்.... என்னால் கூடுமானால்! இங்கு ஒரு ஸ்திரீ, ஒரு குழந்தையை கையிலேந்திக் கொண்டிருக்கிறாள். அந்த குழந்தையின் சிறுநாவு வெளியே தொங்கிக் கொண்டிருக்கிறது. அதன் சிறு உடல் ஊனமுற்றுள்ளது. அது என் சிறுவன் ஜோசப்பாக இருக்குமானால்! அது என் பேரன் பாலாக இருந்தால்! பின்னால் உட்கார்ந்துள்ள பெண் என் மகள் ரெபேக்காள் அல்லது சாராளாக இருந்தால்! திருமதி சிம்ப்ஸன் ஒருக்கால் என் மனைவி மேடாவாக இருந்தால்! இந்த வாலிபன் பில்லி பாலாக இருந்தால் இந்த வயது சென்ற அம்மாள் என் தாயாக இருந்தால்! இது யாரோ ஒருவருடைய குழந்தை யாரோ ஒருவருடைய சகோதரி, யாரோ ஒருவருடைய மகள் யாரோ ஒருவருடைய மகன் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள்! பாருங்கள்? நான் அவர்களுடைய சகோதரன், இவர் நமது இரட்சகர். நான் செய்யக் கூடியதெல்லாம்.... எனக்குள்ள விசுவாசத்தை அவர்கள் சார்பில் தேவனிடம் அளிக்கிறேன். அவ்வளவு தான் எனக்குத் தெரியும். 96கர்த்தர் எனக்கு ஒரு தரிசனம் அருளுவாரானால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் என்ன நடந்தது என்பதை என்னிடம் கூற முடியும். அதை நான் உங்களிடம் நீரூபிக்க முடியும். பாருங்கள், இது உங்களுக்குத் தெரியும். ஆனால், அது அவர்களைச் சுகப்படுத்துவதில்லை. இல்லை, அவர்களுக்குள் ஏதாவதொன்று விழ வேண்டும், பாருங்கள். ஓ. உங்கள் ஒவ்வொருவரையும் நான் கொண்டு சென்று உங்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுப்பது போன்றது அது, உங்கள் பாவங்களை அது போக்காது. இல்லை, இல்லை! மறு ஜென்மத்திற்காக இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தண்ணீர் ஞானஸ்நானம் கொடுக்கப்படுவதை நான் நம்புவதில்லை. இரத்தம் தான் மறு ஜென்மம் (regeneration) அளிக்கிறது, பாருங்கள், தண்ணீர் அல்ல. பாருங்கள், நான் ஞானஸ்நானம் கொடுக்கலாம். ஆனால், நீங்கள் உலர்ந்த பாவியாக தண்ணீருக்குள் சென்று நனைந்த பாவியாக வெளியே வருகிறீர்கள். பாருங்கள், நீங்கள் முழுவதுமாக மனந்திரும்பினாலொழிய. மனந்திரும்பி, அதன் பிறகு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள். பாருங்கள்? அந்த விஷயத்தில் நான் ஒருத்துவக்காரர் இயக்கத்துடன் கருத்து வேறுபாடு கொண்டவன். மறு ஜென்மத்துக்காக தண்ணீர் ஞானஸ்நானம் கொடுப்பதில்லை இல்லை. இரத்தமே சுத்திகரிக்கின்றது, தண்ணீர் அல்ல என்று நான் விசுவாசிப்பவன். பாருங்கள்? மனந்திரும்புதல். அதன் பிறகு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுதல். 97நான், இப்பொழுது ஜெபிப்பதற்காக கீழே செல்கிறேன். இந்த ஜனங்கள் உங்களுக்கு எவ்வளவு முக்கியம் வாய்ந்தவர்களோ, அவ்வளவு எனக்கும் முக்கியம் வாய்ந்தவர்கள் - ஒருக்கால் அதை காட்டிலும் அதிகம். என் உறவினரை விட மேலானவர்கள். நாம் எல்லோரும் கரங்களை ஒன்றாக இணைப்போம். உங்கள் கரங்களை விசுவாசத்திலும், என் கரத்தை விசுவாசத்திலும் ஒன்றாக இணைத்து, கர்த்தராகிய இயேசுவின் கரங்களைக் கீழே கொண்டு வந்து, இந்த ஏழை ஊனமுற்ற ஜனங்களின் மேல் வைக்கும்படி செய்வோம். என்னுடன் ஜெபிப்பீர்களா? (ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி), வியாதியஸ்தர்களுக்காகவும், அவதிப்படுகிறவர்களுக்காகவும் உறுமால்களை இங்கு வைத்துள்ளவர்கள், ஆராதனைக்குப் பிறகு அவைகளைப் பெற்றுக்கொள்ளலாம், இப்பொழுது இவர்களுக்காக ஜெபிக்க எனக்குதவி செய்யுங்கள், செய்வீர்களா? தேவனே, இன்றிரவு நீர் செய்த எல்லாவற்றிற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம், ஆண்டவரே. இந்த ஜெப வரிசையில் வந்த ஒவ்வொருவருடைய சுகத்துக்காகவும் நாங்கள் முன்கூட்டியே உமக்கு நன்றி செலுத்துகிறோம். அன்புள்ள தேவனே, இந்த கூட்டத்துக்கு வர முடியாதவர்களுகாக அவர்களுடைய அன்பார்ந்தவர்கள் கொண்டு வந்துள்ள உறுமால்களுக்காக நான் ஜெபிக்கிறேன். அவர்கள் பவுலின் சரீரத்திலிருந்து உறுமால்களையும், கச்சைகளையும் எடுத்து வியாதியஸ்தர் மேல் போட்டதாக நாங்கள் வேதத்தில் கற்பிக்கப்பட்டிருக்கிறோம். முன் காலத்து மக்கள் உமது சமுகத்தில் வாழ்ந்தனர். உம்மை அவர்கள் தெருக்களில் கண்டனர், கூட்டங்களில் கண்டனர். உம்முடைய, அதே ஆவி பவுலின் மேல் தங்கியுள்ளதை அவர்கள் கண்டனர். இது அந்த மனிதன் அல்ல, உம்முடைய ஆவியே அவனுடைய வாழ்க்கையை ஆட்கொண்டிருந்ததென்று அவர்கள் அறிந்திருந்தனர். நீர் செய்த அதே கிரியைகளை பவுலும் செய்ததாக நாங்கள் காண்கிறோம். இப்பொழுதும் கர்த்தாவே, இந்நாட்களிலுள்ள ஜனங்கள் அதே தேவன் தமது சபையில் தமது ஜனங்களுடன் வாழ்ந்து கொண்டிருப்பதைக் காண்கின்றனர். அவர்கள் தங்கள் அன்பார்ந்தவர்களிடம் இங்கிருந்து கொண்டு செல்வதற்காக இந்த உறுமால்களை இங்கு கொண்டு வந்துள்ளனர். தேவனே, அவர்கள் ஒவ்வொருவரும் உமக்குச் சொந்தமான வழியில் சுகம் பெற அருள்புரிவீராக, ஒரு பிரத்தியேகமான காரியத்தை நீர் செய்ய வேண்டுமென்றோ, ஒரு பிரத்தியேக வழியில் அல்லது ஒரு பிரத்தியேக விதத்தில் நீர் செய்ய வேண்டுமென்றோ, நாங்கள் உம்மை வேண்டிக் கொள்ளவில்கள். நாங்கள், ''பிதாவே, உமக்கு சொந்தமான வழியில் அவர்களை சுகமாக்கும்'' என்று மாத்திரமே கேட்கிறோம். தேவனுடைய மகிமைக்கென்று. இந்த உறுமால்களின் மேல் இந்த விசுவாச ஜெபத்தை ஏறெடுக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். 98நான் உங்கள் விசுவாசத்தில் உங்களுடைய சமூகத்தில், இயேசு கிறிஸ்துவில் அற்புதமான ஐக்கியத்தின் தருணத்தைப் பெற்றிருந்தேன். இந்த கூட்டத்தையும் இங்கு நடந்தவைகளையும் நீண்ட நாட்களாக என் நினைவில் கொண்டிருப்பேன்: அன்பு, ஒத்துழைப்பு, ஐக்கியம் ஆகியவைகளை. இப்பொழுது, நாம் மறுபடியும் சந்திக்கும் வரையிலும், பரலோகத்தின் தேவன் தாமே உங்களை வழி நடத்துவாராக. இருளாகும் நேரத்தில் பாதைக்கு வெளிச்சம் தர, இரவில் நட்சத்திரங்களைப் பிரகாசிக்கச் செய்ய வல்லவர், பெத்லெகேமின் நட்சத்திரத்தினால் உங்கள் பாதையை பிரகாசிக்கச் செய்து, அவருடைய வார்த்தைக்கு முழுவதுமாக அர்ப்பணிக்கும் ஒரு வாழ்க்கைக்கு உங்களை வழி நடத்துவாராக என்பதே என் ஜெபமாயுள்ளது. நாம் சந்திக்கும் வரைக்கும், நாம் சந்திக்கும் வரைக்கும், நாம் இயேசுவின் பாதங்களில், சந்திக்கும் வரைக்கும்; நாம் சந்திக்கும் வரைக்கும், நாம் சந்திக்கும் வரைக்கும், நாம் மறுபடியும் சந்திக்கும் வரைக்கும், தேவன் உங்களோடு கூட இருப்பாராக. இப்பொழுது நாம் எழுந்து நிற்போம். என் விசுவாசம் உம்மையே மேலே நோக்குகிறது... நான்... நல்லது. அதை நான் மாற்றி விடுகிறேன். அது அருமையானது என்று நினைக்கிறேன். என் விசுவாசம் உம்மையே மேலே நோக்குகிறது, கல்வாரியின் ஆட்டுக்குட்டியே, தெய்வீக இரட்சகரே! நான் ஜெபிக்கும்போது எனக்கு செவிகொடும், என் பாவம் அனைத்தும் எடுத்துப்போடும், ஓ, இந்த நாள் முதல் நான் முழுவதும், உம்முடையவனாயிருக்கட்டும்! 99இப்பொழுது அவர்கள் பாடும் போது. நாம் ஒருவரோடொருவர் கை குலுக்குவோம். வாழ்க்கையின் இருள் சூழ்ந்த பாதையில், நான் நடந்து என்னைத் துயரம் சூழும் போது, நீரே என் வழிகாட்டியாயிரும்; இருள் பகலாக மாறக் கட்டளையிடும், துயரத்தின் கண்ணீரை துடைத்து விடும்; உம்மிலிருந்து நான் விலகாதபடிக்கு, எப்பொழுதும் காத்துக் கொள்ளும். இப்பொழுது மேலான உணர்வு உங்களுக்கு உள்ளது. இல்லையா? பனி-வெண்புறா சிறகுகள் மேல், தேவன் தம் தூய, இனிய அன்பை கீழே அனுப்புகிறார். அது புறாவின் சிறகுகள் மேல், பரத்திலிருந்து வரும் ஓர் அடையாளம். பனி-வெண்புறா சிறகுகள் மேல், தேவன் தம் தூய, இனிய அன்பை கீழே அனுப்புகிறார். அது புறாவின் சிறகுகள் மேல், பரத்திலிருந்து வரும் ஓர் அடையாளம். இந்த கூட்டத்தின் நமது முடிவுச் செய்தி இதுவே. பனி-வெண்புறா சிறகுகள் மேல், தேவன் தம் தூய, இனிய அன்பை அனுப்புகிறார், அது புறாவின் சிறகுகள் மேல், பரத்திலிருந்து வரும் ஓர் அடையாளம். 100இப்பொழுது தலை வணங்குங்கள். நீங்கள் வீடு செல்லவிருக்கும் இத்தருணத்தில் சக்கரங்கள் ஒரு பாடலை மௌனமாக இசைக்கும் போது... நீங்கள் சக்கரங்கள் மௌனமாக இசைப்பதையும், இயந்திரங்கள் இடும் இரைச்சலையும் கேட்பீர்கள். பனி-வெண்புறா சிறகுகள் மேல், தேவன் தம் தூய, இனிய அன்பை அனுப்புகிறார், அது புறாவின் சிறகுகள் மேல், பரத்திலிருந்து வரும் ஓர் அடையாளம். (சகோ. பிரான்ஹாம் பல்லவியை மௌனமாக இசைக்கிறார் -ஆசி). மேல் தேவன் தம் தூய, இனிய அன்பை அனுப்புகிறார். அது புறாவின் சிறகுகள் மேல், பரத்திலிருந்து வரும் ஓர் அடையாளம். உங்கள் தலைகள் வணங்கியிருக்கும் இந்நேரத்தில் உங்களை உங்கள்... சகோதரன் நோய்லிடம் ஒப்படைக்கிறேன்.